(Reading time: 9 - 18 minutes)

மாலை அவள் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற நேரம் அவள் தாய் பரபரப்பாய் சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.இவளை கண்டவர் உடனே அவளிடம் ஓடிவந்து திருஷ்டி கழித்து தன் மகிழ்ச்சியை வெளிப்டுத்தினார்.

ரொம்ப சந்தோஷம் கண்ணு..கடவுள் என்னை கைவிடல..உனக்கு ஒரு நல்லது நடக்கனும்னு போகாத கோவில் இல்ல வேண்டாத தெய்வமில்ல..இப்போ ராசா மாதிரி ஒரு மாப்பிள்ளை..எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..நீ சம்மதிச்சுட்டனு அவங்க சொன்னத கேட்டவுடனே எனக்கு கையும் ஓடல காலும் ஓடல..அடுத்த முகூர்த்ததுலயே கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிடாங்க..”

என்ன!!ஏன் இவ்ளோ சீக்கிரம்??எனக்கென்னவோ ரொம்ப அவசர படுறோமோனு தோணுதும்மா..”

கண்ணு அதெல்லாம் ஒண்ணுமில்ல.தம்பி போய் மாப்பிள்ளையை பத்தியும் அவங்க குடும்பத்தை பத்தியும் தீர விசாரிச்சுட்டான்.ஒரு ப்ரச்சனையும் இல்ல..நீ சந்தோஷமா இரு மத்தத நாங்க பாத்துக்குறோம்..”

ம்ம்மா வரதட்சனையெல்லாம் கேட்டா நா ஒத்துக்கவே மாட்டேன்ம்மா..இப்போவே சொல்லிடுறேன்..”

திஷானி அதெல்லாம் நீ ஏன் கவலபடுற..பேசாம போய் கல்யாண பொண்ணா தயாராகுற வேலையை பாரு.”.என்றவர் அவளிடமிருந்து தப்பி உள்ளே ஓடிவிட்டார்.

வரதட்சனையை பற்றி யோசித்தவுடன் இதை எப்படி மறந்தோம் என வேகமாய் தன் கைப்பேசியை தடவி எடுத்தவள் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

ஹாய்

ஹலோ டியர்..”

டியரா??”

ம்ம் பொண்டாட்டினே கூப்டலாம் பட் நீதான் ஒரு அங்ரி பேர்ட் ஆச்சே..”

.கே பை..”

இப்போ என்ன?”

எனக்கு ஒரு க்ளரிபிகேஷன் வேணும்

எதைப் பத்தி?”

எல்லாம் பேசினீங்க இந்த டௌரி பத்தி ஒண்ணும் சொல்லலயே அதான் தெளிவு படுத்திக்கலாம்னு..”

சற்று நேரத்திற்கு ஒரு பதிலும் வராமலிருக்க அவளே மீண்டும் அனுப்பினாள்.

எதுவாயிருந்தாலும் சொல்லுங்க..”

யா இப்போ தான் கல்குலேட் பண்ணி முடிச்சேன் இதோ அனுப்புறேன்”,

என்ற பதிலை பார்த்து ஏனோ மனம் ஏமாற்றமாய் உணர்ந்தது திஷானிக்கு.இறுதியில் இவனும் மற்றவர்களை போலத்தானா என எண்ணும் போதே வந்த குறுஞ்செய்தி சத்தத்தில் அதை திறந்தவளின் கண்கள் இன்னுமாய் விரிந்தன.

உந்தன் கயல்விழிகளின்

கடைக் கண் பார்வையும்

அந்த கூர்நாசியை உரசிச்

செல்லும் பொல்லாத கோபமும்

புன்னகைக்கும் போது பூத்துச்

சிரிக்கும் அந்த செவ்விதழ்களும்

இறுதி மூச்சு வரை என் வசம்

இருப்பதே நம் திருமணத்திற்காய்

நீ கொடுக்க வேண்டிய தட்சணை..”

இன்னும் நிறைய கேக்கணும் தான் சரி பாவம் இதுமட்டும் குடுத்தா போதும்னு பெருந்தன்மையா விட்டு கொடுக்குறேன்..”

அதிலிருந்து இன்னமும் விழியகற்றாமல் அப்படியே எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளோ அதன் பின்னான அவனது ஒரு குறுஞ்செய்திக்கு கூட அவள் பதில் அனுப்பவில்லை.அடுத்து சில நாட்களில் அவனே அவள் முன் வந்து நின்றான் அவளின் பதிலுக்காக..

தொடரும்...

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1198}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.