(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 08 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

யோசனையில் ஆழ்ந்திட்ட கௌஷிக்கினை சட்டென அருகில் கேட்ட குரல் கலைத்திட, திரும்பி பார்த்தவனின் விரிந்திட்டது….

“விக்கி…” என அழைத்தபடி உள்ளே வந்தவள், கௌஷிக்கினைப் பார்த்ததும், ஒருநொடி சிரம் தாழ்த்திவிட்டு, பின் விக்கியினைப் பார்த்தாள்…

“என்னாச்சு விக்கி?... என்ன பிரச்சினை?...”

அவள் கேட்டது தான் தாமதம் போல் மடமடவென்று அனைத்தையும் கொட்டி தீர்த்தான் விக்கி அவளிடத்தில்…

“தீபன் இப்போ அதுக்கு தான் போயிருக்கானா?...”

“ஆமாக்கா… ஆனா தீபனோட முயற்சி எவ்வளவு தூரம் ஜெயிக்கும்னு என்னால உறுதியா சொல்ல முடியலை…”

“ஏன் விக்கி அப்படி சொல்லுற?..”

“இல்லக்கா… எங்களோட ப்ரெண்ட்ஸ் யாருமே இப்போ பக்கத்துல இல்லை… கேர்ள்ஸ் யாரும் இப்போ டச்-ல-யும் இல்லை… இதுல தீபன் எப்படி?....”

அவன் யோசித்தவாறே சாருவினைப் பார்த்துக்கூற,

“கவலைப்படாத விக்கி… எதாவது ஒரு வழி கண்டிப்பா கிடைக்கும்… நம்பிக்கையை மட்டும் கைவிட்டுடாத…”

சாருவின் ஆறுதலான வார்த்தைகள் அவனுக்கு தைரியமூட்டிட, அவன் கௌஷிக்கினைப் பார்த்திட்டான் ஒரு தயக்கத்துடன்…

“விக்கி… ப்ளீஸ்… டோன்ட் வொரி…. ஃபர்ஸ்ட் உங்க சைட்ல எந்த தப்புமே இல்லை... அதனால நீங்க இப்படி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்குறதை விடுங்க…”

கௌஷிக் தன்மையாக அவனுக்கு எடுத்துக்கூறிட, விக்கியாலோ அது முடிந்திடவில்லை…

அவனின் முகவாட்டத்தினை கவனித்து, சாரு என்ன ஏது என்று கேட்டிட,

“இல்லக்கா.. இந்நேரம் வேற ஒருத்தரா இருந்தா, என்னை கிழிச்சி தொங்கவிட்டிருப்பாங்க… இன்பாக்ட் இனி என்னை இண்டஸ்ட்ரீயிலயே இருக்கவிடாம செஞ்சிருப்பாங்க… பட் கௌஷிக் சார் எனக்கு சப்போர்ட்டிவ்வா இருக்குறார்…. என்னை ஒரு வார்த்தைக்கூட திட்டலை… என்னால முடியும்னு நம்பிக்கை கொடுத்துட்டிருக்குறார்… இப்படி ஒருத்தரோட அட் அ என்னால நல்லபடியா முடிச்சுக்கொடுக்க முடியலையேன்னு தான் வருத்தமா இருக்குக்கா…”

விக்கி தன் மனதை மறைக்காமல் கூற, சாருவின் விழிகள் ஒருநிமிடம் கௌஷிக்கிடம் சென்று வந்தது…

“இந்த அட் மட்டும் சுரேஷ் சார் சொன்ன மாதிரி மார்க்கெட்டுல இரண்டு நாளைக்குல்ல வரலைன்னா, அது கௌஷிக் சாருக்கு பெரிய அவமதிப்பாயிடும்க்கா… ஆல்ரெடி ஏகப்பட்ட டிலே இந்த அட் எடுக்குறதுல… ப்ர்ஸ்ட் ப்ளான் பண்ணதுல இருந்து எல்லாமே டிலே தான்… உங்க சாங்க் கம்போசிங் கூட டைமுக்கு எடுக்க முடியாம போச்சு… இப்போ எல்லாம் கைகூடி வந்த நேரத்துல இந்த அனிதா பிரச்சினை பண்ணிட்டா…”

