(Reading time: 10 - 19 minutes)

“ம்ம் ஐடி தான் இப்போ ஒன் மந்த் ஆன் சைட் போய்ருக்கா அதான் கல்யாணத்துக்கு வரல..”

“ஓ..”

“ஆமா கேக்கனும்னு நினைச்சேன் உன் ப்ரெண்ட்ஸ் யாரும் வரலையா??ஸ்கூல் டீச்சர்ஸ் மட்டும் தான் பாத்த மாதிரி இருந்தது..”

“எனக்குஅவ்வளவா ப்ரெண்ட்ஸ் கிடையாது..ரொம்ப சூஸி டைப் தான் நா..”

“ஹாங்ங் முதல் பாயிண்ட்லயே போச்சா..நா ஜஸ்ட் ஆப்போசிட் நிறைய ப்ரெண்ட்ஸ் எனக்கு..கேள்ர்ஸ் கொஞ்சம் அதிகம்”,என்றவனை அவள் காரமாய் பார்க்க,

“ஹே நல்ல ப்ரெண்ட்ஸ் தான்..நம்பு..”

“சோ வெட்டிங் அரேண்ஞ்மெண்ட்ஸ் எப்படி இருந்தது ஒண்ணுமே சொல்லலையே நீ?”

“உண்மைய சொல்லணும்னா இப்படி ஒரு வெட்டிங் நா கனவுல கூட நினைச்தில்ல..ரொம்ப அழகாயிருந்தது..”,என்றவள் மெதுவாய் அவனை ஏறிட இதழ் விரிய சிரித்தவன்  தன் பெட்டியின் அருகே சென்று ஒரு கவரை எடுத்து வந்து அங்கிருந்தை சேரை நகர்த்தி அவளருகில் போட்டு அமர்ந்தான்.

“சோ..இது என்னோட மேரேஜ் கிப்ட் உனக்காக நானே செலெக்ட் பண்ணது”,என அவளிடம் நீட்ட ஒருவித ஆர்வம் அவள் கண்களில் நிச்சயமாய் இருந்தது.

மெதுவாய் அதைப் பிரித்து பார்த்தவள் ஒரு நொடி பிரமித்துதான் போனாள்.அது அவளின் குடும்ப புகைப்படம் அவர் தந்தையோடு தாய் தம்பியும் இருக்க அபினவ் அவள் தோள் பற்றியிருக்குமாறு வரைந்த பென்சில் ட்ராயிங்.சாதாரணமாகவே அவர்கள் அனைவருமாய் சேர்ந்து  ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை.அப்படியிருக்க தன் தந்தையையும் சேர்த்திருந்த அந்த ட்ராயிங்கை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு.

கண்களின் ஓரம் துளி நீர் எட்டிப்பார்க்க அவள் கையை எடுத்து தனக்குள் வைத்தவன்,

“ரிலாக்ஸ்..என்னோட முதல் கிப்ட் ரொம்பவே மறக்க முடியாததா அதே நேரம் உன் மனசுக்கு பிடிச்சதா இருக்கணும்னு நினைச்சு தான் இதை வாங்கினேன்..இனி உனக்கும் உன் பேமிலிக்கும் நா இருக்கேன்..ஓ.கே..”,என இதமாய் கேட்க இமை மூடித் திறந்து ஆம் என்பதாய் தலையசைத்தாள்.

“சரி வாயேன் அப்படியே ஒரு வாக் போய்ட்டு வரலாம்..டயர்டா இருக்குனா வேணாம்”

“இல்ல அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல போலாம்”,என தன் ஸ்டிக்கை எடுத்தவளை கைப்பிடித்து எழுவதற்கு உதவி செய்தவன் அந்த லான் பாகுதியில் அவளோடு நடக்க ஆரம்பித்திருந்தான்.

வழக்கம்போல் அவன் பத்து வார்த்தை பேசினால் இவள் ஒரு வார்த்தையென பேச அதற்கும் ஒன்றும் கூறாமல் அவளோடு இருக்கும் அந்த நொடியை ரசித்தான்.

சிறிது நேரத்தில் அறைக்கு திரும்ப அவள் கட்டிலின் ஓரமாய் அமர மறுபுறம் அமர்ந்தவன்,

“ரொம்ப டயர்டா தெரியுற திஷா..நல்லா ரெஸ்ட் எடு..மானிங் ஒரு அவசரமும் இல்ல பொறுமையா கிளம்பினா போதும்..ம்ம் படுத்துக்கோ…”,என்றவனுக்கு தலையசைத்து படுத்தவளின் அருகிலேயே சற்று இடைவெளி விட்டு படுத்தவன் அவள்புறம் திரும்பி நெற்றியில் இதழ்பதித்து குட் நைட் என்று கூற பெண்ணவளுக்கோ ஒரு நொடி இதயம் தாறுமாறாய் எகிற ஆரம்பித்தது

அத்தனை நேரம் அவன் கைப்பிடித்து நடந்ததே மனதை ஏதோ செய்ய இப்போது இந்த முத்தம் வாழ்வின் முதல் முத்தம் இத்தனை இயல்பாய் இத்தனை பாசமாய் சிறு வயதில் தாயிடமிருந்து பெற்ற நியாபகம்.

“இவன் ஏன் இப்படி இருக்கான்.கொஞ்சமும் இந்த கூச்சம் தயக்கமெல்லாம் இல்லவே இல்லையா..ஏதோ பத்து வருஷம் பாத்து பழகின மாதிரி பேசுறான்.முத்தம் கொடுக்குறான்.இல்ல எல்லா கல்யாணத்துலயும் இப்படி தான் நடக்குமா..முன்ன பின்ன செத்தால சுடுகாடு தெரியும்..கடவுளே ஒரு மணி நேரத்துக்கே இந்த நிலைமை..நா என்ன பண்ண போறேன்..”,என மைண்ட் வாய்ஸ் முழுவதையும் அவன் முகத்தை பார்த்த வாறே பேசி முடிக்க அவனோ குறுஞ்சிரிப்புடன் அவள் கன்னம் தட்டி,

“என்ன அப்படி பாக்குற திஷா டியர்,ஐயோ கிஸ் பண்ணிட்டானேனு யோசிக்குறியா இல்ல தூங்க சொல்லிட்டனேனு கோபமா பாக்குறியா?”,என கேட்க. சட்டென உணர்வு பெற்றவள்,

“ஹாங் அதெல்லாம் ஒண்ணுமில்ல..குட் நைட் “,என கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

தொடரும்...

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1198}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.