(Reading time: 20 - 40 minutes)

32. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

லோ சரயூ”

“ஹாய் வேதிக்! எப்படியிருக்க?”

“நான் நல்லாயிருக்க! எனக்கெப்பவுமே உன்னை பத்தின கவலைதா.  நீ எப்படியிருக்க? ஒன்னும் பிரச்சனையில்லையே?”

“நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை! எல்லாமே மாறிடுச்சு! உண்மை சொல்லனும்னா நானே உன்னை மீட் பண்லாம்னு இருந்த.... நீயே ஃபோன் பண்ணிட்ட!”

“சூப்பர்! நான் ஃப்ரீதா மீட் பண்லாமா?”

“சாரி வேதிக்! என்னோட அண்ணிக்கு சீமந்தம் நடந்திட்டிருக்கு.  சோ இப்போ முடியாது.  எனக்கு எவ்ளோ ஹெல்ப் செய்திருக்க, அதை மறந்துட்டு இப்படி சொல்றனேனு தப்பா நினைச்சுக்காத”

“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு சரயூ? என்ஜாய் யுவர் டே! அப்போ நாளைக்கு பார்ப்போமா?”

“கண்டிப்பா! எங்க மீட் பண்லாம்?”

“உங்க வீட்டு பக்கத்துல இருக்க மார்க்கெட்டுக்கு வந்துரு!”

“ஓகே வேதிக்...நாளைக்கு பார்ப்போம்! பை”

மீதமிருந்த பொழுதை தாய் வீட்டில் கழித்தாள் சரயூ.

துதான் என்றில்லாமல் எல்லா பொருட்களும் கிடைக்கும் அந்த மார்க்கெட்டின் வீதிகள் எப்போதுமே மக்கள் நிரம்பி வழியும் வீதிகளாகும்.

‘இங்க எதுக்கு வர சொன்னா?’ கேள்வியோடு நின்றிருந்தவளினருகே வந்து நின்றது வண்டி.

உள்ளிருந்தபடியே இவளுக்கு காரின் முன் கதவை திறந்துவிட்டவன், இவள் ஏறியது, “ஹாய் சரயூ!” என்று புன்னகைக்க “ஹெலோ வேதிக்!” என்றாள்.

சில ஆண்டுகளாக சரயூவிடம் தொலைந்திருந்த நிம்மதியும் மலர்ச்சியும் தெரிய, “சந்தோஷமா இருக்க போல” என்றவனின் குரலில் இருந்தது, என்னென்று புரியாத போதும், “ஆமா வேதிக்! சஞ்சு முன்ன மாதிரி இல்லை.  ரொம்பவே மாறிட்டா” சொல்லும்போதே கண்களில் காதல் மின்னியது.

“அவனை நிக்க வச்சு கேள்வி கேட்ட... அந்த வீடியோவைக் கூட காண்பிச்ச! அதுக்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி நடந்துக்குறா.  பழிவாங்குற எண்ணமேயில்லாம, காலேஜ் டேஸ்ல் இருந்த அன்பான சஞ்சுவா மாறிட்டா.  எனக்கும் முன்னளவுக்கு அவன் மேல கோபமெல்லா இல்லை.  எல்லாரும் தப்பு செய்றது தானே! இப்போ திருந்திட்டா... அதுவே எனக்கு போதும்”

“இல்ல பழிவாங்குற எண்ணமேயில்லாத மாதிரி நடிக்க கூட நடிக்கலாம்... எதுக்கும் கொஞ்ச ஜாக்கிரதையா இருந்துக்கோ”

இவளுக்குமே இந்த பயமிருந்ததே! அது தேவையற்றதென அவன் செயல்களிருக்கிறதே...

“உன்னோட மனசு புரியுது! ஆனா அதுக்கான அவசியமே இல்லை வேதிக்” உறுதியுடன் கூற...

“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.  அந்த வீடியோவை பார்த்ததுக்கப்றம் தானே அவங்க கூட பழகுறதையே நிறுத்திட்ட... நீ சொல்றத பார்த்தா ரூபின், சௌம்யா, சஞ்சய்னு நாம பழைய மாதிரி ஒன்னா இருக்கலாம் போல”

உற்சாகமாக, “கண்டிப்பா வேதிக்! நெக்ஸ்ட் எப்போ ஃப்ரீயா இருப்பனு சொன்னினா, அவங்க எல்லாருக்கும் நாம சர்ப்ரைஸ் கொடுக்கலாம்” என்று அடுத்து எல்லோரும் ஒன்று கூடி, கல்லூரி காலத்துக்கே திரும்பி செல்ல உள்ளம் துள்ளியது.

“நல்லாதா இருக்கும் சரயூ! ஆனா இன்னும் இரண்டு நாள்ல நான் யூ.கே போறேன்” சோகமான குரலில் அவன் சொல்லவும்

“இப்போ இல்லைனா என்ன? கவலைய விடு! அடுத்து வரும்போது இந்த ரீயூனியனை வச்சுக்கவோம்” அவனை தேற்றினாள்.

பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்தவளுக்கு அவர்கள் பெங்களூரின் புற நகரை தாண்டியிருப்பதை இப்போது தான் கவனித்தாள்.

“எங்க போறோம் வேதிக்? வண்டி ஏன் அவுட் ஸ்கர்ட்டில் போகுது?”

“யூ.கே. போயி அங்கேயே செட்டில் ஆகுறதால, இங்கிருந்த சொத்தெல்லாம் வித்துட்ட.  இப்போ என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட் ஒருத்த வீட்லதா தங்கியிருக்க.  அதான் இங்க வந்திருக்கோம்”

“ஓ....” என்றவளுக்கு என்ன தோன்றியதோ, “சரி வேதிக்! நான் இங்கயே இறங்கிக்குற.  என்னைக்கு ப்ளைட்னு சொன்னினா, நாங்க எல்லாரும் ஏர்போர்ட் வரோம்”

“இங்க எங்க இறங்குவ சரயூ? அதோடில்லாம நான் உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்னுதா வீட்டுக்கே வண்டிய விட்ட”

முக்கியமான விஷயமா? மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிப்பதா? வேண்டாம்! எப்படிபட்ட முக்கியமான விஷயமாக இருந்தாலும் அதை நான் தெரிந்துகொள்ள வேண்டாம்! கணவன் மனம் மாறிவிட்டான், இனிமையான வாழ்க்கை அவளுக்காக காத்திருக்க எதை பற்றி பேசியும் மனதை குழப்பிகொள்ள விருப்பமில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.