விக்கி சொல்லி முடித்ததும், தீபனிடமிருந்து விக்கிக்கு போன் வந்தது…

“சொல்லு… தீபா…”

“விக்கி… லீலா மட்டும் தான்டா இங்க இருக்கா… வேற யாரும் இங்க இல்லை… அவளும் இதுல நடிக்க தயங்குறா… அவளுக்கு ஆக்டிங்க் எல்லாம் வராதுன்னு யோசிக்குறாடா…”

“வேண்டாம் தீபா… நீ எதும் முயற்சி பண்ணவேண்டாம்டா… நீ வா… அவளுக்கு நெக்ஸ்ட் மந்த் மேரேஜ் வேற….”

“அதெல்லாம் யோசிக்காம நான் இருப்பேனாடா?... அவ வுட்பீ கிட்டயே பேசிட்டேன்… அவரும் ஓகே சொல்லிட்டாரு… பட் அவரோட பேரண்ட்ஸ் என்ன நினைப்பாங்களோன்னு தான் லீலா தயங்குறான்னு நினைக்கிறேண்டா…”

“நான் தான் சொல்லுறேன்ல… நீ வா… எந்த முயற்சியும் பண்ண வேண்டாம்… கிளம்பி இங்க வா…”

“இல்லடா… அவ வரலைன்னாலும் பரவாயில்லை… நான் நம்ம கிரிஷ் கிட்ட பேசினேண்டா…. அவன் நாளைக்கு இங்க வரானாம்டா… கன்பார்மா வரேன்னு சொல்லியிருக்குறாண்டா… அவனும் நானும் இருக்குறோம்லடா… அட் அ எடுத்துடலாம்…”

தீபன் நம்பிக்கையாக கூறிட, விக்கியோ பிடிவாதமாய் மறுத்திட்டான்…

“இல்ல தீபா… அது சரி வராது… இன்னைக்கே அட் முடிச்சாகணும்…. வேற வழி இல்லை… நீ கிளம்பி வா…”

விக்கி சொல்லிய கையோடு போனை அணைத்து டேபிளின் மீது போட்டிட, கௌஷிக் விக்கியின் அருகே வந்து அவன் தோளில் கைவைத்தான்…

“விக்கி… உங்களுக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லைன்னா, நானும், தீபனும் வேணும்னா இந்த அட் செய்யுறோம்…”

கௌஷிக்கின் வார்த்தைகள் விக்கியின் காதுகளில் விழுந்திட்ட நேரம் அவனுக்கு எதுவுமே புரிந்திடவில்லை…

“சார்…. நீங்க?...” விக்கி திக்கித்திணற வார்த்தைகளைக்கூறிட,

“யெஸ் விக்கி… எனக்கு ஓகே… தீபன் வரட்டும்… மேற்கொண்டு பேசிக்கலாம்…”

கௌஷிக்கின் அவ்வார்த்தைகள் அந்நேரத்தில் விக்கிக்கு பெரும் நிம்மதியை அளித்திட்டது…

தீபனும் அங்கே வந்திட, மூவரும் கலந்தாலோசித்தனர்… எனினும், விக்கியின் மனம் திருப்தியடையவில்லை…

“சார்… இதுல வச்சிருக்குறது ஒரு கர்நாட்டிக் சாங்க்… அதுக்கு கண்டிப்பா ஒரு பொண்ணு இருந்தா தான் நல்லா இருக்கும்… அப்படி இல்லன்னா, அந்த சாங்க அ எடுக்க வேண்டியிருக்கும்… அதுக்கு பதிலா வெறும் மியூசிக்கோ இல்ல வேர்ட்ஸோ ஃபில் பண்ணி அட் அ கம்ப்ளீட் பண்ணனும்… இதுல எதுன்னு நீங்க….”

விக்கி சொல்லி முடிப்பதற்குள்,

“சாங்க் எக்காரணத்தைக் கொண்டும் எடுக்க வேண்டாம் விக்கி…” என்றான் கௌஷிக் இடையிட்டு…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.