(Reading time: 9 - 18 minutes)

கௌஷிக் சொன்னதைக் கேட்டு சாரு அவனைப் பார்ப்பதற்குள் தீபன் அவனை பார்த்திட்டான் புருவங்கள் உயர… இதழ்கள் மலர…

கௌஷிக்கின் வாயிலிருந்து உதிர்த்திட்ட வார்த்தைகள் அவனுக்கே வியப்பை அளித்தது அக்கணம்…

அந்த பாடலை எடுக்கக்கூடாதென்று அவன் கொண்ட கோபம் என்ன?.. இழந்த நிம்மதி என்ன?... இன்று அனைத்தையுமே ஓர் விநாடியில் தொலைத்தவனாகிப்போய் அவன் நின்று கொண்டிருக்கும் கோலம், அவனையே அவனுக்கு புதிதாய் காட்டியது…

“சார்… அந்த சாங்க் அ எடுத்துடலாம்… நம்ம கான்செப்ட்டுக்கு இந்த சாங்க் ஒத்து வராதே….”

தீபன் இயல்பாய் கூறிட,

“நோ வே… தீபன்…” என்றான் அவன் உறுதியாய்…

“சார்… நீங்க நாங்க கஷ்டப்படுவோமேன்னு எல்லாம் பார்க்க வேண்டாம்… கான்செப்டுக்கு முதல்ல அந்த சாங்க் ஆப்டா இருக்குமேன்னு தோணினதால தான அந்த சாங்க் வச்சீங்க… இப்போ அந்த சாங்க் இடைஞ்சலா இருக்கும்னா அத எடுத்துடுறது தான நல்லது சார்…”

“இப்பவும் அது ஆப்டா தான் இருக்கும்… ஏன் பசங்க நடிக்குற ஆட்-க்கு ஒரு ஃபீமேல் சாங்க் ஒத்து வராதா?... வர்ற மாதிரி ஆட் அ பண்ணிக்கலாம்… இல்ல பொண்ணு தான் கண்டிப்பா வேணும்னா நான் வேற ஒரு மாடலை அரேஞ்ச் பண்ணுறேன்… டைம் ஆனாலும் பரவாயில்லை… நான் சுரேஷ் சார் கிட்ட பேசிக்கிறேன்… பட் சாங்க் ரீமூவ் பண்ண வேண்டாம்…”

கௌஷிக் அழுத்தமாய் கூறிட, அங்கிருந்த மூவருக்கும் வியப்பு தான்…

கூறிய கையோடு, சுரேஷிடம் பேச அவன் செல்ல, விக்கியோ அவனை தடுத்தான்…

“சார்… சுரேஷ் சாருக்கும் உங்களுக்கும் தேவை இல்லாம பிரச்சினை வர்றதுக்கு நான் காரணமா ஆகிடக்கூடாது சார்…”

“விக்கி… எந்த பிரச்சினையும் வராது… நான் பார்த்துக்குறேன்… யூ டோன்ட் வொரி…”

சொல்லிவிட்டு சுரேஷிடம் போன் செய்து நிலைமையை புரிய வைத்துக்கொண்டிருந்தான் கௌஷிக்…

“தீபா… சார் கிட்ட நீயாவது சொல்லு… சுரேஷ் சார் எப்படியும் ஓகேன்னு சொல்லமாட்டார்… நீயாவது போய் சொல்லுடா….”

“இருடா சுரேஷ் சார் என்ன சொல்லுறார்ன்னு பார்ப்போம்…”

“அவர் கண்டிப்பா ஓகே சொல்லமாட்டாருடா… எனக்கு நல்லாவே தெரியும்…”

“நீ ஏண்டா நெகட்டிவா யோசிக்குற?...”

“இல்லடா… கௌஷிக் சார் கேரக்டர் வேற… அவரோட கேரக்டர் வேற…”

“விக்கி….”

“யெஸ் தீபா… கௌஷிக் சார் கிட்ட பேசினது கொஞ்ச நேரம் என்றாலும், அவரோட பேச்சு, அவர் பழகுற விதம், எல்லாமே தனியா இருக்குடா… அவரோட உயரத்துக்கு இவ்வளவு சகிப்புத்தன்மை அதும் நம்மகிட்ட காட்டுறதெல்லாம் ரொம்பவே அதிகம்டா… பட் அந்த பந்தா கொஞ்சம் கூட அவருக்கு இல்லடா… அவரை நாம இதுக்கு மேலயும் கஷ்டப்படுத்தக்கூடாதுல்லடா…”

