(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - என்னவளே - 05 - கோமதி சிதம்பரம்

ennavale

சிவகாமியின்  சத்தம்  கேட்டு ரிஷியும் பருவதம் அம்மாளும்  ஹாலுக்கு வந்தனர்.

கீதாவின், பார்வை  ரிஷியை தேடியது. தன்  நெற்றியில் இருக்கும் குங்குமத்தின் சொந்தக்காரன் அவன்தானேயே!!!! கண்டிப்பாக  இது  அவனுக்கும் தெரியும்.

அப்படி இருந்தும் இந்த சிவகாமியிடம்  மாட்டி கொண்டு நான் நிற்க்கிறேன்.  இவன்  என்ன  செய்து கொண்டு இருக்கிறான்???? 

ரிஷி, தனது  ரெண்டு  அத்தைகளுக்கும்  பின்னாடி இருந்த தூணில் சாய்ந்தவரேயே , அழகாக  வாய்க்குள்ளயே சிரித்தவாறு  கீதாவை  பார்த்தவாறு நின்றுகொண்டு இருந்தான்.

வாங்குடி வாங்கு  நல்ல வாங்கி கட்டிக்கோ, ஒழுங்கா என்ன கல்யாணம் பண்ணிட்டு  இருந்த இந்த திட்டு எல்லாம் உனக்கு தேவையா???? 

 மூணு வருஷம் என்ன  தவிக்க விட்டுட்டு போனதுக்கு உனக்கு இதுக்கு மேலையும் என்கிட்ட  இருக்குடி. என்று கண்களிலே அவளை மிரட்டினான்.

சின்னத்தை  பேச்ச கேட்டு குங்குமத்தை அழிச்சா கொன்னுடுவேன் என்பது போல தனது ஆட்காட்டி விரலை காண்பித்து சைகை செய்தான். கீதாவிற்கு எங்கையெனும் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.

பாருங்கக்கா, சொல்ல சொல்ல கேட்டுட்டு நிக்குறதா?  நீ வெளிநாட்டுல வாழ்ந்து இருக்கலாம். ஆனா, இங்க இப்படி தான் இருக்கணும்.

இப்ப உன்  மாமானார் இருந்த என ஆகி இருக்கும் தெரியுமா?.. யாராவது, புருஷன் செத்து இப்படி உச்சி வகுடுல குங்குமம் வச்சுட்டு நிப்பாங்களா? முதலா அழிச்சு தொலைடி ..... என்று ஆங்காரமாய் சிவகாமி அம்மாள் கத்திக்கொண்டு இருந்தார்.

கீதா திரும்பி ரிஷியை பார்த்தாள். இப்போது ரிஷி கோபத்துடன் கீதாவை பார்த்தான். எங்க தைரியம் இருந்த குங்கமத்தை அழிச்சுடு பார்க்கலாம் என்பது போல பார்த்தான்.

கீதா, சிவகாமிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கடவுளிடம் இந்த சூழ்நிலையில் இருந்து  தன்னை காப்பாற்றும் மாறு மனதிற்குள் வேண்டி கொண்டு இருந்தாள்.

ஆனால் , சிவகாமியின் சத்தம் மட்டும் ஓய்ந்த பாடில்லை. கீதாவின் மீது இருந்த வெறுப்பு சிவகாமி இந்த விஷயத்தை வைத்தேயே கீதாவை வெளியில் அனுப்ப திட்டம் தீட்டினாள். கீதாவிற்கும் இது  நன்றாகவேயே புரிந்தது.

என்னக்கா நீயும் பார்த்துட்டு இருக்க?  உனக்கு இப்படி  ஒரு மருமகள்யா? என்று பருவதம் அம்மாளையும் சிவகாமி துணைக்கு அழைத்தாள்.

பருவதாமம்மாள்  கீதாவை  தீர்க்கமாக பார்த்தார். கீதாவின் தவிப்பு பருவதமாளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதேயே  நேரத்தில் ஏனோ அவளை தவறாக நினைக்கவும் முடியவில்லை. கீதா, எதோ மறைகிறாள் என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

பிரியா, என்று கீதாவை அழைத்தார். நீ போ மா  போய் சாப்பிடு என்று அமைதியாக  கூறினார்.

பருவதம்மாளும் தனது  குங்குமத்தை அழிக்க சொல்லி விடுவாரோ என்று பயந்த கீதாவிற்கேயே இது அதிர்ச்சி தான். சிவகாமி யோ  மீண்டும் கத்த  ஆரம்பித்தார். 

என்னக்கா, உனக்கு என்ன பைத்தியமா? உன் மகனையே போன பிறகு உன் மருமகள் எப்படி குங்குமத்தோடு இருக்க  முடியும். உன்னை ஊர் தப்பாக பேசாத? அவளது  நெற்றியில் இருக்கும் குங்குமம் இந்த வீட்டிற்கு அசிங்கத்தை தேடி தரும் என்று உனக்கு தெரியாதா?

இவளுக்கு நீ ரொம்ம்பவும் இடம் தரா ? இது  நலத்துக்கில்லை? நாளை இந்த  வீட்டிற்கு வருபவர்களிடம் இவளை உன் மருமகள் என்று எப்படி அறிமுக படுத்துவ? என்று  கேட்ட அடுத்த நொடி பருவதமளிடம் இருந்து சிவகாமிக்கு பதில் கிடைத்தது.

சிவகாமி, இவள் இந்த வீட்டு மருமகள் அல்ல. இவள் இந்த வீட்டிற்கு  என் பேரனை பார்த்து கொள்ள  வந்து இருக்கிறாள் அப்படித்தான் எல்லோரிடமும்  கூறப்போகிறேன். 

நீயும் மற்றவர்களிடம் அப்படியே கூறு.

ப்ரியாவும் அதற்கு தான் ஆசைப்படுகிறாள். அவளாக அவள் நெற்றியில் வைத்து இருக்கும் குங்குமத்தை அழிக்கும் வரை நாம் ஏதும் கூற  வேண்டாம். இந்த  பேச்சை இதோடு விட்டு விடு.

காலம் நமக்கு அனைத்திற்கும் பதில் சொல்லும். பொறுத்து இருந்து பார்ப்போம். என்று கீதாவை பார்த்தவரையே பேசி முடித்தார்.

பருவதம் அம்மாளின் பார்வை கீதாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது.  தன்னை அவர் சந்தேகிக்க கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.

அம்மா, இந்த குங்குமம்  என் நெற்றியில் எப்போதும் இருக்கும் என்று என் கணவருக்கு சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறேன் அதான் என்னால் இதை அழிக்க முடியவில்லை.

நான் செய்தது  தவறுதான். ஆனால், என்னால்  என் உயிருள்ளவரை இதை மாற்றி கொள்ள  முடியாது. என்று கீதா பேசி முடிக்கும் முன்னரேயே  பருவதம் அம்மாள் குறுக்கிட்டார்.

அதாவது, உன் கணவர் என் மகனுக்கு பிடிக்கும் என்பதால் தான் குங்குமம்  வைத்து கொள்கிறயை அல்லவா!! நீ என் பேரனை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தவள் . அப்படி இருக்க உன்னிடம் நான் எப்படி கோப பட முடியும்  சொல்லு? சரி  விடு....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.