(Reading time: 13 - 26 minutes)

“அதானே என்ன டா நீ இப்படி அப்பாவியா இருக்க”,என சாரதாவும் சேர்ந்து சிரிக்க அவர்கள் கேட்ட விதத்தில் திஷானிக்கே சிரிப்பை அடக்க முடியாமல் போக பற்கள் தெரியவே சிரித்தவளை தன்னுள் நிறைத்தான்.முதல் முறை அவள் இப்படி சிரித்துப் பார்க்கிறான்.அத்தனை வசீகரமாய் அவள் முகம் பிரகசிக்க அதை ரசித்தவாறே அவன் அமர்ந்திருந்தான்.

அதன் பின்னும் சிறிது நேரம் பேசிவிட்டு படுக்கச் செல்ல அபினவ் தானே அவளுக்கான இரவு உடையையும் எடுத்து வருவதாய் கூறி அவளை கீழறையிலேயே காத்திருக்கச் சொல்லிச் சென்றான்.

உடைமாற்றி அவளுக்கான உடையை கையில் எடுத்து வந்தவன் அவளிடம் நீட்ட உடைமாற்றி வந்தவள் கட்டிலில் அமர்ந்தாள்.

“திஷா டியர் தூக்கம் வருதா உனக்கு??இல்லல கொஞ்ச நேரம் பேசலாமா?”

“கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே அப்பறம் ஏன் என்னை கேக்குறீங்க?”,என்றாள் மெல்லிய சிரிப்புடன்.

“பரவால்ல நல்லா பேசுற இங்கேயே உக்காரலாமா இல்ல பால்கனிக்கு போலாமா?”

“ம்ம் அங்கேயே போலாம்”,என்றவள் எழுந்து செல்ல. அவள் அமர்ந்தபின் மற்றொரு சேரை எடுத்து அவளருகில் போட்டு அமர்ந்தான்.

ஏனோ இந்த இரவும் அமைதியும் தன்னவனின் பார்வையும் அவளை நெளிய வைத்தது.

“ஏன் அப்படி பாக்குறீங்க?”,என்றாள் அவனை ஓரப்பார்வை பார்த்தவாறு.

“ம்ம் நியாயமா இதெல்லாம் நிச்சயதார்த்தம் முடிஞ்சு பண்ணிருக்கனும் நீ தான் என்னை பாக்கவே மாட்டேன்னு சொல்லிட்டியே..”

“சாரி..அது..”

“ஹே கமான் உன்னை தப்பா எதுவும் சொல்லல இன்பேக்ட் உன்னை பத்தி எதுவுமே தெரியாம கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நினைச்சா அது ஒரு டிபரெண்ட் பீல் தான்..சரி சொல்லு எப்படி இருக்கு இந்த லைப்..அதாவது மிஸஸ் அபினவ் ஆ இந்த இரண்டு நாள் எப்படியிருக்கு?”

“ரொம்பவே விசித்திரமா இருக்குனுதான் சொல்ல தோணுதுங்க..இன்னும் இது கனவோனுதான் நினைச்சுட்டு இருக்கேன்..அதே நேரத்துல ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கேன்..நினைச்சு கூட பாக்காத வாழ்க்கையின் அழகான பக்கங்கள்..தேங்கஸ் பார் திஸ்”,என அவள் உணர்ந்து கூற

அவனோ வழக்கமான தன் விளையாட்டுத்தனம் எட்டிப் பார்க்க லேசாய் அவள் கையை கிள்ள சட்டென கையை நகர்த்தியவள் அவனை பார்க்க,”இல்ல ட்ரீம் இல்ல உண்மைதான்னு சொல்றேன்”,என லேசாய் சிரிக்க முறைக்க நினைத்தவள் முடியாமல் மென்னகைத்தாள்.

“அழகா சிரிக்குற திஷா பேபி..”,என்றவன் பின் சாய்ந்து இரு கைகளையும் தலைக்குப் பின் கொடுத்துஅமர்ந்துஅவளைப் பார்க்க அவளோ மெல்லிய குரலில்,

“எனக்கு நேத்துல இருந்து ஒரு விஷயம் தோணுது சொல்லட்டுமா?”

“என்ன திஷா சொல்லு..”

“இல்ல என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ணீங்க சரி..ஆனா நேத்துல இருந்து என்ன பாக்குற உங்க பார்வைல இருக்குற ஏதோ ஒண்ணு என்ன பேசவே விடாம ஆக்குது..உங்க பார்வையே அப்படி தானா இல்ல எனக்கு தான் அப்படி தோணுதானு தெரில..”,என மெல்லிய குரலில் கூறினாள்.

“பார்ரா டீச்சரம்மாக்கு என்ன ஒரு சந்தேகம்..பட் மனசுல வச்சுக்காம டேரெக்டா கேக்குறியே தட்ஸ் நைஸ்..

உன் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒருபதில் சொல்லு..என் பார்வையே அப்படி தானானு கேட்டியே எல்லார்கிட்டேயும் இஇப்படிதான் பேசுறேன்னு நினைக்குறியா?”

“இல்லை என தலையசைத்தவளுக்கு தெரியுமே தன்னிடம் மட்டும் தான் அவனின் பார்வை இப்படி பூவை மொய்க்கும் வண்டாய் சுற்றுகிறதென்று..சொல்லப் போனால் இந்த இருதினங்களிலேயே அவன் வீட்டில் யாருடன் எப்படி பேசுவான் என்பதையே ஊகித்து தான் இருந்தாள்.

“ஹப்பாடா இது போதும்..பட் நீ கேட்ட கேள்வி எனக்குமே இருந்தது..எப்போனா உன்னை பார்த்த முதல் தடவை..ஏனோ என்ன அறியாம உன் முகத்தை பாத்துட்டே இருக்க தோணிச்சு..அந்த ஒரு செகண்ட் அந்த ஒரு தாட் வச்சுதான் நாம கல்யாணம் வரை நா முடிவெடுத்ததே..நா ஈசி கோயிங் நேச்சர் தான்னாலும் யாரையும் கண்ணியமில்லாத பார்வை பார்க்க மாட்டேன்.

சைட் அடிக்குறது வேற ஆனா உரிமையான பார்வைனு படுறது வேற..உன்னை அன்னைக்கு ஸ்கூல்ல பாக்கும் போது எனக்கு அதான் தோணிச்சு..ஏனோ யாரோ ஒரு பொண்ணை பாக்குறதா எனக்கு தோணவேயில்ல..நா சொல்றதெல்லாம் வெறும் அஞ்சு பத்து நிமிஷத்துல நடந்த விஷயம்..

அப்படி யாரையும் பாத்தவுடனே எனக்கு எந்த பீலும் வந்ததில்ல திஷா..அதுலையும் இப்போ கல்யாணமும் முடிஞ்சப்பறம் உன்னை பாத்தாலே என் பார்வை நீ சொல்ற மதிரி மாறிடுது போல..”,என கண்சிமிட்டிச் சிரித்தான்.

“ம்ம்”,என்றவள் மெல்லிதாய் சிரிக்க சட்டென அவள்புறம் குனிந்தவன் முக்கியமா இந்தசிரிப்பு தான் காரணம்..அதுவும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்பா அம்மாவோட பேசும் போது சிரிச்சியே ப்பாபா டோட்டல் ப்ளட் அங்கேயே..”,என அவள் இதழ் ஓரத்தில் தட்டி பின்னே அமர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.