(Reading time: 10 - 19 minutes)

அழகான ஐவோரி நிற காஞ்சிப் பட்டில் தங்கநிற பார்டர் கலந்திருக்க அதற்கேற்றாற் போன்று முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ப்ளவுஸும் தங்க நிற வெட்டிங் ஜீவல்லரியும் அடர் சிவப்பு நிற ரோஜா மாலையுமாய் வந்தவளிடம் குறையென்ற ஒன்றே தோன்றவில்லை அவனுக்கு.

அளவான ஒப்பனையும் நிறைய பதட்டமும் சிறு வெட்கமுமாய் கம்பீரமாய் தெரிந்தாள் பெண்ணவள்.அவனருகில் அவள் வந்த நொடி சற்றும் யோசிக்காமல் எழுந்தவன் தன்னவளை கரம்பிடித்து மெதுவாய் அமர வைத்து பின் அவளருகில் அமர்ந்தான்.லேசாய் முகம் திருப்பி தன்னை பார்த்தவளை கண்டு கண்ணடீத்து அவன் சிரிக்க சட்டென முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ஐயர் திருமாங்கல்யத்தை அபினவிடம் கொடுக்க மேள வாத்தியங்கள் முழங்க அதை கையில் வாங்கியவன்,தன்னவளின் கழுத்தருகில் கொண்டு சென்று அவள் கழுத்தில் அணிவிக்காமல் இருக்க பதட்டமாய்அவனை ஏறிட்டவளிடம்,

“மே ஐ??”,என மெதுவாய் கேட்க முகம் கொள்ளா மகிழ்ச்சி இதழோர புன்னகையாய் வெளிப்பட சம்மதமென தலையசைத்தாள்.மூன்று முடிச்சுகளையும் தானே போட வேண்டுமென மற்றவர்களை கை சாடை காட்டி நிறுத்த அங்கு எழுந்த சிரிப்பலையில் பெண்ணவளுக்கோ இன்னமும் ஒரு மாதிரியாய் ஆகிப் போனது.

சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து விருந்தினர்கள் தங்கள் பரிசுகளை கொடுக்க காத்திருக்க மணமக்கள்  மேடையை விட்டு இறங்கி லானில் போடப்பட்டிருந்த இருக்கையருகில் நின்றனர்.

சொந்தபந்தங்கள் நண்பர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பகிர்ந்து உணவருந்த சென்றனர்.வந்தவர்களில் ஓரிருவர் திஷானியின் குறைப் பற்றி ஏதோ பேசியவாறு செல்ல அதை கேட்டவளின் மனமும் முகமும் ஒரு நொடி சுனங்கி விட்டது.

ஆனால் அதை எப்படி கண்டு கொண்டானோ தெரியவில்லை அடூத்த நொடி அழுத்தமாய் தோள்பற்றி தன்புறம் சேர்த்துக் கொண்டான்.இதை சற்றும் எதிர்பாராதவளுக்கோ மகிழ்ச்சியும் கண்ணீரும் ஒரு சேர முகத்தில் சேர்ந்து கொண்டது..

அதன்பின் மறந்தும் கூட அவளை விட்டு நகரவில்லை அவன்.இரவு உணவுப் பொழுதும் அவளுக்காய் பார்த்து பார்த்து பரிமாறச் செய்தவன் அவளின் அருகாமையை ரசித்து மகிழ்ந்தான்.அதன் பின் பெரியவர்கள் அனைவரும் கிளம்பத் தயாராக அபினவ் அவர்ஙளுக்கு உதவினானே தவிர கிளம்புவதாய் தெரியவில்லை.

குழப்பத்தோடே அவள் அங்கு அமர்ந்திருக்க அபினவின் தாய் அவளிடம் விடைபெற்று செல்வதற்காக வர மெதுவாய் எழுந்தாள்.

“நாங்க கிளம்புறோம் திஷானி..நாளைக்கு பார்க்கலாம்..”

“ஆன்ட்டி நாங்க..”

“அவன் சொல்லலையா இங்கதான் ஸ்டே பண்ண போறீங்க டா..காலையிலே ரெடி ஆய்ட்டு வாங்க..வரேன்”,என கன்னம் தட்டி விடைபெற்றார்.

னைவரும் கிளம்பிச் சென்றபின் அவளருகில் வந்தவன்,”போலாமா ?”,எனக் கேட்க மௌனமாய் தலையசைத்தவள் அவனோடு சென்றாள்.

அழகான காட்டேஜ் போன்ற அமைப்பிலிருந்த தனி அறை அங்கேயேசின்னதாய் கிட்சன்,ஃபிரிட்ஜ் மற்றும் டீவியோடு அழகாய் இருந்தது.மெதுவாய் உள்ளே நுழைந்தவள் என்ன செய்வதென தெரியாமல் விழித்து நிற்க,

“என்னாச்சு திஷா வா..அதோ அங்க பெட்டில உனக்கான ட்ரெஸ் எல்லாம் இருக்கு மாத்திக்கோ..எதுவும் ஹெல்ப் வேணும்னா சொல்லு”

ம்ம் என தலையசைத்தவள் தனக்கான உடைகளை எடுத்துக் கொண்டு குளியலைறைக்குள் புகுந்து கொண்டாள்.உடைமாற்றி வந்தவள் தன்னவனைத் தேட வெளியே யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.

என்ன செய்வதென தெரியாமல் அப்படியே கட்டிலில் அமர சில நிமிடங்களில் உள்ளே வந்தவன்,

“என் ப்ரெண்ட் உனக்கு விஷ் பண்ணணும்னு சொல்றா”,என மொபைலை நீட்ட

தயக்கமாய் அதை வாங்கியவள்,

“ஹலோ”

“ஹாய் திஷானி..ஹேப்பி மேரிட் லைப்..”

“ஹாங்..தேங்க் யூ..”

“என் பேரு சாரு..என்னபத்தி எல்லாம் சொல்லிருக்காங்களா?”

“அது..”

“ம்ம் தெரியுமே கண்டிப்பா சொல்லிருக்க மாட்டாங்க..நோ ப்ராப்ளம் ஒரே ஊர்ல தான இருக்கோம் சீக்கிரமே மீட் பண்ணலாம்..இதுக்கு மேல பேசினா என்ன கொன்னுருவாங்க..பை..”,என்றவள் அழைப்பை துண்டித்து விட

மொபைலை அவனிடம் கொடுத்தவள் கேள்வியாய் அவனை நோக்க,

“சாரு என்னோட எஃபி ப்ரெண்ட் ஒன் இயரா தான் தெரியும் பட் ரொம்ப பெஸ்ட் ப்ரெண்ட்.”

“ஓ..என்ன பண்றாங்க?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.