(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - மீள முடியாமல் உன்னுள்..! - 12 - பிரதீபா சுந்தர்

Meela mudiyaamal unnul

ம்ம்ம்மமா.............” என்று ககன், தூக்கத்திலிருந்து விழிப்பவன் போல... இவ்வளவு நேரம் அவனிருந்த மோன நிலையிலிருந்து விழித்தவன் அலறிய அலறலில்... காரிலிருந்த நால்வரும் பதறிப்போய் அவனை பார்த்தனர்... கார் ஒட்டிக்கொண்டிருந்த மேகனுக்கு தூக்கிவாரிபோட அவசரமாக ஓரம் கட்டினான்.

கன் மற்றும் தாராவின் பிறந்தநாளை ஒட்டி அவர்களின் குலதெய்வ கோவிலான ஸ்ரீசைலத்துக்கு சென்றுவிட்டு ஹைதராபாதிற்கு காரில் வந்துக்கொண்டிருந்தனர் ககனும்... அவன் தாய் தந்தையுடன் மேகன் டாலியும்.!

எதற்கு அலறினானோ ககன்... கார் ஓரமாக நின்றவுடன்.. முன் பக்கம் மேகனுக்கு அருகில் அமர்ந்திருந்தவன்.. கதவை திறந்துக்கொண்டு பின் பக்கம் அமர்ந்திருந்த அவனின் அம்மாவிடம் பாய்ந்து ஓடினான்.!

அவர்பக்கம் இருந்த கதவை திறந்து முகத்தை நுழைத்துக்கொண்டு அவரின் கைகளை பிடித்தபடி...

“ம்மா.... ம்மா... ம்மா.... உனக்கு ஞாபகம் இருக்கா ம்மா... நான் தாராக்கிட்ட முதன் முதலா போன்ல பேசினப்போ... நான் மீட் பண்ணலாம்னு சொன்னதுக்கு... என்னை பீச் ரோடுக்கு வரசொல்லி ஏமாத்தினா... நானும் லூசு மாதிரி கிளம்பி அதை உன்கிட்ட வேற சொல்லி... எப்படி பல்பு வாங்கினேன்... அதாவது அப்போ தாரா வைசாக்ல தானே ம்மா வொர்க் பண்ணிட்டு இருந்தா... அவ கூட படிச்ச பொண்ணு வீட்டுல தங்கிகிட்டு... இப்போவும் அங்கேயே போயிருப்பாளா ம்மா...?! சொல்லு ம்மா ப்ளீஸ்... ப்ளீஸ்... அங்க தானே தங்கி இருப்பா..?!. உங்களுக்கு தெரியும் இல்லையா டாலி...??!!  யாராவது ஆமாம்ன்னு சொல்லுங்களேன்.... ப்ளீஸ்....” என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டு.... கண்களில் கண்ணீர் தளும்ப... கிட்டத்தட்ட கெஞ்சினான்...

பொங்கும் ஆவல்.... விஷயம் புரிந்த சந்தோஷம்...  இந்த சின்ன விஷயம் ஞாபகத்துக்கு வராமல் இவ்வளவு நாட்களை வீணாக்கி விட்ட வெறுப்பு... தனது நினைப்பு நிஜம் தானா என்னும் சந்தேகம்.... இதோ, ரகசியத்தை கண்டுபிடித்துவிட்டேன் என்னும் குதூகலம்.... என்று ககனின் மனதில் பல எண்ணங்கள் எழ எழ... அதை அனைவருக்கும் விளங்கும்படி முகத்தில் பட்டவர்த்தனமாக காட்டிக்கொண்டிருந்தான்.

அவனின் முகத்தில் தோன்றிய உணர்வுக் கலவையை கண்ட அவனின் பெற்றோரும் டாலியும் ஒரு வினாடி மனதளவில் ஆடிவிட்டனர்... எவ்வளவு காதல் இருந்தால் இப்படி துடிப்பான்....! தாராவின் பிரிவு எவ்வளவு வருத்தினால் இப்படி பரிதவிப்பான்..!! ஹப்பா......!! குடுத்து வைத்தவள் தாரா.. இவனின் காதலை அனுபவிக்க...!

