(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 10 - சகி

Uyiril kalantha urave

ண்கள் எங்கோ வெறித்திருக்க,மனம் சிந்தனை ஓட்டத்தில் நிலைக்கொள்ளாமல் தவித்தது அவருக்கு!!தேகத்தின் அங்கங்கள் செயலிழந்த வேளையில்,அனைத்திற்கும் ஒருவரது துணை நாட வேண்டியுள்ளது.

'அன்று நான் செய்த பாவத்தின் பலன்!இன்று என்னிடத்தில்.!'தவித்தது அவர் மனம்.

'அவளை நான் உபயோகப்படுத்தினேன்!என்னிடம் நீதிக் கேட்கையில் கேளிக்கை செய்தேன்!எவ்வளவு துயர் கொண்டிருப்பாள் அவள்??இன்று அவளிருந்திருந்தாள் இந்நிலை எனக்கில்லை.என் இன்பத்திலும்,துன்பத்திலும் என்னைத் தாங்கி இருப்பாள் அவள்!'உண்மையில் மரணம் எதிர்நோக்கி தகித்த உள்ளம் வெதும்ப தான் செய்தது.

அவரது விழிகள் சிரமப்பட்டு தனது இடப்பக்க சுவரில் மாட்டப்பட்டிருந்ந ஓவியமான புகைப்படத்தை தரிசித்தது.யார் அவர்??வருடங்களாய் படும் துயரின் மருந்தாய் இருந்த ஒரே முகம்..!அன்பென்னும் ஊற்றை கொண்டு அகந்தை அழிந்தவள்.வாழ்வியலின் உயிரோட்டமாய்,உயிர் வாழ ஒரே காரணமாய் அமைந்த ஒரு தேடல்!!இன்றளவும் இம்முகத்தை நேரில் காணவே தவமிருக்கிறார்.யார் அந்த ஓவியம்?முட்களுக்கு நடுவே முளைத்த மலராய் சிரித்த முகம் கொண்டு வரவேற்றார் தர்மா!!!

தாயின் முகம் காண்கையில் எவ்வளவு ஆறுதல் இந்த இதயத்திற்கு!!தெய்வீகம் பொருந்திய அந்த முகத்திற்குள் வலி களையும் மாமருந்தை இறைவன் ஔித்து வைத்திருக்கிறான் போலும்!!நீண்ட நேரமாய் தரையில் அமர்ந்து ஔிர்ந்துக் கொண்டிருந்த அன்னையின் முகத்தையே ஏக்கம் கலந்த புன்னகையுடன் தரிசித்துக் கொண்டிருந்தான் அசோக்.எதிர்பாரா பிரிவு..!!இத்தனை வருட வாழ்வினில் தனி ஒருவராய் சீராட்டி,போராடி வளர்த்தவர் இன்று உயிருடன் இல்லை.தனது பிறப்பின் இரகசியத்தை இறுதிவரை இரகசியமாய் மட்டுமே வைத்திருந்தார்.எனினும்,தன் கடந்த காலம் குறித்து ஒரு குறையும் அவர் கூறியதுமில்லை.தந்தையின் அன்பிற்காக அவன் ஏங்காமல் இல்லை.பாச வரலாற்றில் ஒரு தந்தையின் அன்பையும் இத்தாயின் நேசம் வென்று காட்டியது.எவரையும் நம்பாதே என்று போதிக்கவில்லை.எவரிடமும் எதிர்நோக்காதே என்று போதித்தார்.நாடி வருவோரை உயிர் ஈந்தேனும் காக்க ஆணையிட்டார்.அவரை காக்க வைத்த விண்ணப்பத்தை மட்டும் நிராகரித்து சென்றுவிட்டார்.எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தவனிடமிருந்து கசந்தப் புன்னகை வெளியானது,கண்ணீருடன் சேர்ந்தே!!

கடந்த காலத்தில் தத்தளித்தவனின் கவனத்தை ஈர்த்தது அவன்  கைப்பேசி!!!

