"மன்னித்துவிடுங்கம்மா!உங்க முன்னாடியே கோபமா பேசிட்டேன்!"மனதார மன்னிப்பை வேண்டினான் அவன்.
என் செய்வான்??அவன் அறிந்திருக்கவில்லை...விதியாடும் விளையாட்டு அவன் நிஜத்தையே அவனுக்கு எதிராய் திருப்பும் என்று!!!
"எவ்வளவு தைரியமிருந்தா என் பையன் மேலே கேஸ் போட்டிருப்பான்??"-தன் இடக்காலின் மேல் வலக்காலை போட்டப்படி விழிகள் குரோதத்தில் நிரம்ப கத்தினார் மதுமதி.
"அண்ணி!அதான் போலீஸ் அதர்வ்வை அரஸ்ட் பண்ணலையே!"
"ஏன் அது வேற நடக்குமா???"வெடித்து சிதறியது அவர் குரல்.
"என்ன பண்ணிட்டு இருக்க குமார் நீ??அதர்வ் மேலே ஊர் பெயர் தெரியாத ஒருத்தன் கேஸ் போடுவான்.நீ வேடிக்கை பார்ப்பியா?அவன் இந்த சாம்ராஜ்ஜியத்துக்கே சக்கரவர்த்தி!அவனை அவமானப்படுத்த அந்தக் கலெக்ட்ருக்கு எப்படி துணிச்சல் வந்துச்சு?"கொந்தளித்தார் அவர்.
"24 மணி நேரத்துல கேஸ் வாபஸ் வாங்கணும்!இல்லை...அந்த அசோக் குமார் உயிரோட இருக்கக்கூடாது!!"
"அண்ணி??"-ஏனோ மனம் பதைத்தது நவீன் குமாருக்கு!!!
"சொன்னதை செய் நவீன்!!இல்லை...விஷயம் விபரீதமாகிடும்!"-தன் விரலை சொடுக்கினார் மதுமதி.
உண்மையில் ஒரு சங்கடமான நிலை இது!!ஒரு காலத்தில் எவரும் அவர் முன்னே குரல் உயர்த்தியதுமில்லை.இன்று சொந்த வீட்டில் அடிமை வாசம்!தமையன் ஆற்றிய தவறுக்கு தம்பியும் தண்டனை அடைகிறான்.உடந்தையானான் அல்லவா???எழுந்த கோபத்தை முழுதும் அடக்கி,மௌனமாக தன் தமையனின் அறைக்கு சென்றார்.சரீரம் உறங்கி மனம் உறங்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் தன் தமையனை கண்ணீருடன் தரிசித்தார்.
"அவசரப்பட்டுட்டீங்கண்ணா!"என்றார் மெல்லியக்குரலில்!!
கண்களை துடைத்தவண்ணம் திரும்பியவரை புன்னகையுடன் வரவேற்றார் தர்மா!!!மனம் சுக்கலாய் உடைந்து சிதறியது!!!அப்புகைப்படத்தின் அருகே சென்றவர்,கரம் கூப்பி நின்றார்.
"அண்ணி!நீங்க எங்கே இருக்கீங்க!என்ன பண்றீங்கன்னு எதுவும் தெரியாது!ஆனா,இது உங்க இடம் அண்ணி!அன்னிக்கு அப்படி நடக்காம இருந்திருந்தா,என் அண்ணன் தன்னுடைய அகங்காரத்தால அப்படி ஒரு காரியம் பண்ணாம இருந்தா,இந்த வம்சமே தலைகுனிந்திருக்காது!அந்தப் பையன் யார் என்னன்னு தெரியலை.ஆனா அவன் பின்வாங்கமாட்டான்னு தெரியுது!என்ன நடக்கப் போகுதுன்னு புரியலை.வேற வழியே இல்லை!அவன் வீட்டுக்கு தான் போய் பேசணும்!அவன் மனசு மாறணும்!எதாவது ஒரு மாற்றம் வரணும்!எனக்காக வேண்டிக்கோங்க அண்ணி!"மனமுடைந்தார் அவர்.தர்மாவிடமிருந்து ஒரு கர்வப்புன்னகையே விடையாக வந்தது.
"அதர்வ் விஷயத்துல ஏன் ஆக்ஷன் எடுக்கலை?"
"சார்!அவங்க பெரிய இடம்!விஷயம் விபரீதமாக போகுது சார்!"அச்சத்துடன் பேசினார் அந்த ஆய்வாளர்.
"24 மணிநேரம் டைம் தரேன்!இதுக்கான ஆக்ஷன் எடுங்க!இல்லை...நான் எடுப்பேன்!"
"சார்..!!!"
"போங்க!"என்றான் சற்றே உறுதியுடன்!!!
"எஸ் சார்!"மௌனமாக அவர் வெளியேற,உள்ளே நுழைந்தான் ஒரு வாலிபன்.
"வா ரிஷி!என்னாச்சு?"
"சார் நீங்க சொன்ன மாதிரி மேடமுக்கு வந்த லாஸ்ட் 2 டேஸ் காலை டிரேஸ் பண்ணேன்!அவங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது இருபது முறை ஒரு ப்ரைவட் நம்பர்ல இருந்து கால் வருது!!இது அந்த கால் ரெக்கார்ட்!"ஒரு பென்டிரைவ்வை நீட்டினான் அவன்.
"இது அவனுடைய ஐடின்டிட்டி!!"என்று கவரை நீட்டினான்.
"தேங்க்ஸ் ரிஷி!நான் பார்த்துக்கிறேன்!"
"தேங்க்யூ சார்!"புன்னகையுடன் வழியனுப்பினான் அசோக்.
அவன் சென்ற சில நிமிடம் கழித்து அந்த பென்டிரவ்வை ஒலிக்க விட்டான்.அதிலிருந்து ஒலித்த வசனங்கள் அவன் நாடி நரம்பெங்கும் ஓடிய செங்குருதியை கொதிக்க வைத்தது.அக்குரலுக்கு உரியவன் வரம்பு மீறி வார்த்தைகள் விடுவதும்,சிவன்யாவின் அழுகுரலும் அவனை கொந்தளிக்க வைத்தன.பரபரப்புடன் அந்த கவரைப் பிரித்தான்.பிரித்துப் பார்த்தவன் உடனடியாக எழுந்தான்,எதையும் கவனிப்பதாக இல்லை அவன் மனம்!!!
"இவனா?"-உடலெல்லாம் பரவிய ரௌத்திரம்,புத்தியை ஒரு நொடி சிந்திக்க மறக்க செய்து,அவனை எல்லை மீற வைத்தது.
காவலரிடம் 24 மணிநேரம் அவகாசமளித்தவன்,உடனடியாக அவனை கைது செய்ய ஆணைப்பிறப்பித்தான்.ஆம்...!அவன் அதர்வ் சூரிய நாராயணன்.
"முழுசா அரை மணி நேரத்துல அவன் என் கண் முன்னாடி நிற்கணும்!திஸ் இஸ் மை ஆர்டர்!"-'பட்'என தொலைப்பேசியை வைத்தான்.
விதியாடும் விளையாட்டில் சதி வலையில் வீழாதார் தான் யார்???