(Reading time: 17 - 33 minutes)

அதுக்கப்பறம் என் லைவ்ல ப்ரெண்ட்ஸ்நு யாருமே கிடையாது..இங்க வந்தப்பறம் இவங்க மூணு பேரும் இருந்ததால க்ளாஸ் டைம் தவர மீதி நேரம் புல்லா அப்படியே போய்டும்..நானா யார்கிட்டேயும் பேசவும் மாட்டேன்..ஆனா நீ வந்த அன்னைக்கு நீயா என் பக்கத்துல வந்து உக்காந்து ஒரு சிரிப்பு சிரிச்ச அப்போயிருந்தே உன்கூட பேசனும்னு தோணிட்டேயிருந்தது..அப்பறம் இன்ட்ரோ முடிஞ்சு நா கை குடுத்தப்போ நீ பேசினதுல ரொம்பவே க்ளோஸாய்ட்டேன்..அதனால தான் நா உன்னை லஞ்ச்க்கு கூப்டு வந்ததே..அந்த ரீசனை சொன்னப்பறம் அகிலும் உன்னை என்ன மாதிரிதான் பாக்குறான்..

என்றவளின் குரல் நடுங்க சற்றும் யோசிக்காமல் தன்  தோள்சாய்த்துக் கொண்டாள் ஹரிணி..

“ஏஞ்சல் ரிலாக்ஸ்டா..இப்போ எனக்கும் இருக்குற ஒரே ப்ரெண்ட் நீதான் சோ இனி நாம பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் ஓகே??”என சிரிக்க அவளும் சமாதானமடைந்தவளாய் புன்னகைத்தாள்..இருவருமாய் வகுப்பிற்கு கிளம்ப எத்தனிக்க அத்தனை நேரமும் அவர்களின் உரையாடலை ரசித்திருந்தவன்,

“ஹரிணி லஞ்ச்க்கு வந்துடு..ஏஞ்சல் நீதான் பொறுப்பு..”

“அதெல்லாம் கண்டிப்பா வருவேன் அவன் சொன்னதெல்லாம் கேட்டுகிட்டு என்ன ஏன் மாத்திக்கனும்??””

“அது சரி அப்பறம் எதுக்கு இப்படி மூஞ்சி வீங்குற அளவு அழுத???”

“அது வேற டிபார்ட்மெண்ட்..இப்படிலா யாரும் பேசி கேட்டு பழக்கமில்ல..என் அண்ணாவே என்ன திட்டினது கிடையாது அதான் சட்டுநு நிறைய பேர் வந்து அப்படி பேசினவுடனே ஒருமாதிரி டென்ஷன் ஆய்டுச்சு வேற ஒண்ணுமில்ல”, என்று சிரித்தவள் ஏஞ்சலை அழைத்துச் சென்றாள்..

நாட்கள் அழகாய் நகர அவர்களின் நட்பும் நிதானமாய் அதே நேரம் ஆழமாய் வளர்ந்து கொண்டிருந்தது..கல்லூரியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் ஏஞ்சல் அவள் பிறந்தநாளுக்காக ஹரிணியை அவள் வீட்டிற்கு அழைத்தாள்..

“ஐயோ பேபி உனக்கு தான் எங்கப்பாவ பத்தி தெரியும்ல வீட்டையே ரெண்டாக்கிருவாரு வேணாம்டா தப்பா எடுத்துக்காத..”

“அதெல்லாம் முடியாது நீ வந்துதான் ஆகணும் நாளைக்கு நா உங்க வீட்டுக்கு வரேன் திரும்ப கிளம்பும் போது நீயும் வர”, என்று குழந்தையாய் அடம்பிடிப்பவளிடம் ஒன்றும் கூற தோன்றவில்லை ஹரிணியால்..அப்பா அவளை எதுவும் கடிந்து பேசாமல் இருக்க வேண்டுமென வேண்டிக் கொண்டேயிருந்தாள்..

அன்று இரவு தாயிடமும் அண்ணணிடமும் புலம்பிக் கொண்டிருந்தாள்..

