இளவலின் தீங்கெண்ணத்தால்,நெறி மறந்த தமையனின் தாண்டவம்...அவன் இரகசியத்தை உலகுக்கு உடைக்கும் பணியை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது!!
மதுமதி இல்லம்....
தன் ஆன்றோர்,சான்றோரின் உழைப்பினால் உருவாக்கப்பட்ட மாபெரும் இல்லத்தை முழுதுமாக தன் மனையாளுக்கு தாரை வார்த்திருந்தார் சூரிய நாராயணன்.
ஆணவமாய்,கர்வத்துடன் சோபாவில் அமர்ந்து தன் பாதத்தை எதிரிலிருந்த மேசையில் மதுமதி நீட்டியிருக்க,அவர் பாதங்களை பிடித்துவிட்டிருந்தாள் ஒரு இளம்பெண்.
"அதர்வ்!எங்கே??"-என்றார் திமிருடன்!
"அவங்க ரூம்ல இருக்காங்கம்மா!"-அச்சத்துடன் ஒலித்தது அப்பெண்ணின் குரல்!!!சில நொடிகள் கனத்த மௌனம்!!!பின் தன் கைப்பேசியை எடுத்து,சில நொடிகள் மௌனமானவர்,
"கீழே வா!"என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.
'கீழே வா!'என்ற அழைப்பு அப்பெண்ணிடத்தே கிலியை பரவ வைத்தது.சில நொடிகள் கடந்திருக்கலாம்!உறுதியாக காலடி சப்தம் அவள் அச்சத்தை வலுப்படுத்தியது.
"மா!"என்றப்படி தாயின் அருகே அமர்ந்தான் அவன்.
"நவீன் ஏதாவது சொன்னானா?"
"மா!விடு!அந்தக் கலெக்டர் எல்லாம் நேற்று வந்தவன்,அவனுக்கு நீ இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் தராதே!!"
"நேற்று வந்தவன் தான் இன்னிக்கு இந்த மதுமதியோட மகன் மேலே கேஸ் போட்டிருக்கான்.அவனை இப்படியே விடக்கூடாது!"-அவர் பேச பேச அவன் கவனமோ எதிரிலிருந்த கன்னிகையை மொய்த்தது.அவன் விழிச்சென்ற இடம் உணர்ந்தவள் குறுகிப்போனாள்.
"அதர்வ்!"
"ம்??"
"நான் பேசுறதை கவனிக்கிறீயா?"
"நீ கவலைப்படாதே!அவனை நான் பார்த்துக்கிறேன்!"-பார்வையை விலக்காமலே கூறினான்.
"மேடம்!"-மூவரின் கவனத்தையும் ஈர்த்தது அக்குரல்.
"இன்ஸ்பெக்டரா??!"காவல்துறை உடையில் வந்தோரை கண்டு எழுந்தனர் மூவரும்!!
"வாங்க!என்ன விஷயம்?"
"அதர்வ் சாரை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்!"-தூக்கிவாரிப் போட்டது அவர் பதில்!!!
"என்ன தைரியம் உனக்கு?என் வீட்டுக்கு வந்து என் பையனை அரஸ்ட் பண்ணணும்னு சொல்லுவ?"
"ஸாரி மேடம்!எங்கக்கிட்ட வாரண்ட் இருக்கு!!"என்று ஒரு காகிதத்தை காட்டினார்.
"யூ ராஸ்கல்!"-தனக்கு சரி சமமாய் பேசிய ஆய்வாளரை ஓங்கி அறைந்தார் மதுமதி.
நிகழ்ந்த அந்நிகழ்வு புரிய சில நொடிகள் பிடித்தது அனைவருக்கும்!!!
"வெளியே போ!இல்லை கொன்னு புதைத்திடுவேன்!"-நிலைகுலைந்தவர் தடுமாறியப்படி வெளியேறினார்.
ஐந்து நிமிடம் தான்....முழுதாக ஐந்தே நிமிடம் தான் எடுத்தது இந்நிகழ்வு அசோக்கிற்கு செல்ல!எரியும் அவன் குரோதத்தில் எண்ணெய் வார்த்தது அந்நிகழ்வு!!!எழுந்தான் அவன் தன் இருக்கை விடுத்து!உதவிக்கு ஓட்டுநரை அழைக்கவில்லை,எவரையும் அழைக்கவில்லை.அவன் பாதை நீண்டு,பிரம்மாண்டமாய் எழுந்த அவ்வில்லத்தின் முன் நின்றது.இரண்டாம் முறை தடம் பதிக்கிறான்.இம்முறை அவன் சுயரூபம் முழுதாக வெளிப்பட்டிருந்தது!அதே இரத்தமல்லவா!!குரோதமும் இருக்கும்.அவனது விஜயம் அங்கிருந்தோரை ஆழ்ந்த வினாவுக்குள் தள்ளியது.
விழிகள் சிவந்திருக்க,அங்கிருப்போருக்கு காலனாய் உள் நுழைந்தவன்,அதர்வ்வின் கரங்களை அழுந்தப்பற்றியவன் அவனை இழுத்துக் கொண்டு நடந்தான்.
"ஏ...கையை எடுடா!"-காவலுக்கு வந்தாள் அவன் அன்னை!!!
"உஷ்...!"-தன் இதழ் மீது ஆள்காட்டி விரலை அழுந்த வைத்தான் அசோக்.
"ஒரு வார்த்தை பேசுனாலும் உன் பையன் பிணமா தான் என் கூட ஸ்டேஷன் வருவான் ஜாக்கிரதை!"-அன்றுவரை பெண்கள் முன் அவன் குரல் உயர்த்தியதில்லை.ஏனோ அவ்வில்லம்,அப்பெண்,அந்தச் சூழல் அவனது உதிரத்தை கொதிக்க வைத்தது.
"வாடா!"-ஏதோ ஒரு விலங்கை இழுத்து செல்பவனாய் அவனை இழுத்துச் சென்றான் அசோக்.விலங்கு தானே மனித தோல் போர்த்தப்பட்ட விலங்கல்லவா இங்குப் பலரும்!!!!
தொடரும்!
{kunena_discuss:1149}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.