விக்கி சொல்வதும் தீபனுக்கு சரி என்றே பட, எனினும் கௌஷிக் இதில் எந்த முடிவெடுப்பான் என்ற எதிர்பார்ப்பு அவனுக்கு அதிகமானது…

கௌஷிக் சுரேஷிடம், அலட்டலோ, ஆர்ப்பாட்டமோ இல்லாது அமைதியாக அதே நேரம் தெளிவாக அழுத்தமாக ஆணித்தரமாக எடுத்துரைக்க சுரேஷும் கிட்டத்தட்ட குழப்பத்தில் ஆழ்ந்து போனார்…

“சரி கௌஷிக்… நானே பத்து நிமிஷத்துல உங்களுக்கு கூப்பிடுறேன்… வேற மாடல் எதும் அரேஞ்ச் பண்ண முடியுமான்னு பாத்துட்டு கூப்பிடுறேன்…”

“ஓகே… சார்…” என்றவன் போனை கட் செய்துவிட்டு, விக்கி மற்றும் தீபனின் அருகே வந்து, “சுரேஷ் சார் கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்னு சொல்லியிருக்குறார்… கண்டிப்பா நல்ல முடிவாதான் இருக்கும்… சோ வெயிட் பண்ணலாம்…” என கூற,

விக்கிக்கு நம்பிக்கையே இல்லை, சுரேஷ் நல்ல பதில் சொல்லுவார் என்று…

தீபன் விக்கியின் அருகில் சென்று அவனுக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்த போது, யாருமே எதிர்பாராத வகையில் நிகழ்ந்திட்ட ஓர் நிகழ்வு, அங்கிருந்த அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒரே நொடியில்…

“உங்க யாருக்கும் ஆட்சேபனை இல்லைன்னா, நான் இந்த அட் பண்ணுறேன்…”

சாரு உறுதியாக, தெளிவாக கூற, மூவருமே தூக்கிவாரிப்போட நிமிர்ந்து பார்த்திட்டனர் அவளை…

“சாரு………..” தீபன் புருவங்கள் உயர்ந்து குரல் வெளிவந்ததே தவிர, மேற்கொண்டு அவன் எதுவும் பேசிடவில்லை…

ஏனெனில், ஓர் அட் ஷூட்டிங்க் பார்க்க வந்த போதே பயந்த அவள், இன்று நடிக்கிறேன் என்று சொன்னால், அவனுக்கு அது பேரதிச்சியாக இருந்திடாதா…

“அக்கா… நீங்க?... என்ன சொல்லுறீங்க?...”

விக்கி பதட்டமும் சந்தோஷமுமாய் கேட்டிட,

“ஆமா விக்கி… நான் தான்… பட் எனக்கு நடிக்க வருமான்னு தான் தெரியலை… பட் ட்ரை பண்ணுறேன்… இந்த நேரத்துல யாரும் கிடைக்குறது கஷ்டம்னு வேற சொல்லுற… நீயும் எனக்கு தம்பி தான்… உன்னோட கஷ்டத்துக்கு என்னால எதுவும் உதவ முடிஞ்சா நல்லா இருக்குமே யோசிச்சேன்… எனக்கு இத விட்டா வேற ஒரு நல்ல உதவி இருக்க முடியாதுன்னு தோணுது… நீ என்ன சொல்லுற விக்கி?...” என்றாள் சாரு கேள்வியாய்…

“நான் சொல்ல என்னக்கா இருக்கு?... தீபன்கிட்ட நீங்க ஒரு வார்த்தை….”

விக்கி இழுத்திட, “இல்லடா… சாரு சொல்லுறது கரெக்ட் தான்… ஒரு ப்ரண்டா நான் உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைச்சேன்.. அதே போல அவளும் உன்னை தம்பியா நினைச்சு ஹெல்ப் பண்ண நினைக்குறா… இத நான் சொல்லி அவ செஞ்சா தான் எனக்கு உறுத்தலா இருந்திருக்கும்… அவளே தான முன்வந்து செய்யுறேன்னு சொல்லுறா… எனக்கென்னமோ இது வொர்க் அவுட் ஆகும்னு தான் தோணுது… ஆனாலும் கௌஷிக் சார் என்ன சொல்லுவார்னு தான் நான்…..யோ….”

தீபன் முடிப்பதற்குள், “விக்கி, எப்போ ஸ்டார்ட் பண்ண போறீங்க?...” எனக் கேட்டான் கௌஷிக் அவர்கள் மூவரையும் வியப்பிற்குள்ளாக்கி…

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.