(Reading time: 11 - 22 minutes)

அடுத்து... காரின் கதவின் மேல் கைபோட்டிருந்த ககன், தனக்கு பின்னால் அசால்டாக முகத்தை திரும்பி பார்த்தான்... உடனேயே முன்னால் வந்து, டக்கென்று காரின் உள்ளே... அவனின் அம்மாவின் மடி மீது ஏறி அமர்ந்து கதவையும் அறைந்து சாத்திவிட்டான்...! ஏனென்றால்...... யாரோ போட்ட... இரண்டே இரண்டு தேங்காய் மூடிகளுக்காக... சிறியதும் பெரியதுமாக ஆறேழு குரங்குகள் ஒன்றை ஒன்று விரட்டியபடி போட்டி போட்டுக்கொண்டிருந்தன.... ககன் நின்றிருந்த இடத்திற்கு வெகு வெகு அருகில் இருந்த தாழ்வான மரத்திலும்.. அதன் கிளைகளிலும்....!!!

“நோ வே..... மூவ்... மூவ்.... மூவ் த கார்....” என்று ககனும் டாலியும் கோரஸாகக் கத்தியபடி... மேகனின் தோளையும் முதுகையும் பதம் பார்த்தனர்... ‘டப்.. டப்’ என்று தட்டி தட்டி...!!

மேகனைத் தவிர அனைவருக்கும் ஒரே ஒரு நிமிடம் உலகமே நின்று விட்டது... பின் அனைவரும் இருக்கம் தளர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்... அதுவும் ககனின் முகத்தை பார்த்து டாலியும்.. டாலியின் முகத்தை பார்த்து ககனும் சிரிக்க.... மற்ற மூவரும் அவர்களை பார்த்து சிரித்தனர்...

“என்ன டாலி... இப்போ வந்த யானை கூட்டத்துல, உன் கனவுல வந்த யானை இருந்துதா...” என்று ககன் கேட்டான்...

“ஹ்ம்ம்.... உன்னை துரத்தின குரங்கை நீ இப்போ பாத்தியா...?? அப்படின்னா... அவளும் பாத்து இருப்பா...” என்று அவனின் தந்தை பதில் அளித்தார்... அதற்கு பதிலாக ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தான், ககன்...

“இது என்ன மாமா புது கதை...” என்று டாலி கண்களை பெரியதாக விரிக்க... அதை கண்ணாடியில் மேகன் ரசிக்க... ககன் மற்றும் டாலிக்கான குட்டிக் கதைகள் அங்கு அரங்கேற.... அவர்கள் பயணமும் கேலி கிண்டலுடன் முடிவடைந்தது...! அந்த கதை மற்றும் கனவு இதோ.. உங்களுக்காக.

ரு நாள் காலை ககன் டேபிள் டென்னிஸ் கோச்சிங் கிளாசிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது... அவன் வீட்டு வாசல் கேட்டின் முன் இருந்த, ஒரு குட்டிக் குரங்கை இவன் துரத்த... அது அலறிய அலறலில் ‘அதன் மொத்த குடும்பம்’ என்று ககனால் கருதப்பட்ட ஒரு சின்ன குரங்கு மந்தியே அவனை துரத்த ஆரம்பித்தது. தெய்வாதீனமாக... கேட் திறந்தே இருந்ததால் சட்டென்று உள்ளே நுழைந்து வீட்டினுள் ஓடிவிட்டான்... அன்றிலிருந்து ககனுக்கு குரங்கு என்றாலே டெர்ரர்....!!!

சிப்பி இமையை மூடிக்கொண்டு உதட்டில் உறைந்த புன்னகையுடன் உறங்கிக்கொண்டிருந்த டாலிக்கு கனவு வராத நாட்களே இல்லை எனலாம்... அவளின் கனவுகளை வைத்து நானே ‘சொப்பனலோகம்’ என்று கதை எழுதி விடுவேன்.!! (ஹீ.. ஹீ...) விதவிதமான கனவுகள்... அர்த்தமே இல்லாதவை... கற்பனைக்கு அப்பாற்பட்டவை... என்று கூறிக்கொண்டே போகலாம்... அதுபோல் ஒன்று தான் கனவாக வந்தது...  அதற்கு பிறகு பல முறைகள் அதே கனவே வந்தது தான்.. பரிதாபம்.

சாலையில் யானை ஊர்வலமாக வந்துகொண்டிருக்க.... குட்டிப்பெண் டாலி, மாடியில் நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்... என்ன ஆனதோ... திடீரென்று அந்த யானை மாடிப்படி ஏறி வந்து... அவளை தும்பிக்கையால் தூக்கிக்கொண்டு... வானத்தில் பறந்தே விட்டது...!!!! (அடடே ஆச்சர்யக்குறி...!!!)

இதனாலே குரங்கைக்கண்டால் ககனுக்கும்... யானையை கண்டால் டாலிக்கும் ‘நோ.... நோ வே...!!!’

தாரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் தாரகேஷ்வரி.... ஹைதராபாத்தில் அவளின் காதல் கணவன் ககனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துவிட்டு... அதில் கலந்தும் கொள்ளாமல்... அவளின் குடும்ப நபர்கள்... அவளின் பிரியமானவன் கண்ணிலும் படாமல் அங்கிருந்து கிளம்பி உதய்யுடன் விமானம் ஏறி... கோவாவில் அவன் செல்லும் அதே நடிகையின் திருமணத்திற்கு செல்கிறாள்... இப்பொழுது தாரா பணி புரியும் அவளின் தோழி சந்திரிக்காவின் நிறுவனமே அங்கு வெட்டிங் ப்ளானராக இருப்பதால்...!

கண்களை மூடாமல் வானத்தையே வெறித்தபடி தனது நிலைவளைகளில் மூழ்கி இருந்தவளை உதய்யும் தொந்தரவு செய்யவில்லை... அவளின் மனமறிந்த... அதன் பாரம் அறிந்த... முக்கியமான சூழலில், அவளுக்கு தன் முழு ஆதரவையும் அளித்து.. அவளுடனேயே உறுதுணையாக நின்ற.. உற்ற தோழன் அல்லவா அவன்..! அவளின் மோனத்தை கலைக்காமல்... அவனின் மோகினியை நினைத்துக்கொண்டே வந்தான்.

தாரா... மூன்று வருடங்களுக்கு முன்பு, எம்.ஏ இன்டீரியர் டிசைன் முடித்துவிட்டு... வைசாகில்... அவளின் தோழியுடன், அந்த பெண்ணின் தந்தையின் அலுவலகத்திலேயே ஆறுமாதம் பயிற்சி பெற்றாள். பின்பு காதல், திருமணம் என்று வந்ததால்... ஹைதராபாதுக்கு வந்து அவளின் கனவான வெட்டிங் பிளானிங் கம்பெனியை, எம்.பீ.ஏ முடித்த காவ்யாவுடன் இனைந்து இரண்டு வருடம் முன்பு தொடங்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.