(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - அன்பின் அழகே - 04 - ஸ்ரீ

anbin Azhage

ஏதோ ஒன்றை நான் உன்னில் கண்டேன்

எரியும் தீயை நான் என்னில் கண்டேன்

உயிரின் உயிராய் உன்னை கண்டேன்

என்னை அள்ளி உன் கையில் தந்தேன்

காதல் கொண்டு கண்கள் கெஞ்ச

அடி கை மீறி உயிர் ஓடுதே

 

முழுதா நிலவு நம்மை பார்க்க

காற்றில் எங்கும் அது மாயம் சேர்க்க

கைகள் கோர்த்து நீ வெப்பம் சேர்க்க

வெட்கம் தாண்டி நான் என்னை தோற்க்க

மரணம் தாண்டி வாழும் காதல்

உன் விழியோரம் நான் காண்கிறேன்

 

உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி

நீராவியாய் என்னை நீ மோதினாய்

உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்

நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்

ந்த அழகிய பீச் ரெசார்ட் லானில் மிக நேர்த்தியான முறையில் மணமேடை அமைக்கப் பட்டிருக்க விருந்தினர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.மாலை வேளைதான் முகூர்த்தம் வேண்டுமென அபினவ் கண்டிப்பாய் கூறிவிட மாலை 6:45 மணிக்கு முகூர்த்தம் என முடிவு செய்தனர்.

வண்ண வண்ண விளக்குகளும் மலர்களின் வாசமும் கடல் அலையின் சத்தமுமாய் இதை விட ரம்மியமான திருமணத்தை யாரும் நினைத்திட முடியுமா என்ன..

அழகிய பட்டு வேட்டி சட்டையில் அழகிய ரோஜா மாலையோடு அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை கூறிக் கொண்டிருந்தவனின் கண்களோ தன்னவளைத் தேடித்தான் இருந்தது.அவள் இறுதியாய் அவனிடம் பேசிய வார்த்தைகள் இன்னமும் அவன் செவிப்பறையில் சில்லென்ற குளிர்காற்றாய் சுழன்று கொண்டுதான் இருந்தது.

வரதட்சனைக்கான அவனின் விளக்கத்தை கேட்டவள் அடுத்து வந்த தினங்களில் அவனின் மெசேஜிற்கோ அழைப்பிற்கோ பதில் அளிக்கவேயில்லை.அவள் செயலில் சற்றே எரிச்சலடைந்தவன் நான்கு தினம் கழித்து அவளை சந்திக்க வீட்டிற்கே வந்துவிட்டான்.

அவள் மட்டுமே வீட்டிலிருக்க இவனை சற்றும் எதிர்பார்க்காமல் என்ன செய்வதென தெரியாமல் உள்ளே அழைத்து அமரச் செய்தாள்.

“சோ வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?”

அவளிடம் அமைதி மட்டுமே..

“இப்போ என்ன பிரச்சனை உனக்கு ஏன் பேசாம அவாய்ட் பண்ற?எதாவது சொன்னாதான தெரியும்?தப்பே பண்ணாம எதுக்கு எனக்கு இந்த தண்டனைனு புரில?இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும்”

“நீங்க தப்பு பண்ணதா நா சொல்லலையே!”

“ப்பா க்ரேட் அதாவது தெரியுதே அது வர சந்தோஷம்..சரி சொல்லு என்னாச்சு?”

“ஒண்ணுமில்லையே”

“ஓ காட்..என்னனு சொன்னா தான் அடுத்தத பத்தி யோசிக்க முடியும்..இப்போ இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பமா இல்லையா அதையாவது சொல்லு..”

“ககல்யாணம் வேண்டாம்னா எப்பவோ வேண்டாம்னு நேரடியா சொல்லிருப்பேன்..எனக்கு இதெல்லாமே புதுசா இருக்கு..உங்களோட கடைசி மெசேஜ் பாத்த அப்பறம் எனக்கு என்ன பேசுறதுனு கூட புரில.ஆண்கள் இந்த வார்த்தைக்கான அர்த்தம் இத்தனை நாளில் என் அகராதியிலே வேற.ஆனா நீங்க அதை மாத்தி எழுத்திட்டு இருக்கீங்க..சோ என் வாழ்க்கை கல்யாணம் இரண்டையுமே உங்க பொறுப்புல விட்டுட்டேன்..என் அம்மா சந்தோஷமா இருந்து முதல் தடவை பாக்குறேன்.அதற்கான மொத்த காரணமும் நீங்க மட்டும் தான்.

அதனாலேயே நா உங்களை முழுசா  நம்புறேன்.எனக்கான சாரி..நமக்கான வாழ்க்கையை நம்ம கல்யாணத்திலிருந்து ஆரம்பிக்கலாம்னு தோணுது.இன்னும்  இரண்டு வாரம் திஷானினு ஒருத்திய பார்க்கவே இல்லனு நினைச்சுகோங்க..இந்த இடைப்பட்ட நேரத்துல என் மனசை முடிஞ்ச அளவு நா பக்குவபடுத்தி கல்யாண வாழ்க்கைக்கு தயாராகிருவேன்.ஐ ப்ராமிஸ் யூ..ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் மை பீலிங்க்ஸ்..”

உதட்டோர புன்னகையோடு இருக்கையிலிருந்து எழுந்தவன் அவளருகில் வந்து,”இப்போ தெரியுதா எனக்கு ஏன் உன்னை பிடிச்சுதுனு..இந்த தெளிவு எல்லாருக்கும் இருக்குறதில்ல..எனிவே தேங்க்ஸ் பார் ட்ரஸ்டிங் மீ..கல்யாணத்துல மீட் பண்ணலாம்..பை..டேக் கேர்..”,என கண்சிமிட்டிச் சென்றான்.

அவன் கற்பனையிலிருந்து வெளிவரவும் மணமகள் மேடைக்கு வரவும் சரியாய் இருந்தது.அவன் தேர்ந்தெடுத்த பட்டுப் புடவை தான் ஆனால் இன்னும் அழகாய் தோன்றியது இப்போது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.