(Reading time: 4 - 7 minutes)

17. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

வாடிய மலராய் இருந்தவளின் அருகே பரிதவிப்புடன் நின்று கொண்டிருந்தான் ப்ரசன்…

அவளை பரிசோதித்த மருத்துவர், “ஷீ இஸ் பைன்… லைட்டா ஹெட் இஞ்சுரி… அவ்வளவுதான்… நீங்க இப்பவே கூட்டிட்டு போகலாம்… ஒன் டே கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்தா போதும்…” என அவனிடம் சொல்லிவிட்டு அகல,

திரும்ப வந்த சுவாசத்தை தனக்குள் நுழைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தான் அவன்…

“இஷிதா…”

அவன் மெல்ல அழைத்திட அவள் விழிகள் அசைந்தது…

அவள் விழி திறந்த்தும் இருக்குடம் இடமும், கண் முன்னே நிற்கும் மனிதனும் புரிபட, குழம்பி போனாள் அவள்…

“நீங்க?...” அவள் பயமும், பதட்டமுமாய் கேட்டிட,

“ஒன்னுமில்லை… நீங்க கீழே விழுந்துட்டீங்க… அடிபட்டுடுச்சு… அதான்… ஹாஸ்பிட்டல்ல இருக்கீங்க…”

அவன் நிலைமையினை விளக்கிட, அவளோ பதிலே பேசவில்லை…

“டாக்டர் வீட்டுக்குப் போகலாம்னு சொல்லிட்டார்… நாம போகலாமா?...”

அவன் நாம் என்று அவனையும் சேர்த்து பேசிட, “இல்ல…. நான் போயிக்கிறேன்…” என்றவள் வேகமாக எழுந்து நிற்க, அவளால் சரியாக சமாளித்து நிற்க முடியாது தொய்ந்தாள்…

தாங்கி பிடிக்க முற்பட்டவனை தடுத்து, அங்கிருந்த பெட்டின் கம்பியை பிடித்து அவள் சாய்ந்து கொள்ள, அவனுக்கோ அவளின் மன நிலைமை புரிந்தது…

“தப்பா நினைக்காதீங்க… நீங்க ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்குறார்… உங்களால உடல்நிலையை யோசிச்சு தான் சொல்லுறேன்… உங்களை நான் வீட்டுல விட்டுடுறேன்… வாங்க…”

“உடல்நிலையா?...” என்றவளுக்குள் விரக்தி எட்டிப்பார்க்க, உதட்டில் உருவாக்கிக்கொண்ட செயற்கை புன்னகையுடன், அவனை ஏறிட்டாள் அவள்…

“தேங்க்ஸ்… என் சித்திரவதையை நீட்டிச்சதுக்கு…”

சொல்லி முடிக்கையில் இதயமெங்கும் ஓர் வலி உண்டாகி உயிர் பறித்த்து அவனுக்கு…

அவள் சொல்வதின் அர்த்தம் அவனுக்கு விளங்காமல் இல்லை… இருந்தும் அவளை இந்நிலையிலேயே விட்டுச் செல்ல அவனுக்கு மனமும் இல்லை…

“எல்லா ரணத்துக்கும் ஒரு மருந்து உண்டுங்க… அது மருந்து மாத்திரை தான்னு இல்லை… அன்பான உறவும், ஆறுதலான நட்பும் கூட அதை கொடுக்க முடியும்…”

அவன் தன்மையாக கூறிட, அவளின் புருவங்கள் சுருங்கியது…

“உறவா?... அப்படி எல்லாம் ஒன்னு இருக்கா?...”

அவளின் வார்த்தைகளில் வேதனை தென்பட, அவனுக்கோ அவள் வேதனையில் பங்கெடுத்து அவள் மன பாரத்தை போக்கிட வேண்டும் என்ற ஆதங்கம் எழுந்தது…

“நீங்க படிக்கிறீங்களா?...”

அவன் கேள்வி கேட்டிட, அவள் புரியாமல் பார்த்திட்டாள் அவனை…

“சொல்லுங்க படிக்கிறீங்களா?...”

“ம்ம்…”

“ஃபைனல் இயரா?...”

“ம்ம்….”

“எனக்கு உங்களை முதல் வருடமே தெரியும்….”

அவன் அமைதியாக சொல்ல, அவளிடத்திலோ கேள்விக்குறி…

“எப்படின்னு யோசிக்குறீங்களா?... ஒருநாள் உங்க ஹால்டிக்கெட் தேடி வந்தீங்க… நினைவிருக்கா?... சாயங்கால நேரம் காலேஜ் முடிஞ்சு வீட்டுக்குப் போயிட்டிருக்கும்போது…”

அவன் சொல்ல சொல்ல, அவளுக்கு அந்நாளின் நினைவு வந்திட்டது…

“அன்னைக்கு ஒருத்தர் ஹால்டிக்கெட் எடுத்து கொடுத்தாரே… அது இவர் தானா?...”

அவளின் எண்ணங்கள் பின்னோக்கி சென்று அவனை நினைவுபடுத்திட, அவளுக்கு அவன் முகம் நினைவுக்கு வரவில்லை கொஞ்சமும்…

“அது நீங்க தானா?...”

நினைவில்லாதது வாய் வார்த்தையாகவும் அவளிடமிருந்து வெளிவர, அவனுக்கு வலித்தது லேசாய்…

அவளுக்கு நினைவில்லாது போயிருக்கலாம்… ஆனால் அவனுக்கு?...

ஒருநாள் கூட அவளை அவன் நினைக்க தவறியதில்லை ஒருபோதும்… ஆனால் அவளுக்கோ அவர்கள் சந்தித்துக்கொண்ட வேளை கூட நினைவில்லை என்பதை அவள் முகமே பறைசாற்றிட, ஏக்கத்துடன் அவள் முகத்தினை பார்த்தான் அவன்…

எழில் பூக்கும்...!

Episode # 16

Episode # 18

{kunena_discuss:1122}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.