(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - என்னவளே - 06 - கோமதி சிதம்பரம்

ennavale

வ்வளவு முயற்சித்தும்  கீதாவால் ரிஷியின் பார்வையை தவிர்க்க முடியவில்லை.

உண்மையாக நேசித்த இன்றும் உண்மையான நேசத்துடன் வாழ்பவள். அப்படி இருக்க ரிஷியின் அருகமைக்காக கீதாவும் ஏங்க தான் செய்தாள்.

ஆனால், தன் பிறப்பின் ரகசியம் தெரிந்த பின்பு ரிஷியுடன் வாழ நினைப்பது தவறு என்று கீதாவின் மூளை  அவளிடம் உரைத்தது.

கீதாவிற்கும் அதுவேயெ உண்மை என்றுபட்டது. ஆனால், ரிஷியின் மீது அவள்  வைத்து  இருக்கும் காதல் அவளை அறியாமலேயே அவளது கண்களில் தெரிந்துது.

கீதாவின்  கண்களில் காதலை கண்ட ரிஷி அவனது ஆசைகளை அடக்க பெரும்பாடுபட்டான். அதும், பெரிய அத்தையின் முன்னாள் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஏண்டி, என்ன  படுத்துற? தனியா இருக்கும் போது பக்கத்துல வந்த வில்லனை பார்ப்பது போல பாக்குறது?  ஆனா , மனசு முழுதும் காதலுடன் இருக்கிறது.

மூணு வருஷம் என்டி  என்ன தவிக்க விட்டுட்டு போனாயா? இனி ஒருபோதும் உன்ன என்ன விட்டு போக விடமாட்டேன் டீ. என்று மனதிற்குள் பேசிக்கொண்டு இருந்தவனை பருவதம் அம்மாளின் குரல் தடுத்தது.

என்னப்பா, என்ன ஆச்சு? என் மருமகளை ஏன் அப்படி பாக்குற? என்று பருவதம் அம்மாள் கேட்ட பின்பு தான் கீதாவை ரொம்ப நேரமாக பார்த்துக்கொண்டு இருந்தது புரிந்தது. அதும் அத்தையின் முன்பு.

இப்பொழுது, என்ன சொல்வது என்று யோசிப்பவனை பார்க்கும் போது கீதாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

பருவதம் அம்மாள்  இருப்பது கூட மறந்து விட்டு. அப்படி என்ன பார்வை? லூசு லூசு என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

கீதா, வாய்குல்லையே சிரிப்பதை பார்த்தவனுக்கு சந்தோசம் தான். ஆனால், அத்தையின் முன்பு அவளை மாட்டிவிடவேண்டும் என்று நினைத்தவன்.

அது ஒன்னும் இல்ல அத்தை,  உங்க மருமகள் பார்க்க ரொம்ப சின்ன பெண்யா இருக்காங்க? ஆனா, இவங்களுக்கு ஒரு குழ்நதைனு நம்ப முடில? அதான் பார்த்தேன்.

ரிஷி, தன்னை சீண்டவேயே இப்படி பேசுகிறான் என்பது கீதாவிற்கு புரிந்தாலும். பருவதம் அம்மாள் முன்பு  கீதா எதையும் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

பருவதம் அம்மாள் உட்கார்ந்து இருந்த பெஞ்சுக்கு வலப்புறமாக அமர்ந்து குழந்தையை வாங்கி கொஞ்ச ஆரம்பித்தாள்.

அவள் பதில் ஏதும் கூறாமல் குழந்தையை கொஞ்சுவதை பார்த்த ரிஷி மீண்டும் அவளை வம்பு  இழுக்க எண்ணினான்.

இவர்களது, கண்ணாமூச்சி ஆட்டம் பார்த்தவரேயே இருவர்க்கும் இடையில் பருவதம் அம்மாள் உட்கார்ந்து இருந்தார்.

மிஸ்  சாரி மிஸஸ் ராஜசேகர்  உங்களுக்கு சிட்னில எந்த ஹாஸ்பிடல்ல குழந்தை பிறந்ததுனு தெரிஞ்சுக்கலாமா? என்று அப்பாவி போன்று கேட்ட ரிஷியை கீதாவால் முறைக்க கூட  முடியவில்லை.

என்ன நீங்க கீதானேயே கூப்பிடலாம். இப்படி மிஸஸ் ராஜசேகர்னு எல்லாம் கூப்பிட வேணாம் என்று சற்று அழுத்தமாக கூறினாள்.

அவளது அழுத்தம் கலந்த பேச்சை பருவதம் அம்மாள் மனதிற்குள் குறித்து கொண்டார்.

ரிஷியோ கண்களில் குறும்புடன் அவளை பார்த்தான்.

கீதா ரிஷியின்  பார்வையை தவிர்ப்பதற்காக பருவதம் அம்மாளிடம் ரிஷியின் கேள்விக்கு பதில் கூறினாள்.

அம்மா, நம்ம ராஜகுட்டி  "The Fertility Centre Sydney" ஹாஸ்பிடல் பிறந்தான்.

இவன், பிறந்த பின்பு தான் சேகருக்கு உயிரேயே வந்தது. ஹாஸ்பிடல்ல இருந்த எல்லார்க்கும் ஸ்வீட் கொடுத்து ரொம்பவும் சந்தோஷப்பட்டார் .

சேகரின் சந்தோசம் கீதாவின் கண்களில் தெரிவதை பருவதம் அம்மாள் உணர்ந்தார்.

தீடிர் என்று அமைதியாக இருந்தவள், பருவதம் அம்மாளின் கைகள் இரண்டையும் பற்றி தனது கைக்குள் வைத்து கொண்டு

ராஜகுட்டியை, சேகர் கைகளில் வாங்குனதும் அவரோட கண்கள் கலங்கிடுச்சு ஏன்  தெரியுமா? என்று இரண்டுநிமிடம்  பருவதம் அம்மாளின் கண்களை பார்த்தாள்.

ஏன்யா? அவர் உங்களை அந்த நிமிஷம் அவ்ளோ மிஸ் பண்ணாருமா...... என்று கண்களில் கண்ணீருடன் கூறினால்.

பருவதம் அம்மாளுக்கும் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது.

ரிஷி கீதாவை முறைத்தான். கீதாவிற்கு என்ன செய்வது என்றேயே தெரியவில்லை.

 பழைய விஷயத்தை கூற போக அதற்கு பருவதம் அம்மாள் இப்படி அழுவார் என்று கீதா எதிர் பார்க்கவில்லை.

ரிஷிகோ, ஒரு புறம் கீதா எப்படி சேகருடன் ஒன்றாக பழகலாம் என்ற கோபம் இருந்தாலும். 

அத்தை, சேகரை பிரிந்து பட்ட துன்பத்தை நேரில் பார்த்தவன். அவரிடம் போய் இப்படி முடிந்ததை கதையை சொல்லி அழ வைத்துவிட்டாலேயே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.