(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - அன்பின் அழகே - 03 - ஸ்ரீ

anbin Azhage

ஊரை வெல்லும் தோகை நான்

உன்னால் இன்று தோற்றுப்போனேன்

கண்ணால் யுத்தமே நீ

செய்தாய் நித்தமே

 

ஓஹோ ஓஓஓ

நின்றாய் இங்கு மின்னல் கீற்று

நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றால்

உன்னை சூழ்கிறேன் நான்

உன்னை சூழ்கிறேன்

 

காற்றில் வைத்த சூடம் போலே

காதல் தீர்ந்து போகாது

உன்னை நீங்கி உஷ்னம் தாங்கி

என்னை வாழ ஆகாது

அன்பேவா.... யே. ஹேஏஏஏ

யாரோ..”

காலை பத்து மணியளவில் அந்த காபி ஷாப்பை அடைந்தவள் அபினவிற்காக காத்திருந்தாள்.

15 நிமிடங்கள் கடந்தும் அவனை காணாமல் பொறுமையிழந்தவள் அவனை அழைக்க எண்ணி தன் மொபைலை எடுக்க அதற்குள் பின்னிருந்து வந்த ஹாய் என்ற சத்தத்தில் திரும்பியவள் ஒரு நொடி வாயடைத்து போனாள்.

முந்தைய தினம் அவன் பெற்றோர் வந்து போனதில் இருந்தே அவன் முகத்தை நினைவு கூற பெரும்பாடு பட்டாள் ஆனால் ஏனோ நினைவிற்கு வர மறுத்தது.வாட்சப்பில் பார்க்கலாம் என்றால் அதிலும் அவன் புகைப்படம் இல்லை.இப்போது தன் முன் நிற்பவனை பார்த்தவளுக்கு என்ன விதமான உணர்வு எழுகிறது என அவளுக்கே புரியவில்லை.

சாரி ட்ராபிக்ல மாட்டிகிட்டேன்.வந்து ரொம்ப நேரம் ஆச்சா..”,என்றவன் அவளின் எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

இல்ல ஜஸ்ட் டென் மினிட்ஸ் தான்..”

பை த வே ஐ அம் அபினவ்..”,என கை நீட்ட கை குலுக்காமல் கை கூப்பியவள்,

திஷானி..”

அவள் செய்கையில் தோள் குலுக்கியவன்,”நைஸ் அண்ட் டிபெரெண்ட் நேம்,சோ என்ன சாப்டுறீங்க பர்ஸ்ட் ஆர்டர் பண்ணிரலாம்..”,என்றவாறு அவளுக்கு வேண்டியதையும் ஆர்டர் செய்துவிட்டு சற்று சாய்வாய் குஷனில் அமர்ந்தான்.

சொல்லுங்க என்ன பேசனும்”,என தன்னிடம் கேட்பவனை விசித்திரமாய் பார்த்தாள் திஷானி.

நீங்க தான் சொல்லனும்..என்கிட்ட கேக்குறீங்க?”

ஹா என் விருப்பத்தை தான் அம்மா அப்பா சொல்லிருப்பாங்களே உங்ககிட்ட..நீங்க தான் முடிவை சொல்லனும்..”

விருப்பம் எல்லாம் சரி..ஆனா எப்படி பார்த்த பத்து செகெண்ட்ல கல்யாணம் வரை முடிவு பண்ணீங்க?என்னை பத்தி எதுவுமே தெரியாம?”

உங்க கேள்வி நியாயமானதுதான் பட் இந்த அரேண்ஞ்ச் மேரேஜ்ல பொண்ணு பாக்குற ப்ராசஸ் இருக்குமே அது மாதிரி தான் உங்களை பாத்தவுடனே ஒரு ஸட்டிஸ்பைட் பீல்..அப்பறம் நரேன் உங்களைப் பத்தி சொன்னான்..சோ ரொம்ப யோசிக்குற அளவு எந்த விஷயமும் இல்லனு தோணிச்சு..அம்மாகிட்ட பேசினேன்..”,என அவன் முடிக்கும் நேரம் ஆர்டர் செய்த காபி வர அதை வாங்கி அவளுக்குமாய் நகர்த்தி வைத்தவன் தன் கோப்பையை எடூத்து பருக ஆரம்பித்தான்.

என்ன சொல்வதென தெரியாமல் அவள் அமைதியாய் காபி கோப்பையை வெறிக்க அவள் பதிலுக்காக காத்திருந்தான்.

சில நொடிகளில் உணர்வு பெற்றவள்,”மிஸ்டர் அபினவ்.எனக்கு இன்னமும் இந்த விஷயத்துக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்னு தெரில.கல்யாணம்ங்கிற ஒரு விஷயத்தை பத்தி நா யோசிச்சு பாத்ததும் இல்ல.

இன்னும் நடக்குற எல்லாமே கனவு மாதிரி தான் இருக்கு எனக்கு.இதுல முக்கியமா என் யோசனைக்கு காரணம் உங்களுக்கு எந்த விதத்துலயுமே ஒத்துவராத என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்குறதுதான்.

என் குடும்ப சூழல்,எனக்கான இந்த குறை இதெல்லாத்தையும் விட உங்க உருவத்திற்கு அப்படியே நேர்மாறான என் உருவம்.நா எப்பவுமே என்னை யாருக்காகவும் குறைச்சு மதிப்பிட்டது கிடையாது அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது.

என்னளவில் நா ரொம்பவே அழகுதான் திறைமைசாலி தான்.பட் உங்ககிட்ட இதை சொல்றதுக்கு காரணம் இதெல்லாத்தையும் தாண்டியும் இந்த விருப்பம், கல்யாணம் இதெல்லாம் உங்களுக்கு எப்படி தோணுதுனு தான் எனக்கு புரில.வெளிப்படையாவே கேக்குறேன்.

உங்களுக்கு ஹெல்த் இஷ்யூ எதுவும் இருக்கா அம்மா அப்பாகிட்ட சொல்லாம அவங்க கட்டாயத்துதுக்காக கல்யாணம் பண்ற முடிவுக்கு வந்துருக்கீங்களா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.