(Reading time: 17 - 33 minutes)

அவள் அணிந்திருக்கும் உடையிலிருந்து வந்த கார் வரை அனைத்தும் அவளின் வசதியை காட்ட மனம் உறுத்திய போதிலும் வந்த பெண்ணை ஏமாற்ற தோன்றாமல்,”சரி சாப்ட்டு உடனே கொண்டு வந்து விட்ரும்மா..”

“கண்டிப்பா அங்கிள் தேங்க் யூ தேங்க் யூ சோ மச்..ஹே ஹரிணி வா போலாம்..”

“இரும்மா அவ ட்ரெஸ் மாத்திட்டு வருவா நீ வா வந்து எதாவது சாப்டு..ஹரிணி பீரோல அந்த புடவை வச்சுருக்கேன் எடுத்துக்கோ..”

சரிம்மா என மாடிக்குச் சென்றவளை பார்த்து ஹர்ஷா என்னவென கேட்க,

“சரினு சொல்லிட்டாரு ஆனா வந்தப்பறம் ஆப்பு கன்பார்ம்”, என்றவள் சென்று தாய்கூறியபடி உடைமாற்றி வந்தாள்..

ஒருவழியாய் அவளில் காரில் ஏற்றியவளுக்கு ஹப்பாடா என்றிருந்தது..

“அம்மா தாயே என்னடி இதெல்லாம் ஷாப்பா முடில உங்க அப்பா ஒரு எம்டன்மகன் நாசர்னு சொல்லிருக்கலாம்ல.. “

“நா சொன்னேன் நீ தான் கேட்கல “,என்றவள் சிரிக்க ஏஞ்சல் அவளை செல்லமாய் அடித்தாள்..

கார் அங்கிருந்த மெயின் சிக்னலில் இடதுபுறமாய் திரும்ப,”ஹே அந்தபக்கம் தான உங்க வீடு இருக்குனு சொன்ன????”

“ஆமாடா ரகு அண்ணா வீட்டுக்கு ஒரு பைவ் மினிட்ஸ் போய்ட்டு போய்டலாம்..”

“என்ன ஏஞ்சல் அதெல்லாம் வேணாம் அப்பாக்கு தெரிஞ்சா என்ன கொன்னே போட்ருவாரு..ப்ளீஸ்..”

“ஹரிணி விக்கி அங்க வந்துருக்காருடா அதான்..ப்ளீஸ் ஒரு பைவ் மினிட்ஸ்..”

அதற்குமேல் அவளால் மறுக்க முடியவில்லை..அப்பாக்கு தெரியாம இருக்கனும் கடவுளே என மனதில் வேண்டிக் கொண்டு இருக்க அந்த பெரிய வீட்டின் உள்ளே நுழைந்தது கார்..

ஹரிணி மனம் ஒரு நிலையில் இல்லை வீட்டின் கம்பீரமே அவர்களின் உயரத்தை உணர்த்தியது..கல்லூரியில் எல்லோரோடும் சரிசமமாய் இருக்கும்போது வராத தவிப்பு இன்று வந்தது..தகுதிக்கு மீறிய நட்பு கிடைத்து விட்டதோ என பயந்தாள்..அதற்குள் ஏஞ்சல் அவள் கைப்பிடித்து உலுக்க நினைவிற்கு வந்தவள் அவளோடு உள்ளே சென்றாள்..

காலிங் பெல்லை அடித்துவிட்டு இருவரும் காத்திருக்க கதவை திறந்தவனோ இமைக்க மறந்து நின்றான்..அழகிய மயில்கழுத்து நிற சில்க் காட்டன் புடவையில் மயிலாய் நின்றவளை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை..

“ஹே வாங்க வாங்க என்ன ஒரு சர்ப்ரைஸ்..ஹேப்பி பர்த்டே டியர்..ஹரிணி வர்றதா நீ சொல்லவேயில்ல..”

“காலைல வர அவ வர்றாநு கன்பார்ம் இல்லண்ணா..அவங்க வீட்டுக்கு போய் அந்த எம்டன் நாசரை சம்மதிக்க வச்சு வர்றதுக்குள்ள “,எனும்போதே அவள் கையை அழுத்தமாய் கிள்ளினாள் ஹரிணி..

“ஆஆ வலிக்குது டீடீ..அண்ணா நா உள்ளே வரவா இல்ல இப்படியே கிளம்பவா..”

“சாரி சாரி வாங்க உள்ள..”

அந்த பெரிய ஹாலில் இருந்த ஒவ்வொன்றுமே பணத்தின் மதிப்பை உணர வைத்துக் கொண்டு இருந்தது ஹரிணிக்கு..ஏதோ அந்நியமாய் விடப்பட்டதாய் தோன்றியது..எப்போது கிளம்புவோம் என சோபாவின் நுனியில் அமர்ந்தவளை கவனித்தவன்,

”மேக் யுவர்செல்ப் கம்பர்டபிள் ஹரிணி ஏன் ரொம்ப நெர்வஸா தெரியுற??”

“ஆங்ங் அதெல்லாம் ஒண்ணுமில்ல..”,என பேருக்குச்  சிரித்தவள் குனிந்தவாறே வளையலை சரிசெய்து கொண்டிருக்க அவனோ முழு நேர வேலையாய் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏஞ்சல் குட்டி என சமையலைறையிலிருந்து லஷ்மி வர எழுந்து நின்றவள் என்ன செய்வதென புரியாமல் முழிக்க,

“ரகு யார்டா இது???”

“இவ பேர் ஹரிணிம்மா..ஏஞ்சலோட க்ளோஸ் ப்ரெண்ட்”, என அவளை பார்த்து சிரிக்க,கைகூப்பி ஹலோ ஆன்ட்டி என்றாள்..

“வாம்மா உக்காரு இத்தனை நாள்ல நா உன்னை பாத்ததேயில்லையே..”

“எங்களுக்கு சொந்த ஊர் தென்காசி ஆன்ட்டி இப்போ தான் இங்க ஜாய்ன் பண்ணி டூ மந்த்ஸ் ஆகுது..”

ஓ சரி சரி என்றவரின் கண்கள் தன்னெதிரில் இருப்பவளை அளவெடுத்தது..ஒல்லியான தேகம் ஐந்தரை அடிக்கும் அதிகமான உயரம் நல்ல சிவப்பு நிறம்..அனைத்திற்கும் மேல் முதுகை மறைத்து அவள் இடைவரை நீண்டிருந்த கூந்தல்..

அவளை கவனித்தவாறே ஏஞ்சலுக்கு தான் கொண்டுவந்த இனிப்பை ஊட்டிவிட்டவர் இந்தாம்மா நீயும் எடுத்துக்கோ என அவள் கையில் கொடுத்தார்..

தேங்க்ஸ் ஆன்ட்டி என சிநேகமய் சிரித்தவள் அதை வாங்கிக் கொண்டாள்..அதற்குள் ஏஞ்சல் தன்னவனை தேட அதை உணர்ந்த ரகு,டியர் விக்கி மாடில ஏதோ போன் வந்ததுநு பேசிட்டு இருக்கான் வா போலாம் ஹரிணி வா நீயும் என்று அவன் அழைக்க,

வந்துரேன் ஆன்ட்டி என்றவாறு அவர்களை பின் தொடர்ந்தான்..மாடி அறையின் கதவை திறக்க முழு அலங்காரத்தோடு கலர் விளக்குகளால் அறை ஒளிர பெரிய கேக்கோடு அவளை வரவேற்றான் விக்கி..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.