“இல்லை பெருசா ஒண்ணுமில்ல நா உங்ககிட்ட பழகுறத வச்சு என் டிபார்ட்மெண்ட் சீனியர்ஸ் கொஞ்சம் ஓவரா பேசிட்டாங்க..”
“என்ன சொன்னாங்க யாரு???”
“நத்திங் சீரியஸ் வழக்கமா காலேஜ்ல நடக்குற டீஸிங் தான்..பட் எனக்குதான் அதை மறக்க முடில “என்றவாறு அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தாள்..
அவளெதிரிலேயே நின்றவனின் அருகில் ஏஞ்சல் வந்தாள்,”அண்ணா அவ பொய் சொல்றா..நேத்து அவனுங்க என்ன பேச்சு பேசுனானுங்க தெரியுமா..நீங்களும் இல்ல என்கூட பொறந்த அந்த தடிமாடும் எங்கேயோ போய் தொலச்சுருச்சு..”
“என்ன சொல்ற ஏஞ்சல்???”
முதல்நாள் மதியம் வீட்டிற்கு கிளம்புவதற்கு தயாரானவள் தன் புத்தகங்களை பைக்குள் எடுத்து வைத்துக் கொண்டிருக்க ஏஞ்சல் விக்கியை பார்த்துவிட்டு வருவதாய் கூறிச் சென்றாள்..சட்டென ஒரு நான்கைந்து பேர் வகுப்பிற்குள் நுழைய என்னவென புரியால் முழித்தவள் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க அவளை சுற்றி அனைவரும் நிற்க செய்வதறியாமல் திகைத்தாள் ஹரிணி..
“என்ன விஐபி மேடம் எங்க போறீங்க??உங்க ஆளுக்காக வெயிட் பண்றீங்களா???”
“யாரு நீங்க என்ன வேணும்??”
“ம்ம் உன் டிபார்ட்மெண்ட் சீனியரே தெரில ஆனா கரஸ் பையனை மட்டும் கரெக்ட்டா தெரியுமோ???”
“அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்..”
“ம்ம் திமிரு தான்..வந்த ஒரு வாரத்துல க்ளாஸ்ல இருக்குற பசங்க பேர்கூட தெரியாது டிபார்ட்மெண்ட் பத்தி தெரிஞ்சுக்கிறது இல்ல..கரெக்டா லஞ்ச் மட்டும் போய்டுவ போல???”
“நா யார்கூட வேணா ப்ரெண்டாயிருப்பேன் லஞ்ச் போவேன் அதை கேக்க உங்களுக்கு ரைட்ஸ் இல்ல..இப்போ நகருங்க நா போணும்..”
அவள் பயத்தில் பதிலுக்கு பதில் பேச பேச்சு வாதம் முற்றி கண்டபடி பேசிவிட்டனர் வந்தவர்கள் ஒரு கட்டத்தில் அவள் கண்ணில் நீர்கோர்க்க அதற்குள் ஏஞ்சல் விக்கியோடு தற்செயலாய் வர அப்படியே கிளளம்பிச் சென்றது அந்த கூட்டம்..ஏஞ்சல் வந்து அவள் தோள் பற்றியதுதான் தாமதம் அழுது தீர்த்துவிட்டாள் ஹரிணி..அவளை தேற்றி வீட்டிற்கு அனுப்புவதற்குள் ஒரு வழி ஆகிவிட்டாள்..
“நேத்து அந்த அழுகை அழுதுட்டு இன்னைக்கு உங்ககிட்ட இப்டி பேசிட்டு இருக்கா..அண்ணா நீங்க இத சும்மா விட்டீங்க நா உங்களோட பேசவே மாட்டேன்..எங்க க்ளாஸ்ல இருக்குற ஏதோ ஒரு க்ராக் தான் ஏதோ தப்புதப்பா சொல்லி வச்சுருக்கு..”என அவள் முடிக்கும் போது ரகு அந்த இடத்தில் இல்லை..
“ஐயோ ஏன் ஏஞ்சல் இப்படி பண்ண”, என அவளையும் இழுத்துக் கொண்டு அவன்பின்னே ஓட்டமும் நடையுமாய் ஹரிணி செல்ல அதற்குள் அவன் சம்மந்தப்பட்டவனை அடைந்திருந்தான்..ஏஞ்சல் அவளை அப்படியே தடுத்துவிட அவன் பேசுவதை கேட்கமுடியவில்லை முகபாவம் மட்டுமே தெரிந்தது…
முகத்தில் உணர்ச்சியில்லை கோபம் தெரியவில்லை ஆனால் அந்த கண்களில் இருந்தது முழுக்க முழுக்க எச்சரிக்கை..பேசி முடித்து அவனின் தோளை தட்டிய விதமே அவனின் கோபம் புரிந்தது..அங்கிருந்து வந்தவன் கேன்டீனை கைகாட்டி முன்னே செல்ல இருவரும் சென்று காலியாய் இருந்த இடத்தில் அமர்ந்தனர்..
“இந்தா டியர் உன் பேவ்ரட் டீ..உனக்கு காபி ஓ.கே தான??”என சாதாரணமாய் கேட்பவனை புரியாமல் பார்த்தாள் ஹரிணி..
“ஏன் அண்ணா சும்மா வந்தீங்க??நல்லா அடிச்சு பேசின அவன் வாய உடைச்சுருக்க வேண்டியதுதான??”
“ஏய் ஏண்டி உனக்கு இந்த கொலைவெறி??நானே அடிதடி ஆகலைநு சந்தோஷப்படுறேன் அது பொறுக்கலயா உனக்கு???” என பதட்டமாய் ஹரிணி கூற அவன் பலமாய் சிரித்தான்..
“இப்படி பச்சை குழந்தையா சிரிச்சுட்டே திடீர்நு ஏன் அந்நியனா மாறினீங்க??நா பயந்தே போய்ட்டேன்…”
“உன் ப்ரெண்ட் சொன்னத கேட்டேயில்ல இதுவே பத்தாதுங்கிறா நீ என்னனா இதுவே அதிகம்ங்கிற..ஆமா டியர் உனக்கு என்ன இவ மேல இவ்ளோ பாசம்??வெறும் ஒரு வாரத்துல??”
“அது எனக்கே முதல்ல தெரிலண்ணா ஆனா இவ பேசுறது பழகுறதெல்லாம் நம்ம காவி மாதிரியே இருக்குல அதான் ஒருமாறி க்ளோஸா தோணுது..”
“அது யாரு ஏஞ்சல்???”
அவ என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் ஹரிணி..சின்ன வயசுல இருந்தே பாக்குறவங்க எங்களை ட்விண்ஸானு தான் கேப்பாங்க எப்பவுமே ஒண்ணாதான் இருப்போம்..ஒரு த்ரீஇயர்ஸ் முன்னாடி உடம்பு சரியில்லாம அன்எக்ஸ்பெக்டடா அவ இறந்துட்டா..சொன்னா நம்ப மாட்ட ஒரு ஆறுமாசம் நானே அண்டர் ட்ரிட்மெண்ட்ல தான் இருந்தேன்..அதுக்கப்பறம் கவுன்சிலிங் ட்ரீட்மெண்ட்னு அவ என்கூட இல்லனு புரிய வச்சாங்க..