Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - துடிக்கும் இதயம் உனதே உனது!!! - 22 - மது - 5.0 out of 5 based on 2 votes
Pin It

22. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

அதிகமாக மனமகிழ்வுடன் சிரிப்பது இதயத்தின் ஆயுளை நீட்டிக்கும்

ருண் காயத்ரி திருமணம் முடிந்து சில நாட்கள் ஆகியிருந்த நிலையில் வர்ஷினி ராம் திருமணம் குறித்து ராமச்சந்திரன் வீட்டில் பேசிக் கொண்டிருந்ததை எதேச்சையாக வர்ஷினி கேட்க நேர்ந்தது.

உடனேயே கணேஷ் ராமை தொடர்பு கொண்டாள்

“ராம் எங்க இருக்கீங்க”

“நம்ம ஹாஸ்பிடல்ல தான்டா “

“ நான் வரேன் உங்களோட பேசணும்” என்றவள் அவனது பதிலுக்கு காத்திராமல் கட் செய்து விட்டாள்.

அன்று மாலை திருமணம் குறித்து கலந்து ஆலோசிக்க வர்ஷினி வீட்டிற்கு செல்லலாம் என சுமித்ரா கூறியிருந்தார்

அதைத் தான் வர்ஷினியிடம் சொல்ல வந்தான்.

அதற்குள் அவள் போன் கட் செய்து விட்டதால் நேரிலேயே சொல்லிக் கொள்ளலாம் என அவள் வருகைக்கு காத்திருந்தான்

அன்று பெரிய சர்ஜரி எதுவும் இல்லை ஆதலால் அவனது அறையில் அமர்ந்து ஓர் ஜர்னலை புரட்டிக் கொண்டிருந்தான்.

அவனது போன் சிணுங்க வர்ஷினியாக தான் இருக்கும் என நினைத்து “ சொல்லுடா அர்ஷூ” என்றான்

அவனது பெற்றோர் மற்றும் வர்ஷினிக்கு மட்டுமே அந்த போன் நம்பர் தெரியுமாகையால் அழைப்பு வர்ஷினியிடம் இருந்து தான் என நினைத்திருந்தான்.

“கரம் மசாலா உன் பேச்சுக் கா” எதிர்முனையில் குரல் கேட்கவும் உற்சாகமானான்

“பூரி மசாலா” அவன் குரலில் ஆனந்தம் கொப்புளித்தது.

“என்கிட்ட பேசாத போ” சிணுங்கனாள்.

“நீ என்கிட்ட சொல்லவே இல்ல...நான் அங்க வந்த போது கூட நீ ஒண்ணுமே சொல்லல” ஆதங்கப்பட்டாள்

“அப்படி எல்லாம் இல்ல பூரி. நீ இங்க வந்த போது நானே விடை தெரியாத புதிரில் சிக்கியிருந்தேன். சொல்லியிருந்தா நீ சாமி ஆடிருப்ப... அதான்”

மறுமுனை மௌனமாக இருக்கவே,

“நீ என்னை புரிந்து கொள்ளவில்லை என்றால் வேறு யார் புரிஞ்சுப்பாங்க” என அவன் சொன்னது தான் தாமதம்

“ஆஹா இந்த டயலாக்குகெல்லாம் குறைச்சலில்லை.... அக்காகிட்ட மட்டும் எல்லாம் சொல்லியிருக்க” படபடவென பொரிந்தாள்

வருண் காயத்ரி நிச்சயதன்று தானே அவனது தேவதை அவனிடம் வந்து சேர்ந்தாள்.

அன்று இரவே ஹரிணியிடம் அனைத்தையும் ஒப்பித்து விட்டிருந்தான்.

“மோன் செர்ரி நீயே பூரி மசாலாகிட்ட பக்குவமாய் சொல்லிடு.. பாஸ் கிட்டேயும்” என அவள் தலையில் கட்டி விட்டான்

“போதும்டா பூர்வி அவன் பாவம் “ கணேஷ் ராம் செவிகளில் அந்த கம்பீரமான குரல் ஒலிக்கவும் இருக்கையை விட்டு எழுந்தே விட்டிருந்தான்

“கரம் மசாலா ஸ்டான்ட் அட் ஈஸ்” பூர்வி பார்க்காமலேயே அவன் அட்டென்ஷனில் இருப்பான் என அனுமானித்துக் கேலி செய்தாள்

“பூர்வி” ஹரிணியின் குரல் ஒலிக்கவும் கான்பரன்ஸ் காலில் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர்

கதவை லேசாக தட்டியதும் பதில் இல்லாமல் போகவே உள்ளே நுழைந்த வர்ஷினி தான் வந்த அரவம் கூட அறியாமல் யாரிடம் அப்படி சந்தோசமாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறான் என்ற கேள்வியோடு அவனை ஏறிட்டாள்.

“ராம்” அவள் அழைப்பும் அவள் செவிகளை எட்டவில்லை.

வர்ஷினிக்கு இருப்பு கொள்ளவில்லை. அவன் அருகில் சென்று ராம் என மீண்டும் அழைக்க மெல்ல திரும்பியவன் , பேசுவதை நிறுத்தாமல் ஒற்றைக் கரம் நீட்டி அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

அந்த ஓர் செயலே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

அவன் யாரோடு பேசுகிறான் என்ன பேசுகிறான் எதுவும் அவளுக்கு முக்கியமாக படவில்லை.

