"சிவன்யா உள்ளே போ!"அவள் ஏதோ கூற வாயெடுக்க,
"போ சிவன்யா!"அவன் குரல் அவளை அமைதிப்படுத்தியது.
"ஏ...அன்னிக்கு அவ்வளவு தூரம் சொல்லியும்,என் வீட்டு பையன் மேலே கை வைக்கிற அளவு வந்துட்டியா நீ?"
".................."
"எவ்வளவு தைரியம் உனக்கு?என் வீட்டுக்கே வந்து,ஒரு குற்றவாளி மாதிரி அவனை இழுத்துட்டு வந்துருக்க?"-அவனது சட்டையை பற்றினார்.
"கையை எடுத்துடுங்க நவீன் குமார்!வயசுக்கு மரியாதை கொடுத்து நிற்கிறேன்!"
"இல்லைன்னா என்னடா பண்ணுவ?அன்னிக்கே எச்சரித்தும் நீ இவ்வளவு தூரம் வந்திருக்கன்னா,இதுக்கு மேலே உன்னை விட மாட்டேன்டா!"
இங்கே இத்துன்பம் நிகழ,தாயின் அறைக்கு சென்ற சிவன்யாவின் மனமோ நிலைக்கொள்ளாமல் தவித்தது.
"மா!என்ன நடக்குது இங்கே?எதுவும் விபரீதம் நடக்காமல் தடுத்து நிறுத்துங்க!"மனமார வேண்டினாள் அவள்.
ஏனோ அசோக்கின் கரங்கள் அவருக்கு எதிராக எழும்ப மறுத்தன.மனதில் ஏதோ ஒரு தடை!ஏதோ தடுக்கும் உணர்வு.அதனால் அவரை தடுக்கவே முயன்றான்.இருவரும் சண்டையிட்ட வண்ணம்,இரு துருவங்களாய் மோதிக் கொண்டனர்.
"எவ்வளவு தூரம் சொன்னேன்!மரியாதையா அதர்வ்வை ரிலீஸ் பண்ணு!"
"இப்போவும் சொல்றேன்.கடைசிமுறையா எச்சரிக்கிறேன்!கையை எடுத்துடுங்க!இல்லைன்னா..."
"என்னடா பண்ணுவ?"-என்று அவனை தள்ள,அவன் நிலைத்தடுமாறி அன்னையின் அறைக்குள் விழுந்தான்.
"என்னங்க!"-பதறியவண்ணம் அவனை நோக்கி ஓடி வந்தாள் சிவன்யா.
அதற்கு மேலும் அவன் பொறுமை காக்கவில்லை.பொறுமை இழுந்து உள்ளே நுழைந்த நவீன் குமாரின் சட்டையை பற்றி அவன் உலுக்க,அவரால் அவனை எதிர்க்க இயலவில்லை.
"கையை எடுக்க சொன்னா எடுக்க தெரியாதா?நானும் மரியாதை கொடுத்தா,உன் இஷ்டத்துக்கு பண்ணுவியா?"அன்றுவரை அவனது இந்த முகத்தை காணாதவள்,உறைந்துப் போய் நின்றாள்.நடப்பது அனைத்தும் கை மீறுவதாய் ஒரு உணர்வு!!!சோக் ஆவேசமாய் நவீன் குமாரின் கழுத்தைப் பற்ற,கண நேரத்தில் வெடித்து சிதறி அங்கிருந்தோர் கவனத்தை ஈர்த்தது தர்மாவின் புகைப்படத்தின் மேல் ஔிர்ந்த சிறு ஔி விளக்கு!!அந்நிகழ்வு எவருக்கு அதிசயத்தை விளைவித்ததோ இல்லையோ,தாயாய் எண்ணிய அண்ணியாரின் முகம் நவீன் குமாரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.விழியை புகைப்படம் விட்டு நீக்காமல் விழித்தார்.
வாய் குழறியப்படி வெளி வந்தன,
"அண்ணி!"என்ற சொற்கள்!!
அவர் உதிர்த்த வார்த்தையின் பொருள் விளங்கவில்லை எனினும்,அவரை விடுவித்தான் அசோக்!!அவரோ எவரையும் காணவில்லை.தன்னை அறியாமல் நகர்ந்தார்.தன் மேல் அதீத அன்பை ஒரு காலத்தில் பொழிந்த ஜீவனை நோக்கி!!கண்கள் கலங்கிற்று!தவத்தில் இருந்தவனின் எதிரில் தெய்வதரிசனம் கிட்டியது.
எனில் இவன் யார்???
"இவங்க உனக்கு என்ன வேணும்?"தர்மாவின் முகத்தை உற்று நோக்கியவண்ணம் வினவினார்.
"தேவை இல்லாத கேள்வி நவீன் குமார்!மரியாதையா வெளியே போங்க!"
"ப்ளீஸ்...தயவுசெய்து சொல்லு!நீ யாரு?இவங்க உனக்கு என்ன வேணும்?"அவர் வேண்டுதல் அவனை கரைய வைத்தது.
"அவங்க என் அம்மா!"அவன் பதில் அவரது அத்தனை வருட தேடலுக்கு முற்றுப்புள்ளியை வைத்தது.ஆயிரமாயிரம் வசந்தங்கள்!!!யாவற்றையும் சாதித்த ஓர் எண்ணம்!!
"எங்கே இருக்காங்க?இப்போ இவங்க எங்கே இருக்காங்க?"அவனிடம் பதில் இல்லை.
"சொல்லு!"
"அவங்க உயிரோட இல்லை!"பூத்த அனைத்து வசந்த மலர்களும் கருகிப் போயின.உலகம் சுழல மறுத்தது.
"எதுக்கு கேட்கிறீங்க?"அவனது கேள்வி அவர் செவிகளில் விழவில்லை.
"என் அம்மாவை பற்றி கேட்க நீங்க யாரு?"-பதில் வர மறுத்தது.விடையை முந்தி,கண்ணீராய் ஆறாய் பெருகியது.
நெஞ்சை பிடித்து அமர்ந்துவிட்டார்.
"என்னாச்சு?என்னாச்சு சார்?சிவன்யா தண்ணீர் எடுத்துட்டு வா!"அவன் ஆணையிட அதனை நிறைவேற்ற ஓடினாள் சிவன்யா.
சில நொடிகள் அனைத்தும் பரபரப்பானது.அவர் அமைதியடைய கால தாமதம் ஏற்பட்டது.
மௌனமாய் இருந்தவர் அசோக்கின் முகத்தை கண்ணீருடன் பார்த்தார்.அவனது கன்னத்தைப் பற்றி உச்சி முகர்ந்தார்.
"உன்னை பார்ப்பேன்னு எதிர்ப்பார்க்கவே இல்லை கண்ணா!என் வேண்டுதல் வீண் போகலை!நான் செய்த எல்லாம் பிராயசித்தம் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது!"
அவன் ஒன்றும் விளங்காமல் பார்த்தான்.
"ஆம்!நீ எங்க வீட்டு வாரிசு!சூரிய நாராயணனனோட வாரிசு!எங்க வீட்டோட முதல் வாரிசு!"அவர் கூற்று அவனை திடுக்கிட வைத்தது.
"இவங்க என் அண்ணி!என் அம்மா!என் வீட்டோட குல தெய்வம்!நீ என் வம்ச வாரிசு!"அவன் பற்றிய இரகசியத்தை அவனிடம் போட்டு உடைத்தார் அவனது சிறிய தந்தை!!
தொடரும்!
{kunena_discuss:1149}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.