(Reading time: 13 - 26 minutes)

“சரி எப்பவுமே என்னை பத்தியும் இல்ல நா பேசுறதை கேட்டுட்டே இருக்கியே தவிர உன்னைபத்தி நீயா சொல்லவே இல்ல..சொல்லு லைக் உனக்கு பிடிச்சது பிடிக்காதது அந்த மாதிரி,..”

“அப்படியெல்லாம் வாழ்க்கைல எந்த நினைப்புமே இருந்ததில்லங்க..சொல்லப் போனா வாழ்க்கையை இரண்டு விதமா பேஸ் பண்ணலாம்.இந்த உலத்துல ஒவ்வொண்ணையும் ரசிச்சு அழகாக வாழலாம்.இன்னொன்னு பிறந்துட்டோம் வாழ்ந்து தான் ஆகணும் இப்டியும் இருக்கலாம்.

நா இதுல இரண்டாவது ரகம்.அதனாலேயே என்னவோ பெருசா எந்த விருப்பு வெறுப்பும் இருந்ததில்லை..

எனக்கு உலகமே எங்க அம்மாதான்..அப்பா..ம்ம் அப்படி ஒரு ஆளு எதுக்கு இருந்தாருனே எங்களுக்குத் தெரியாது.சரியான குடிகாரர்.பகல் முழுக்க பேய் மாதிரி உழைக்குறவரு சாயந்திரம் அத்தனை பணத்துக்கும் போய் குடிச்சுட்டு வந்து நிப்பாரு..எனக்கு இந்த குறை வந்தப்பறம் இன்னும் கேக்கவே வேணாம் அதை காரணமா வச்சே இன்னும் மோசம்..இதுல தம்பி வேற பொறந்தான்..அவனோட ஒரு வயசுல அப்பா போய் சேர்ந்துட்டார்..அதுக்கப்பறம் வாழ்க்கை ரொம்ப ரொம்ப மோசமான பக்கங்களோட தான் இருந்தது..கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சேன்..

அப்பறம் 12த்ல நல்ல மார்க் இருந்ததால ஸ்காலர்ஷிப் அப்பறம் அம்மா வேலை பாத்த வீட்டு ஓனர்ங்க எல்லாம் உதவி பண்ணதுல காலேஜ் முடிச்சேன்..அப்பறம் வேலை..சுத்தமா பிடிக்காத சூழல்  தான் இருந்தாலும் அம்மா தம்பிக்காக ஏத்துகிட்டேன்..தம்பியை நல்லா படிக்க வச்சேன் அவன் வேலைக்கு போன அடுத்த நாள் சொன்னான்,”அக்கா நீ வேலையை விடு நா உங்களை பாத்துக்குறேன்னு..”,

லைவ்ல முதல் தடவையா சந்தோஷத்துல அழுகை வந்தது அப்போ தான்.இருந்தும் அவனும் சின்ன பையன் தான மொத்த பொறுப்பையும் திணிக்க விரும்பல அவன் மேல அதுக்கப்பறமும் ஒரு வருஷம் வேலையை கன்டிநியூ பண்ணேன்..அதுக்கப்பறம் தான் இந்த ஸ்கூல் வாழ்க்கை..

ரொம்ப ரொம்ப அழகானது..அந்த. பிஞ்சு குழந்தைங்கள பாக்கும் போது வாழ்க்கையின் கஷ்டமெல்லாம் ரொம்ப தூரமா போன மாதிரி இருக்கும்..ஏற்கனவே சொன்ன மாதிரி நிறைய ப்ரெண்ட்ஸ்லா இருந்தது இல்ல.எல்லாரோடையும் ஒரு லிமிட்டோட தான் பழகுவேன்.சந்தோஷம் துக்கம் எல்லாத்துலயும் எனக்கு ஆறுதல் நான் தான்..அப்படியே பழகிடுச்சு..இனி அதை மாத்திக்கணும்..இல்ல இப்போ மாத்திக்கிட்டேன்..”என்றவள் அவனை கண்டு சிநேகமாய் சிரிக்க கனவிலிருந்து மீண்டவனாய் பதிலுக்கு புன்னகைத்தான்.

லவ்லி..என்சாய்ஸ்ல பெஸ்ட் நீதான்னு இன்னொருதடவை ப்ரூவ் பண்ணிருக்க திஷா..சுயம் என்பது எப்போதுமே தன்னம்பிக்கை சம்மந்தபட்ட விஷயம்.நம்ம கஷ்டத்தையும் வருத்தத்தையும் கூட நெஞ்சு நிமிர்த்தி சொல்றது ரொம்பவே பாராட்ட பட வேண்டிய விஷயம்..அந்த வகைல என் பெட்டர் ஹாவ்க்கு என்னோட..”,என்றவன் லேசாய் குனிந்து கைகளால் சலாம் போட அதற்கும் அழகாய் சிரித்து வைத்தாள்.

தொடரும்...

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1198}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.