“அர்ஷூ வந்திருக்கா...ஏதோ முக்கியமா பேசணும் என்று சொன்னா” அவள் பெயரை அவன் கூற கவனித்தாள்.

பூர்வியுடன் சேர்ந்து ஹரிணியும் அவனை கலாய்க்க

“ செர்ரி யூ டூ... டூ பேட் டார்லிங் “ அவன் சொன்னதும் ஹர்ஷவர்தன் ஒரு உம்ம் போட

“பாஸ் சாரி சாரி” என கணேஷ் ராம் சொல்ல அனைவரும் ஒரு சேர சிரித்தது வர்ஷினிக்கு தெளிவாக கேட்டது.

போனை அணைத்து டேபிள் மீது வைத்தவன் இரு கைகளாலும் அவளை அணைத்துக் கொண்டு “சொல்லுமா” என்றான்

அவன் முகத்தில் முன் எப்போதும் இல்லாத ஓர் பூரண மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

தான் சொல்லப்போகும் விஷயம் அவனது இந்த சந்தோஷத்தைக் கலைத்து விடுமோ என அஞ்சினாள்.

வேறு வழியில்லை சொல்லித்தான் ஆக வேண்டும்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் சொல்ல சொல்ல அவளை அறியாமல் அவள் கண்ணில் நீர் வழிய அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

 சாரி ப்ரெண்ட்ஸ் சின்ன அப்டேட்டுக்கு. பொங்கல் வகேஷனுக்கு ஊருக்கு வந்ததால் கொஞ்சம் பிஸி

இதயம் துடிக்கும்

Episode # 21

Episode # 23

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Madhu Honey

Madhu Honey

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - துடிக்கும் இதயம் உனதே உனது!!! - 22 - மதுShanthi S 2018-01-23 07:13
nice update Madhu (y)

Varshini sonnathu enna ena therinthu kolla curious aga iruku :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - துடிக்கும் இதயம் உனதே உனது!!! - 22 - மதுAdharvJo 2018-01-22 19:53
Madhu Ji teaser parthu ena irukkum epi la n partha epi is no bigger than the teaser :eek: We are happy for this cute little update. Don't feel sorry. Thank you for this masalas filled update.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - துடிக்கும் இதயம் உனதே உனது!!! - 22 - மதுmadhumathi9 2018-01-22 16:01
Super epi waiting to read more Adutha epikkaga waiting. :clap: :thnkx: 4 this epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - துடிக்கும் இதயம் உனதே உனது!!! - 22 - மதுSAJU 2018-01-22 14:55
NICE UD
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - துடிக்கும் இதயம் உனதே உனது!!! - 22 - மதுmahinagaraj 2018-01-22 14:13
nice..... :clap: :clap:
adi ena sonnanga namma heroine... :Q:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 19 Feb 2018 18:51
“மேடம்.... இந்நேரம் நல்ல வலி எடுக்கணும். ஆனா வலியே இல்லைன்னு சொல்றாங்க” பதட்டாமாய் கூறினாள் ராதிகா.

ராதிகா சுமித்ராவின் மாணவி. எனவே அவரிடமே வந்து ஆலோசனை கேட்டாள்.

“பேபி நார்மல் தானே” சுமித்ரா கேட்க ஆம் என்று தலையாட்டினாள் ராதிகா.

“வெயிட் செய்யலாம். நீ ரிலாக்ஸ் பண்ணு. ரொம்ப டென்ஷன் ஆகாதே” சுமித்ரா தட்டிக் கொடுத்தார்.

“ஹ்ம்ம் இவங்க சொல்லிட்டாங்க. டாக்டர் கணேஷ் வந்தார்ன்னா தெரியும் என் நிலைமை” என்று மனதிற்குள் புலம்பியவாறே மீண்டும் வர்ஷினியை பரிசோதிக்க சென்றாள்.

அதற்குள் அங்கே லக்ஷ்மி ராமசந்திரன் வருண் காயத்ரி அனைவரும் வந்து சேர்ந்திருந்தனர்.

“நான் உள்ளே போய் பார்த்து விட்டு வரேன் அத்தை” என்று கூறிவிட்டு காயத்ரி உள்ளே சென்றாள்.

*********************************************************

இன்றைய இறுதி அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...athe-unathu-madhu-24
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 06 Feb 2018 03:40
no mention Madhu
Madhu_honey's Avatar
Madhu_honey replied the topic: #3 05 Feb 2018 20:42
Thanks so much team

Chillzee Team wrote: வானவில்லை பிம்பமாய், அசைவதாக, perfect ஆனதாக இல்லாமல் பார்த்தாலும் கூட அழகு தான். உங்க கதை and கரு எப்போதுமே அழகு மது. அதனால் இதெல்லாம் எங்கள் கருத்தில் படாது. கவலை வேண்டாம். :-)

Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 05 Feb 2018 18:27
வானவில்லை பிம்பமாய், அசைவதாக, perfect ஆனதாக இல்லாமல் பார்த்தாலும் கூட அழகு தான். உங்க கதை and கரு எப்போதுமே அழகு மது. அதனால் இதெல்லாம் எங்கள் கருத்தில் படாது. கவலை வேண்டாம். :-)
Madhu_honey's Avatar
Madhu_honey replied the topic: #5 05 Feb 2018 11:38
Friends...Konjam last minute la update anupiyathaal spell check seiyamal vituten....sorry for that...

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top