"அசோக் குமார்!"என்றான் உறுதியுடன்!!சில நொடிகள் நிசப்தம் நிலவியது!!

இவனிடமும் மௌனம்!!

"நீதான் அந்த கலெக்டரா?"என்றது மறுமுனை.இவன் பதிலளிக்கவில்லை.

"எங்க வீட்டுப் பையன் மேலே கவர்மண்ட் இடத்தை கைப்பற்ற சொல்லிருக்கான்னு சொல்லி கேஸ் போட்டவன் நீதானா?"

"................"

"மரியாதையா விலகிவிடு!முதல் சந்திப்பில் என்கிட்ட நல்ல எண்ணத்தை சம்பாதிச்சிட்ட!அதனால தான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.இல்லைன்னா..."

"என்னப் பண்ணிருப்பீங்க?"-கர்வத்துடன் ஒலித்தது இவன் குரல்.

"உன்னை புதைத்த இடத்துல புல் முளைத்திருக்கும்!"அப்பதில் கேட்டது அவன் மனம் கட்டுப்படுத்திய சினமெல்லாம் கரை தாண்டியது.

"உங்களால அது முடியும்னா செய்து காட்டுங்க!"

"ஏ...!நான் யாருன்னு தெரியாம பேசிட்டு இருக்க!"

"உஷ்...!நீங்க யாராக வேணும்னாலும் இருந்துட்டு போங்க!வயசுக்கு மரியாதை கொடுத்து பொறுமையா பேசுறேன்.அன்னிக்கு நான் என்ன உங்கக்கிட்ட நல்ல பெயரை எடுக்கவா உங்க வீட்டு வாசலை மிதித்தேன்?யார் நீங்க எனக்கு?இந்த வசனம் எல்லாம் உங்க சுண்டு விரல் அசைவுக்கு கட்டுப்படுறவன்கிட்ட வைத்துக்கோங்க!நான் ஏறி மிதித்து போயிட்டே இருப்பேன்."

"அசோக்.!"

"உஷ்...!என்கிட்ட உங்க திமிரை காட்டினால்,பாதிக்கப்பட போறவன் உங்க பையன் தான்..ஜாக்கிரதை!ம்...சூரிய நாராயணன் பையன் தானே அவன்!கேள்விப்பட்டிருக்கேன்...செய்யாத தப்பெல்லாம் செய்து வாழுறவர் தானே அவரும்!அதே இரத்தம்னு இவனும் நிரூபிக்கிறான்!"-ஏளன குரல் ஒலித்தது.

"வேணாம் அசோக்!வரம்பு மீறாதே!"

"உண்மையிலே நெஞ்சுல தைரியம் இருந்தா,நேர்ல வந்து மிரட்டு!"என்றவன் இணைப்பைத் துண்டித்தான்.

ஆண்டுகளுக்குப் பின் உடைப்பட இருந்த இரகசியம்,பகை என்ற அஸ்திரத்தால் தன்னை பாதுகாத்துக் கொண்டது.

கண்கள் சிவந்திருந்த நிலையில் நிலைக்கொள்ளாமல் தகித்த மனம்,தாயின் முகத்தை நாடியது.எக்கவலையுமின்றி தவழ்ந்த அப்புன்னகையை அவர் அடைய அவன் தவம் செய்யாத நாளில்லை!!மிகுந்த முதிர்ச்சி தென்படும் அவரது மொழிகளில்!!மென்மையாக உரையாடுவார்.அவர் உரை கேட்கையில் கரைந்துப் போகும் கேட்பவர் மனம்!!எப்போதும் அமைதியுடனே இருப்பார்.அவருக்கு ஆரவாரம் பிடிக்காது!!மடிமீது துயிலும் நாட்ஙளில் மனம் தன்னையே மறந்துப் போகும் அவனுக்கு!!அன்றும்,அவர் முகம் பார்த்த மாத்திரத்திலே அனைத்து சினமும் ஓடியொளிந்தது ஆதவ ஔிப்பட்ட பனித்துளியாய்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.