(Reading time: 11 - 21 minutes)

“நிஜத்தை சொன்னேன் அனிதா…”

“இந்த திமிரெல்லாம் ஓரங்கட்டிட்டு நாளைக்கு நான் சொல்லுறவரை போய் பாரு…” என அவனிடம் அவள் ஒரு விசிட்டிங்க் கார்டை திணிக்க முயல, வெடுக்கென்று கைகளை விலக்க முயற்சித்தான் அவன் அவளிடமிருந்து…

“விக்கி… பிடி…. தேவை இல்லாம இதையும் பலர் பார்க்க வைக்காத….”

அவளும் சொல்லிக்கொண்டே அவன் கைகளில் திணித்திட, அவனோ அதனை வாங்காது விலக்கவே முயற்சித்துக்கொண்டிருந்தான்…

ஒருகட்டத்தில், இருவருமே கைகளோடு யுத்தம் நடத்த…

“விடுன்னு சொல்லுறேன்ல அனிதா…” என கூறியவன் தன் பலம் அனைத்தையும் பிரயோகித்து அதிலிருந்து விடுபட எண்ணி கைகளை விலக்கிட, சட்டென அவளின் கன்னத்தில் பதிந்தது அவனது கரம்…

அவன் கைகளில் கார்டை திணிப்பதையே குறிக்கோளாகக்கொண்டிருந்தவள், எப்போது இருவரின் கரங்களும் உயர்ந்து முகத்திற்கு நேரே வந்தது என்று கூட தெரியாது போராட, அவனும் அதிலிருந்து விடுபட எண்ணி கைகளை உதற, அங்கே எழுந்தது அந்த சத்தம்…

அவனின் கரம் பதிந்து எழுப்பிய சத்தம் அங்கிருந்தவர்களை இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள செய்திட, கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அவனை கண்ணீர் வழிய பார்த்திருந்தாள் அவள்…

நிமிடத்தில் நிகழ்ந்துவிட்ட செயலினது தாக்கம் விக்கி உணர்ந்த வேளை, அவளின் வெறுப்பினையே அவன் சம்பாதித்துக்கொள்ள நேர்ந்தது…

“அ…. அனி….. அனிதா….. சாரி…. கை தெரியாம பட்டுடுச்சு… சாரி அனிதா….”

அவன் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டிட, அவள் அதனை கேட்டிடும் மனநிலையில் இல்லை…

அவன் கெஞ்ச கெஞ்ச, அவள் அவனை ஒரு பொருட்டாகவே மதித்திடாது அங்கிருந்து கிளம்ப எத்தனித்திட, அவன் குறுக்கே சென்று வழி மறித்தான் மன்னிப்புக்கோரும் விதமாய்…

“அனிதா… ப்ளீஸ்… நான் சொல்லுறதைக் கேளு… நான் வேணும்னே செய்யலை… கை தவறி…”

அவன் சொல்லி முடிப்பதற்குள், கைகளை உயர்த்தி தடுத்தவள்,

“நீ நல்லா இருக்கணும்னு நினைச்சதுக்கு எனக்கு நீ கொடுத்த கிஃப்ட்… அதும் இத்தனை பேருக்கு முன்னாடி கொடுத்த கிஃப்ட் நான் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன் விக்கி… இன்னொன்னும் நீ மறந்துடாத… இனி லைஃப்ல எப்பவும் உன்னை நான் பார்க்கவே கூடாதுன்னு நினைக்குறேன்… அதுவும் இல்லாம என் மூலமா இனி உனக்கு எந்த உதவியும் கிடைக்க நானே விடமாட்டேன்… என் முகத்துல முழிச்சிடாத இனி…”

ஆதங்கமும், ஆத்திரமுமாய் அவள் கூறிவிட்டு செல்ல, அவனோ ஏதும் செய்ய முடியாமல் திணறிப்போய் நின்றான்…

அதன் பின் அவளை தொடர்பு கொள்ள நினைத்த பொழுதெல்லாம், அவள் அதற்கு அனுமதித்திடவே இல்லை… அதுபோக, அவனுக்கு எந்த விதத்திலும் அவள் உதவவும் முன்வரவில்லை…

அவனுக்கு உதவ முன்வர நினைத்தவர்களும், அவனது இவ்விஷயம் கேள்விப்பட்டு அவனை அணுகவில்லை… ஒரு விளம்பர நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட நபராக அவன் சித்தரிக்கப்பட, அவனுக்கு வர நினைத்த வாய்ப்புகளும் கை நழுவிப் போனது வெகுவாகவே…

அவன் கரம் அவளின் கன்னத்தில் பதிந்திட்டது போட்டோவாக செய்தித்தாளில் பிரசுரமும் ஆகிட, அவளது வெறுப்பு மேலும் பலப்பட, அவன் பலவீனமானான் மனதளவிலும் சரி… உடலளவிலும் சரி…

இப்படியே காலமும் கழிந்திட, ஒரு வருடத்திற்குப்பிறகு, அனிதா விளம்பரத்துறையின் உச்சத்தில் இருந்திட, அவனோ ஒரு அடி கூட அந்தப்படிக்கட்டில் எடுத்துவைத்திடவில்லை…

அவளின் நினைவுகள் வரும்பொழுதெல்லாம், அவள் அசிங்கப்படுத்தி சென்றதும், அவனை விட்டு விலகியதும் மட்டுமல்லாமல், அவள் தன் மேல் கொண்ட காதலும் நினைவுவர, அவன் பெரும்பாடு பட்டான்…

அவனை அந்நிலையிலிருந்து அப்போது காப்பாற்றியது தீபனும், சாருவுமே… அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை அவர்கள் இருவரும் தான் அவனுடனே இருக்கின்றனர் அவனுக்கு ஆதரவாய்…

சாருவின் இசைப்பயணத்தின் மூலம், தீபனுக்கு சில பிரபலங்களின் அறிமுகம் கிடைத்திட, அவனும் சாருவும் விக்கிக்கு உதவி செய்ய நினைத்தனர்… தீபனின் ஐடியாவே இந்த டீ அட்… அது அவனுக்கு கிடைத்திட தீபனே உதவி செய்தான் என்றால், அந்த உதவியும் சாருவின் தம்பி என்ற அடையாளமே அவனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தது…

சாருவுமே தீபன் அவனுக்கு செய்யும் உதவிகளையும் ஆதரவினையும் வரவேற்றாள்… திறமைசாலி என்றுமே தோற்றுப்போகக்கூடாது என்ற எண்ணம் சாருவினை விக்கிக்கு உதவி செய்யத்தூண்டியது அதிகமாகவே… அவனது திறமை மீது அவளுக்கு இருந்த நம்பிக்கையே அவ்வாறு அவளைத்தூண்டியது ஒருவகை என்றால், தீபனும் விக்கியும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள்… அவர்கள் இருவரின் குணங்களும், எண்ணங்களும் அவளுக்கு தெரியும் என்பதும் இன்னொருவகை எனலாம்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.