(Reading time: 10 - 20 minutes)

"ம்...!"-அவன் சென்று சில நிமிங்கள் கழித்து வந்தான்.மனசோர்வு அவளிடம் சீராக உரையாடாமல் தடுத்தது.ஏதும் பேசாமல் மெத்தையில் அமர்ந்தான்.

"இதை குடிங்க!"-அந்தக் குவளையில் பால் இருந்தது.

"எனக்கு பால் பிடிக்காதும்மா!!"

"ப்ச்...!முதல்ல குடிங்க!"-அவளின் வற்புறுத்தலுக்காக அதை வாங்கி,முகத்தை சுழித்தப்படி பருகலானான்.முதல் துளியே உயிர்வரை இறங்கியது அச்சுவை!!ஆம்...!இதே மருந்தை தான் அவனது தாயும் தயாரித்து தருவார்!!!அடுத்தத்துளி இறங்க மறுத்து சிந்தனையில் ஆழ்ந்தான் அசோக்.

"என்னாச்சு?"

"இல்லை...சூடா இருக்கு!"

"தொண்டைக்கு இதமா இருக்கும் குடிங்க!"

"ம்..."-அவன் அம்மருந்தை பருக,ஒரு கோலமாய் இருந்த அறையை தூய்மைப்படுத்தினாள் சிவன்யா.

விழிகள் அவனறியாமல் அவளிடத்தில் தஞ்சமடைந்தன.அந்த எழில் முகத்தில் எப்போதுமான துள்ளல் இல்லை.என்ன நேர்ந்திருக்கும்???

"அம்மூ!"-மெல்லிய குரலில் அவளை அழைத்தான்.

"ம்??"-தன் விழி பார்வையால் தன் அருகே அமர கூறினான் அசோக்.அவளும் அதற்கு கட்டுண்டு அவனருகே அமர்ந்தாள்.

"என்னாச்சு?ஒரு மாதிரி இருக்க?"-பதில் கூறாமல் அவன் முகத்தையே உற்று நோக்கினாள்.

"என்னம்மா??"

"2 நாளா உடம்பு சரியில்லை..ஒரு வார்த்தைக் கூட சொல்ல தோணலை உங்களுக்கு?கால் பண்ணும்போது கூட சொல்லலையே!"அவள் மௌனத்தின் காரணம் தெளிந்தது அவனுக்கு!!

"இல்லைம்மா!இது எப்போதும் வர சாதாரண ஃப்பீவர் தான்!சரியாகிவிடும்!"

"காரணம் நல்லா சொல்றீங்க!உங்க அளவுக்கு என்னால பேச முடியாது!முதல்ல அதை குடிங்க!நான் சாப்பிட எதாவது கொண்டு வரேன்!"அவனை நீங்கியவளை அவனது உறுதியான கரம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்தது!!

இதுநாள்வரை அதுபோலானான நெருக்கம் அவன் காட்டியதில்லை!அவனது அருகாமையில் தன்னை முழுதாக தொலைத்தவளுக்கு தெளிந்ததெல்லாம் அவன் மட்டுமே!!அவன் உடலின் நடுக்கத்தை சுயமாகவே உணர்ந்துக் கொண்டாள் சிவன்யா.

"ஸாரி!"-பாவமான,வலிகள் நிறைந்த குரலில் மன்னிப்பை வேண்டினான் அசோக்.அத்துடன் முடிவுக்கு வந்தது அவளது கோபம் அனைத்தும்!!

எதற்காகவோ ஏங்கிக்கொண்டிருக்கிறான்.ஆம்..!நிச்சயம் அவன் எதற்காகவோ ஏங்குகிறான் என்றது மனம்.

நீண்ட நேரம் நீடித்த அந்த மௌனம் எதற்காக நீடித்தது என்றே தெரியவில்லை இருவருக்கும்!!

ஏதோ உணர்ந்தவன் அவளிடமிருந்து விலக நகர்ந்தான்.

"ஸாரி!"தயங்கியது அவன் குரல்.

அவளிடமோ பதில் இல்லை.எவ்வாறு வரும் அவன் தான் அவளது சப்த நாடியையும் ஒடுக்கிவிட்டானே!!!

"சரி..!முதல்ல அதை குடித்து முடிங்க!நான் போய் உங்களுக்கு சாப்பிட எதாவது செய்து கொண்டு வரேன்!"அவள் முகத்தில் அரும்பிய புன்னகை,அவனது மனதில் புத்துயிரை பதிய வைத்தது.

"ம்...!"புன்னகை பூத்தான் அசோக்.அவள் எழுந்து வெளியேற மனம் ஏனோ இலகுவானதாய் ஓர் உணர்வு அவனுக்குள்!!!

மெல்ல எழுந்தவனின் கவனத்தை கலைத்தது அவன் கைப்பேசி அழைப்பு!!

"அசோக் குமார்!"கம்பீரம் குறையாமல் பேசினான்.

"சார்...சார்!நான் ஆபிஸ்ல இருந்து ப்யூன் பேசுறேன் சார்!"-பதற்றமாக ஒலித்தது ஒரு குரல்.

"சொல்லுங்க!என்னாச்சு?"

"சார்...கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நவீன் சாரோட ஆளுங்க வந்தாங்க!உங்களை கேட்டாங்க!நீங்க லீவுல இருக்கீங்கன்னு சொன்னோம்!ஆபிஸை அடித்து நொறுக்கிட்டு போயிட்டாங்க!"

"வாட்?"

"ஆமா சார்!நவீன் சார்கிட்ட அவங்க பேசுனதை கேட்டேன்.உங்களைத் தேடி தான் வராங்க!நீங்க ஜாக்கிரதையா இருங்க!"

"நான் பார்த்துக்கிறேன்!"-அவன் இணைப்பைத் துண்டிக்கும் போதே கீழே ஏதோ சலசலப்பு கேட்டது.கைப்பேசியை மேசையில் வைத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினான்.

"டேய் அசோக்!வாடா வெளியே!"கர்ஜனையாய் ஒலித்தது நவீன் குமாரின் குரல்.

"யார் நீங்க?"-பதற்றமான சிவன்யாவின் குரலும் கேட்டது.

"எங்கே அவன்?அசோக் குமார் எங்கே?"

"இங்கே!"-மாடியிலிருந்து குரல் தந்து இறங்கி வந்தான் அவன்.

"என்னங்க!யார் இவரு?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.