(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - அன்பின் அழகே - 05 - ஸ்ரீ

anbin Azhage

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்

காட்ரில் உந்தன் குரல் மட்டும் கேடிருன்தேன்

சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்

 

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்

கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்

 

தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை

நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை

அதி காலை விடிவதெல்லாம் உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான் 

அந்தி மாலை மறைவதெல்லாம் உன்னை பார்த்த துறக்கத்தில் தான்

காலை வேளையின் இளம்வெயில் அறையில் நிறைந்திருக்க மெதுவாய் கண் விழித்தாள் திஷானி..தன்னருகில் கணவனை காணாமல் கண்களால் அறையை துழாவ குளியலறையிலிருந்து தலையை துவட்டியவாறே வந்தவனை கண்டு பதறியபடி எழுந்தமர்ந்தாள்.

“ஹே ரிலாக்ஸ்..எதுக்கு இவ்ளோ டென்ஷன்..மணி ஆறு தான் ஆகுது..”

“இல்ல நீங்க ரெடியானத பாத்து டைம் ஆய்டுச்சோனு..”

“இல்ல எப்போவுமே சீக்கிரம் எழுந்து பழகிடுச்சு அதான் ஜாக்கிங் போய்ட்டு வந்தேன் ஸ்வெட்டிங்னால குளிச்சுட்டு வந்துட்டேன் வேற ஒண்ணுமில்ல”,என்றவாறு இயல்பாய் அவளருகில் அமர்ந்தான்.

“சரி நீ இன்னும் குட் மார்னிங் சொல்லவேயில்ல”,கண்ணில் குறும்போடு அவன் கேட்க முதலில் குழம்பியவள் பின் குட் மார்னிங் எனக் கூற இடவலமாய் தலையசைத்தவன்  இந்த குட்மார்னிங் லா வேணாம் என்றவாறு கன்னத்தை காட்ட அவனை முறைத்தவாறே முகத்தை பின்னிழுக்க,

“ம்ம் நல்ல வைப்..ஏதோ ரோட்ல போற பொண்ணுகிட்ட கிஸ் கேட்ட மாதிரி முறைக்குறியே..ம்ம் கஷ்டம்தான்..”,என நகர எத்தனித்தவன் அவள் எதிர்பாரா நேரம் கன்னத்தில் இதழ்பதித்து குட்மானிங் திஷா டியர் என கண்சிமிட்டிச் சென்றான்.

அதன்பின் ஒரு நொடிகூட அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை.தன் மனநிலையும் புரியாமல் கணவனை தடுக்கவும் தோன்றாமல் குழப்ப ரேகைகள் முகத்தை ஆக்கிரமித்திருக்க அதோடே கிளம்பி அவனோடு வீட்டிற்குச் செல்ல தயாரானாள்.

அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்து பால் பழம் கொடுத்து அக்கம் பக்கத்தினர்களில் வந்திருந்தவர்களுக்கு அவளை அறிமுகம் செய்து என நேரம் றெக்கை கட்டிப் பறக்க மதிய உணவிற்குப் பின் தான் சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு இருவரையும் அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தார் சாரதா.

அறைக்கு வந்தவள் உடைமாற்றி அமரும் வரை பொறுமையாய் பால்கனியில் காத்திருந்தவன்  அவள் அருகில் வந்து எதிரில் அமர்ந்தான்.

“திஷா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..”

“என்னாச்சு சொல்லுங்க.”

“காலைல இருந்து உன்னை கவனிச்சுட்டுதான் இருக்கேன்.ரொம்பவே அன்கம்பர்டபிளாவே தான் இருக்க..மே பி என்னோட அக்டிவிட்டீஸ் தான் அதுக்கு காரணமா இருக்கலாம்…பட் நா ஏற்கனவே சொன்னமாதிரி நா ரொம்பவே ஈசி கோயிங் நேச்சர்..சோ யாரா இருந்தாலும் சட்டுனு பழகிடுவேன்.அப்படியிருக்கும் போது நீ என் வைப் உன்கிட்ட எப்படியிருப்பேன்னு நீயே புரிஞ்சுக்கோ..

அண்ட் கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே ரொமேண்டிக்கான ஆளு..சோ தொடாமயே லவ் பண்றது தூரமாவே உக்காந்து பேசுறது இதெல்லாம் சத்தியமா செட்டே ஆகாது.சொல்லப் போனா என்னோட முப்பது வருஷத்து காதலுக்கு சொந்தமானவ நீ..சோ ரொம்பவே உன்னை படுத்துவேன் தான் வேற வழியில்ல உனக்கு..

இப்போவே உனக்கு டைம் வேணும்னு தான் இவ்ளோ நல்ல பையனா இருக்கேன்.இல்லனா இப்படி கெஸ்ட்கிட்ட பேசுறமாதிரி உக்காந்து பேசிட்டுஎல்லாம் இருக்க மாட்டேன்.லெட் மீ கம் டு த பாயிண்ட்.

என்கிட்ட நீ நீயா இரு..எதுவாயிருந்தாலும் மனசுவிட்டு பேசு இனி வாழ்க்கை மொத்தத்துக்கும் முதல்ல உன்னோட பெஸ்ட் ப்ரெண்ட் நா அதுக்கப்பறம் தான் ஹஸ்பெண்ட்..இது உன் வீடு உனக்கு மட்டுமே சொந்தமான உறவுகள் நாங்க..சோ சந்தோஷமா ஃப்ரீயா இரு…சரியா?”

“நானுமே உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்.பட் எனக்கு இருந்த குழப்பத்துக்கு எல்லாம் நீங்களே பதில் சொல்லிட்டீங்க..நா சின்ன வயசுல இருந்தே கொஞ்சம் ரிசர்வ்டாவே இருந்து பழகிட்டேன்.கண்டிப்பா எவ்ளோ சீக்கிரம் முடியுமோ என்ன மாத்திக்குறேன்..என்னை இந்தளவு புரிஞ்சுகிட்டு எனக்காக யோசிக்குறதுக்கு ரொம்பவே தேங்க்ஸ்ங்க..”,என கையை நீட்ட பற்கள் தெரியவே சிரித்தவன்,

“தேட்ஸ் மை கேர்ள்”,என நீட்டிய கையோடு கை குலுக்கி லேசாய் அவளை தன்னோடு அணைத்து விடுவித்தவன் நெற்றியில் தன் முத்திரை பதிக்க மறக்கவில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.