(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 11 - சகி

Uyiril kalantha urave

ரு தினங்களாய் சீர்கெடுத்த உடல்நல கேடு,தலையில் ஏதோ பாரத்தை வைத்து அழுத்தியதாக ஒரு உணர்வு!!!பார்வையால் எரித்தல் என்பார்கள்...அசோக்கின் உடல் இருந்த உஷ்ணத்தில் உண்மையில் எதிர்வருபவரை அவர் எரித்திடுவான் போலும்!!!உடல் முழுதும் படர்ந்த சோர்வு உள்ளத்தையும் தளர வைத்தது.உறக்கமும் வராமல் உண்ணவும் இயலாமல் விழிகளை தைத்துவிட்டதாய் ஒரு உணர்வு!!இரு தினங்களாய் பணிக்கு செல்லாமல் மருத்துவ விடுப்பு ஏற்றிருந்தான் அவன்!!உதகையின் தோஷனநிலை அவனுக்கும் தோஷத்தைப் பீடிக்க வைத்தது.

"தம்பி!எழுந்து கொஞ்சமாவது சாப்பிடுப்பா!"அவன் மேல் அக்கறை கொண்டு அவனுடன் இருந்த அந்த ஒரு ஜீவனுக்கும் பதிலளிக்க இயலாமல் படுத்திருந்தான் அவன்.சில நொடிகளில் அக்குரலும் ஒலிக்கவில்லை.மனம் ஏனோ இரணமாகிப் போனது.

என்றோ ஒரு நாள் இதைப்போல் வாட்டி வதைத்த துயரை போக்கிய தாயின் அருகாமையை நினைவுப்படுத்தியது அவன் மனம்!!!அன்று அவர் இருந்தார்.அவனுக்கு ஒன்று என்றால் மனதில் எழும் அச்சத்தை அவர் என்றும் வெளியிட்டதில்லை,அது அவனை பலவீனப்படுத்தும் என்ற அச்சம் அவருக்கு!!பொறுமையாக கையாளுவார்!தலை கோதி,நெற்றியில் இதழ் பதித்து,தைரியம் ஊட்டி,அன்புடன் அவனுக்கு உணவை வார்த்து,தானறிந்த மருந்து ஒன்றை வீட்டிலே தயாரித்தளிப்பார்.அன்று அவர்கள் வசித்ததோ குடிசை வீட்டில்!!ஆனால்,அன்று அந்தத் தாய்மடி ஈந்த சுகத்தை இன்று விலையுயர்ந்த பஞ்சு மெத்தைகள் கொடுக்கவில்லை.

அவர் கரத்தால் அளிக்கும்பட்சம் மருந்தும் தேனாய் தித்தித்தது.இன்று,உயர்தர மருந்துவரின் பரிச்சயம் உள்ளபோதிலும் அதில் நாட்டமில்லை!!எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும் மீண்டும் கிட்டுமா அந்தத் தாய்மடி???தனக்கு அப்படியொரு குறை இருந்ததை அவர் முன்னரே உரைத்திருந்தால்,இந்நேரம் அவர் மகாராணியாய் வாழ்ந்திருப்பார்!!!அவர்பட்ட துயரங்களை ஆயுள் முழுதும் துடைக்க வேண்டும் என்பது அவன் விருப்பம்!!ஆனால்,அவர் அளித்த அவகாசமோ வெறும் ஆறு திங்கள்!!அவன் ஆட்சியாளரான ஆறாவது மாதம்,இனி தேவையில்லை தன் உதவி இவனுக்கு என்ற எண்ணங்கொண்டு அவர் விருப்பமான இறைவனிடம் சென்றுவிட்டார்.மகன் கவனித்துக் கொள்ளமாட்டான் என்ற எண்ணம் போலும்!!உதிரத்தை ஊற்றெடுக்க வைத்து,சுமந்த அன்னையை அநாதையாய் தவிக்கவிடும் எந்த இனத்தில் சேர்ப்பது என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கும் சில கீழான நல்லோர்களை போலும் மகனும் தவிக்கவிடுவானோ என்ற அச்சம் தான் போலும்!!இல்லையேல்,விண்ணுலகம் ஆள்பவனுக்கு என் அன்னையைக் கண்டு அவருக்கு புதல்வனாய் உருமாறி பணிச்செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டிருக்கலாம்!!தர்மத்திற்கே தர்மம் போதிப்பவராயிற்றே!!அதனாலோ,அன்னையை சகல மரியாதையுடன் அழைத்துச் சென்றிருக்கலாம்!!மொத்தத்தில்,அவர் என்னுடன் இல்லை!இதுவே நிதர்சனம்!!!கண்ணீர் உருப்பெடுத்து கண்களில் இருந்து கரைப்புரண்டு ஓட ஆரம்பித்தது!!வெண்ணிற தலையணை எங்கும் துளித்துளியாய் கண்ணீர்த்திவலைகள் சிந்தத் தொடங்கின!!

எவ்வளவு நேரம் அழுதிருப்பானோ!உடல் புதியதாய் ஒரு ஸ்பரிசத்தை உணரும்வரை அவன் கண்ணீர் நீடித்தது.யாரோ தலைகோதும் ஓர் உணர்வு!மெல்லிய விரல்கள் அவன் கேசத்துள் ஊடுருவும் ஆறுதல்!!விழி திறவாமல் சயனத்திருந்தான்.மென்மையான அக்கரம் அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தது.

"தம்பி 2 நாளா சரியாவே சாப்பிடலைம்மா!அதான் உங்களுக்கு போன் பண்ணேன்!"அக்கறை கலந்த கலவையுடன் கூற மொழிகள்,அவள் மனதை ஆழமாய் காயப்படுத்தின.

"என் நினைவு இவருக்கு வரவில்லையா?என்னிடம் கூற வேண்டும் என்ற எண்ணம் உதிக்கவில்லையா?"-வினவியது அவள் மனம்.

"நான் பார்த்துக்கிறேன்!"-என்றாள் கசந்தப்புன்னகையுடன்!!!சில நொடிகள் கழித்து கிட்டியது ஓர் தனிமை!!அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணினாள் போலும்,மென்மையாக அவன் அருகே அமர்ந்து,அவன் மார்பில் சாய்ந்தாள் சிவன்யா.சட்டென கலங்கின விழிகள்!!நெற்றியில் படர்ந்திருந்த அவன் கேசத்தை விலக்கியவள்,அவள் நெற்றியில் இதழ் பதித்தாள்.என்ன நினைத்தாளோ சட்டென அவனை விலகி,கண்களைத் துடைத்துக் கொண்டாள்.ஏதும் பேசாமல் எழுந்தவள்,சில நொடிகள் அவனை உற்று நோக்கி,அவ்வறையை தியாகித்து வெளியேறினாள்.அறை கதவு மூடப்பட்ட ஓசை கேட்டதும்,விழி திறந்தான் அசோக்.மனம் ஏனோ குத்தியது!!!சில நிமிடங்கள் கடந்திருக்கலாம்!மீண்டும் அறைக்கதவை திறந்து வந்தாள் சிவன்யா.கரத்தில் அவனுக்காக ஏதோ சிலவற்றை கொணர்ந்தாள்.

"அசோக்!"

"................"

"அசோக்!"-மென்மையாக அவனை எழுப்பினாள்.அப்போது தான் கண்விழிப்பதாய் விழித்தான் அவன்.

"எழுந்து இதை குடிங்க!"

"என்ன?"

"எழுந்துக்கோங்க!"-அவள் வார்த்தைக்கு கட்டுண்டு எழுந்தான் அசோக்.

"நான் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்மா!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.