(Reading time: 10 - 19 minutes)

அதும், சேகர் சேகர் என்று கீதா உரிமையுடன் கூறுவதை அவன் காதல் கொண்ட மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பருவதம் அம்மாள் மனது முழுவதும் சேகர் பற்றியே நினைத்தது. தனது மகன் அவனது குழந்தைக்கு தந்தையாகும் போது  கூட என்னை பற்றி தான் நினைத்து  இருக்கிறான்.

ஆனால், எனக்கு தான் அவனுடன் வாழ்வதற்கு கொடுப்பினை இல்லாமல் போய் விட்டாது. என்று வருந்தி அழ ஆரம்பித்தார்.

ரிஷியும் கீதாவும் எவ்ளோவோ சமாதானம் செய்தும் பருவதம் அம்மாள் அழுகையை அவர்களால் நிறுத்த முடியவில்லை.

இதற்கெயே இப்படி அழுபவர். ராஜகுட்டி பிறந்த கொஞ்ச நேரத்தில் பிரியா  இந்த வீட்டின் மருமகள் இறந்து விட்டாள் என்பது தெரிந்தால் என்ன ஆகுமோ? என்று பயந்தாள்.

பிரியா, தன்னிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு இறந்த தினத்தை கீதா எண்ணி பார்க்கையில் அவளது கண்களிலும் கண்ணீர் வர ஆரம்பித்தது.

கீதாவை பற்றி, அனைத்து  உண்மைகளும்  தெரிந்த ஒரேயே ஜீவன் அவள்தானேயே...... என்னை 

இப்படி தவிக்க விட்டுட்டு என் டீ போனாயா? என்று மனதிற்குள் நினைத்தவள் கண்களிலும் கண்ணீர் வர ஆரம்பித்தது.

கீதாவின் கண்களில் கண்ணீரை பார்த்த ரிஷிகோ மேலும் கடுப்பானது. இவ என்ன லூசா சும்மா இருந்தவங்களையும் அழவச்சுட்டு இப்ப இவளும் சேர்ந்து அழகுற?

ரிஷிக்கு தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது. இருவரின் அழுகையும் அதிகமானதேயே தவிர குறைந்த பாடில்லை.

இவர்களது அழுகையை நிறுத்த என்ன செய்வது என்று நினைத்து கொண்டு இருந்தவன் கண்ணில் கீதாவின் மடியில் உறங்கி கொண்டு இருந்த ராஜகுட்டி கண்ணில் பட்டான்.

உடனேயே, ரிஷியின் மூளையில் யோசனை முளைத்தது.

டேய் , ராஜகுட்டி என்ன மன்னிச்சுடு டா  என்று மனதிற்குள் நினைத்தவன் குழந்தையின் தொடையில்  இருவர்க்கும் தெரியம்மாள் லேசாக கிள்ளிவிட்டான்.

குழந்தை வீலென்று சத்தத்துடன் அழ ஆரம்பித்தது.

சுவிட்ச் போட்டது போன்று கீதா மற்றும் பருவதம் அம்மாளின் அழுகை நின்றது. இருவரும் குழந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார்.

பருவதம் அம்மாள் எழுந்து குழந்தையை தூக்கி தோலில் போட்டு தட்டி கொடுத்தார். குழந்தையின் அழுகை சிறிது மட்டுப்பட்டது.

கீதாவும், அவனது உடம்பில் ஏதேனும் பூச்சி கடித்து விட்டதா? என் தீடிர் என்று அழுகிறான் என்பது 

புரியாமல் ராஜகுட்டியின்  உடம்பை ஆராய்ந்து கொண்டு இருந்தாள்.

பெண்கள் இருவரின் தாய் பாசம் கண்டு ரிஷி நெகிழ்ந்து போயிருந்தான். ஆனால், ராஜகுட்டியின் அழுகையில் அவனுகேயே ஒரு மாதிரி ஆகிவிட்டது.  எல்லாம் இந்த கீதாவால் வந்தது. இவளை.....

என்று ரிஷி நினைத்து கொண்டு இருக்கும் போதேயே அம்மா இங்க பாருங்கம்மா? ராஜகுட்டி தொடைல ரொம்ம்ப சிகப்பா இருக்கு ஏதாவது பூச்சி கடிச்சு இருக்குமோ.... என்று ரிஷி கிள்ளிய இடத்தை பருவதம் அம்மாளுக்கு காட்டினாள்.

குழந்தையின் உடம்பு சிவப்பாக இருந்தது நாளவோ என்னவோ ரிஷி  லேசாக கிள்ளியது கூட ராஜகுட்டிக்கு பெருசாக  சிகப்பாக தெரிந்தது.

குழந்தையின் தொடையை பார்த்த பருவதம் அம்மாளுக்கும் பூச்சி தான் கடித்து இருக்கும் என்று தோன்றியது.

நாம,  இதுக்கு மேல இங்க இருக்க வேண்டாம். வாம்மா உள்ள போலாம் என்று பருவதம் அம்மாள் குழந்தையுடன் வீட்டின் உள்ளே சென்றார்.

குழந்தையும் இப்போது அழுகையை நிறுத்தி இருந்தது.

பருவதம் அம்மாளை பின் தொடர்ந்த கீதா வீட்டின் உள்ளேயே செல்லவிடாமல் எதோ தடுத்தது.

கீதாவின் ட்ரஸ்யை யாரோ பிடித்து இழுப்பது போல உணர்ந்தாள்.

திரும்பி பார்த்த கீதா, அவளது சேலையை ரிஷி பிடித்து கொண்டு இருப்பது தெரிந்தது.

இப்படி , தோட்டத்தில் ரிஷி தனது சேலையை பிடித்து இருப்பதை யாராவது பார்த்தால் என்னவாகும்?  அதும் சிவகாமிக்கு தெரிந்தால் அவ்வளவுதான். 

கீதாவின் பயமேயே ரிஷியின் மீது கோபத்தை ஏற்படுத்தியது .

கையை எடுங்கள், என்று ரிஷியிடம் கூறிவிட்டு வெடுக்கென்று சேலையை இழுத்து கொண்டாள்.

கீதாவின் கோபம், ரிஷிக்கு கீதா அவனை உதாசீனம் படுத்துவது போல இருந்தது.

ஏற்கனவேயே, சேகரை அவள் உரிமையுடன் அழைத்தது அவனுக்கு பிடிக்கவில்லை. 

இப்பொழுது, கீதா ரிஷியை  உதாசீனம் படுத்துவதும் அவனுக்கு பிடிக்கவில்லை .

பெஞ்ச்யில் இருந்து எழுந்து நின்ற ரிஷியின் கண்களில் தெரிந்த கோபத்தை கீதா நன்றாக உணர்ந்தாள்.

தீடிர் என்று கீதாவின் கையை பிடித்து இழுத்தான்.  ரிஷி இழுத்த வேகத்தில் கீதா அவன் மீது விழுந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.