“ஹர்ஷா நா எவ்வளவோ சொல்லிட்டேன் கேக்கவே மாட்றா..நா என்னம்மா பண்றது??”

நாளைக்கு அவள பாத்தா அப்பா நாதான் அவளை வீட்டுக்கு வரசொல்லி பெர்மிஷன் கேக்க சொன்னதா நினைப்பாரு..

“அடடா எதுக்கு நீ இப்படி பொலம்புற,நாளைக்கு அந்த பொண்ணு வரட்டும் அப்பவாவது ஊர்ல பொண்ணுங்க எப்படியிருக்காங்க தான் பொண்ணு எப்படியிருக்கானு தெரியட்டும்..”என ஹர்ஷா கடுப்பாய் கூற,

மதுரவல்லி அவனை சதானப்படுத்தினார்,”ஏன்டா இப்டி பேசுற அவரு சுபாவம் அப்படி உங்க நல்லதுக்காக தான சொல்றாரு..”

“ம்ம் ஆமா இத ஒண்ணு சொல்லிடுங்க..எல்லார் வீட்லயும் அண்ணன்தான் தங்கச்சிய எதாவது சொல்லிட்டேயிருப்பான்அப்பா அம்மா செல்லம் குடுப்பாங்க இங்க எல்லாம் தலைகீழ இருக்கு என்னவோ போங்க”, என ஆற்றாமையாய் தனதறைக்குச் சென்றான்..

றுநாள் விடிந்ததிலிருந்தே ஹரிணிக்கு மனம் படபடப்பாய் இருக்க நொடிக்கொரு முறை வாசலை பார்த்துக் கொண்டேயிருந்தாள்..பத்து மணியளவில் கார்சத்தம் கேட்டு கிருஷ்ணன் வெளியே எட்டிப்பார்க்க அதற்குள் ஏஞ்சல் உள்ளே நுழைந்திருந்தாள்..

“ஹாய் அங்கிள் எப்படீயிருக்கீங்க??”

அவளை ஆராய்ச்சியாய் பார்த்தவர்,”நல்லாயிருக்கேன் யாரும்மா நீ யாரு வேணும்???”

“நா ஹரிணியோட ப்ரெண்ட் அங்கிள்..இன்னைக்கு என் பர்த்டே..”

“ஓ வாம்மா உக்காரு..ஹரீணி உன் ப்ரெண்ட் வந்துருக்கா பாரு..”

அடித்துபிடித்து கீழே வந்தவள் அவருக்குத் தெரியாமல் அவளிடம் கையசைத்துவிட்டு பவ்யமாய் வந்து நின்றாள்..

“வா ஏஞ்சல் ஹேப்பி பர்த் டே”, என சாதுவாய் கூறுபவளை பார்த்தவளுக்கு தலைசுற்றாத குறைதான்..இருந்தும் எதையும் வெளிக்காட்டாமல் அவள் அமர்ந்ததிருக்க ஹரிணியின் தாய் அவளருகில் வந்து நின்றார்..

“இந்தாங்க ஆன்ட்டி”, என ஸ்வீட் பாக்ஸை கையில் கொடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றவள்,

“ஆன்ட்டி ஹரிணியை ஒரு டூ அவர்ஸ் என்கூட வீட்டுக்கு அனுப்புங்களேன் இங்க பக்கம்தான் நானே திரும்ப கொண்டு வந்து விட்டுறேன்..”

அவர் தன் கணவனை பார்க்க அவரோ ஹரிணியை முறைத்தார்..”இல்லம்மா அதான் நீயே வந்து பாத்துட்டியே அப்பறம் எதுக்கு வீட்டுக்கு???”

“இல்ல அங்கிள் எனக்கு இருக்குற ஒரே ப்ரெண்ட் இவ மட்டும்தான்..அவளுக்காக தான் நா இன்னும் கேக் கூட கட் பண்ணாம இங்க வந்தேன் ப்ளீஸ் அங்கிள்..ப்ளீஸ் ப்ளீஸ்..”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.