ஆனாலும் ஒரு இடத்தில் தவறி விட்டானே ககன்... மிக மிக முக்கியமான தருணத்தில்...!! ககன் அளவே அவனை காதலிக்கும் தாராவிற்கு எவ்வளவு வருத்தம் இருந்தால், அவள் இந்த பிரிவை நாடி இருப்பாள்...!!

மகனும் மருமகளும் படும் தவிப்பை... தங்களை ஏதும் செய்யவிடாமல் செய்துவிட்ட விதியை... நினைக்கும் பொழுதெல்லாம் வரும் வேதனையை... எப்போதும் அவர்களிடமிருந்து மறைப்பது போல்... இப்போதும் ககனிடம் திறமையாக மறைத்தனர்... அவனின் பெற்றோர்.! அவனின் தவிப்பை மேலும் கூட்டாமல் இருக்க..!!

“எனக்கு நிஜமா தெரியாது அத்தான்... நெஜம்...ம்மா..!!” என்று டாலி குரலில் கலக்கத்துடன் கூறினாள்..

“எங்களுக்குமே தெரியாது ககி கண்ணா... தாரா சொல்லவே மாட்டேன்னு சொல்லிட்டா... தெரிஞ்சிருந்தா எதாவது ஹின்ட் தந்து இருப்பேன்ல உனக்கு..” என்று அவனின் தந்தை குரலில் வருத்தத்துடன் கண்களை மூடிக்கொள்ள... அவரின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள் டாலி.

எப்பொழுதும் கணீரென்று பேசி சட் சட்டென்று முடிவெடுத்து விஷயத்தை முடிக்கும் தைரியமான ககனின் தாய்.. இப்பொழுது எதுவும் பேசாமல் அமைதியாக ககனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் துன்பத்தை அவனிடம் காட்டக் கூடாது என்று முயன்றவர்... அதில் தோல்வியுறும் முன், அதை அவரின் கண்களின் மூலம் கண்டுவிட்ட ககன், தன்னை தானே மானசீகமாக திட்டிக்கொண்டான்., அனைவரின் மூடையும் (mood) கெடுத்து அவர்களையும் வருத்திவிட்டதற்காக..!!

ககன், பெற்றோரை சமாளிப்பதற்காக... தன்னை தானே சமாளித்துக்கொள்ள.... அதற்குள் மேகன் சூழ்நிலையை கையாளத் தொடங்கினான், ஒரு சிலரின் உதவியுடன்.!

அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு... “டாலி டார்லிங்... உன் பக்கம் இருக்கற ஜன்னல் கிட்ட மட்டும் திரும்பிடாத.... ப்ளீஸ்.. ககி... நீயும் உன் பின்னாடி மட்டும் திரும்பிடாத... அப்படியே அட்ஜஸ்ட் பண்ணி டக்குன்னு உள்ள ஏறிடு... நான் காரை எடுக்க போறேன்” என்று மெல்லிய குரலில்.. எச்சரிக்கையுட்டன் கூற... இருவரும் ஆர்வமே இல்லாமல் அவன் சொன்னதற்கு எதிராகவே செய்தனர்..

அவளின் வலது பக்கம் இருந்த ஜன்னலுக்கு பார்வையை கொண்டுபோன டாலி, கண்கள் அகல... முகம் வெளிற... கைகள் தானாக மேலெழ...  மேகனின் டீஷர்ட்டை இறுக்கமாக பற்றினாள்.. இவர்களின் கார் நிறுத்தியிருந்த இடத்தின் எதிர் பக்கம்... நடுவிலிருந்த சாலையின் மறு கோடியில்... மிக மிக கம்பீரமான யானையார்கள்... அவர்களின் குட்டிகளோடு வந்துக்கொண்டிருந்தனர்... அவர்கள் மறுபக்க காட்டிற்கு செல்லும் வழியோ இவர்கள் இருப்பது..!!??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.