(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 09 - சகி

Uyiril kalantha urave

சென்ற இடத்தில் கால் தடம் தேடி...தேடிய வண்ணமே நகர்ந்துக் கொண்டிருக்கிறது பொழுது!!செய்த தவறுக்கான தண்டனை,இன்னும் எத்தனை காலங்களுக்கு!!அன்று செய்த ஒரு பாவம்,இன்றுவரை மரணத்தையும் தடுக்கிறது!உயிரையும் எடுக்கிறது!அவளது கண்ணீருக்கு தான் எவ்வளவு மதிப்பு?சற்றும் களங்கமில்லாதவள் அல்லவா!!அன்றே கூறினாள்,ஓர் நாள் தான் வணங்கும் இறைவன் தன் வேதனைக்காக வந்து நியாயம் கேட்பான் என்று!!ஆம்..!அவள் வாக்கு மெய்பித்துப் போனது.எந்தக் கரங்கள் கொண்டு அவள் வாழ்வை பொய்யாக்கி சிதைத்தேனோ!இன்று,அக்கரங்கள் செயலற்றுக் கிடக்கின்றன.எந்த நாவானது,அவளை இகழ்ந்ததோ!புனித அக்னியை காட்டிலும் பவித்ரமுடையவளை தூற்றிதோ!இன்று,அதே நாவானது அசைவற்றுக் கிடக்கின்றது.இல்லத்தில் பூஜிக்க வேண்டிய தெய்வத்தை தூக்கி வீசி எறிந்தேன்.இன்று????என்னற்ற எண்ணங்கள் புத்தியை மழுங்க செய்ய,அது சென்று இதயத்தில் செயல் திறனை பாதித்தது.குருதியின் வேகம் இதய செயல்பாட்டினை பாதிக்க,சில நொடிகளில் விழிகள் செருக ஆரம்பித்தது சூரிய நாராயணனுக்கு!!சுவாசத்தில் தடை ஏற்பட,தேகம் முழுவதும் ஒரு அசௌகரியம் படர்ந்தது.அவர் எதிரில் அலமாரியில் பிரகாசமாய் எரிந்துக் கொண்டிருந்த அத்தீப ஔி காற்றில் அசையும்படி போராடியது!!

"அண்ணா!நான் ஆபிஸ் கிளம்புறேன்ணா!"தமையனிடம் விடைப்பெற வந்தவர்,தற்செயலாக அத்தீபத்தை பார்த்தார்.

"ஐயோ!"ஓடி சென்று இரு கரங்கள் கொண்டு இறைவனது அத்தீபத்தை சீராக்கினார்.மனம் ஏதோ உணர்த்தியது!அல்லது,அத்தீப ஔிக்கு உரியவர் உணர்த்த வைத்திருக்கலாம்!!சந்தேகித்து தன் தமையனை கண்டவர் திடுக்கிட்டார்.

"அண்ணா!"-தமையனின் கோர நிலையை கண்டு பதறிக்கொண்டு அவரிடம் ஓடி வந்தார்.

"என்னண்ணா?என்னப் பண்ணது?-பதறிக்கொண்டு மருத்துவருக்கு அழைப்பு விடுத்தார் நவீன் குமார்.

"ஒண்ணுமில்லை...ஒண்ணுமில்லைண்ணா!"-தனக்கு தெரிந்த மருத்துவத்தை அவர் செய்துக் கொண்டிருக்க,பத்து நிமிடங்களில் ஓடி வந்தார் மருத்துவர்.

"என்னாச்சு நவீன்?"

"தெரியலை டாக்டர்!நான் வந்து பார்த்தப் போது இப்படி...!"தடுமாறியது அவர் குரல்.

"இருங்க...நான் பார்க்கிறேன்!"-அனைத்தும் ஒரு நொடி பரபரப்பானது...உடனடியாக துரிதப்படுத்தி,மருத்துவத்தை அவர் புரிய,அரை மணி நேரத்திற்குள் அனைத்தும் இயல்பானது!!

"பயப்படுற அளவு எதுவும் இல்லை நவீன்!பிரஷர் அதிகமாகிடுச்சு!மனக்கவலை தான்!இந்நேரம் நாங்க கொடுத்த ட்ரீட்மண்ட்க்கு அவர் பழைய மாதிரி ஆகி இருக்கணும்.ஆனா,ஏதோஒரு கவலை அவர் உடல்நலம் சீராகாமல் தடுக்குது!நாங்களும் முயற்சி செய்றோம்!விஷயம் விபரீதம் ஆகுறதுக்கு முன்னாடி அது என்னன்னு கண்டுப்பிடிங்க!"-என்று மருந்து மாத்திரைகளை அளித்துவிட்டு நகர்ந்தார்.சென்ற உயிர் திரும்பியது இளையவனுக்கு!!

"அண்ணா!என்னண்ணா?ஏன்ணா இப்படி பண்றீங்க?நடந்ததை இனி மாற்ற முடியாதுன்னு தெரியும்ல!ஏன்ணா உங்களை நீங்களே வருத்திக்கிறீங்க?"

"............."

"அவங்க உயிரோட இருக்காங்களான்னு கூட தெரியலைண்ணா!"நாராயணனின் விழிகள் அகன்றன.

"மன்னிச்சிடுங்கண்ணா!நீங்க ரெஸ்ட் எடுங்க!நான் இங்கேயே இருக்கேன்!"-இளவலின் துணை இருக்க,விழிகள் அயர்ந்து கண் மூடினார் நாராயணன்.எத்தனை காலங்களுக்கு???

னது முன் விரிக்கப்பட்டிருந்த கோப்பினை இருமுறை நன்றாக படித்தவன்,அதை தூரமாக தூக்கி வைத்தான்.

"சார்!அந்தப் பைல் எஸ்.என்.சார் மகனுடையது!!"ராகமாக வலித்தார் அவனது உதவியாளர்.

"இந்தப் பிராப்பர்டியை வாங்கினவன்,விற்றவன் இரண்டு பேர் மேலும் உடனடியாக கேஸ் ஃப்பைல் பண்ணுங்க!"

"சார்??"

"இது கவர்மண்ட்டோட நிலம்!எந்தத் தைரியத்துல இந்தப் பைலை என்கிட்ட கொண்டு வந்தீங்க?"

"சார்!அவங்க பெரிய இடம்!"

"அவன் எவ்வளவு பெரிய ஆளா இருக்கட்டும்!இங்கே நான் தான் கலெக்டர்!நடக்கிறதை நான் பார்த்துக்கிறேன்.நீங்க நான் சொன்னதை செய்யுங்க!"

"சார்!"

"நீங்க செய்றீங்களா?நான் செய்யட்டுமா?"உறுதியாக அவன் உரைக்க,மறுபேச்சு எழவில்லை.பணியின் காலமும் முடிந்திருக்க,எழுந்து இல்லத்திற்கு கிளம்பினான் அசோக்.

மனம் முழுதும் சினம் பொங்கி வழிந்துக் கொண்டிருந்தது.எவன் வீட்டு பொருளை எவன் பங்கிடுவது??மனம் முழுதும் கொதிப்படைய வந்து சேர்ந்தான் அவன்!!

"சார்!காலையில எப்போ வரணும்?"

"எட்டு மணிக்கு வாங்க!"என்று கூறிவிட்டு தன் இல்லத்துள் நுழைந்தான் அவன்.

"வாங்க தம்பி!"

"அண்ணே!பயங்கரமா தலைவலிக்குது!கொஞ்சம் காபி எடுத்துட்டு வாங்க!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.