(Reading time: 11 - 22 minutes)

அக்காவும் தங்கையும் இனைந்து... தொழில் தொடங்கியதுடன் இல்லாமல்... அதில் வெற்றி பெற்றுக்கொண்டே.. அவர்களின் தந்தைகளுக்கும் உதவிக்கொண்டிருந்தனர். இதில் தாராவுக்கு அவளின் திருமணத்திற்கு பின்பான பொறுப்புகளும் உண்டு... அனைத்தையும் திறமையுடன் கையாளும் மகள்களை நினைத்து அவர்களை பெற்றவர்களுக்கு பெருமையோ பெருமை... கர்வம் என்றுகூட சொல்லலாம். தாராவின் மாப்பிள்ளை ககனும் அவனின் குடும்பமும் அவளை அற்புதமாக பார்த்துக்கொண்டனர். காவ்யாவுக்கு உதய்யை பேசிமுடிக்க தாராவின் திருமணத்தின்போதே முடிவெடுத்தனர்... ஆனாலும் உதய்யும் காவ்யாவும் திருமணத்துக்கு உடனே ஒத்துக்கொள்ளவில்லை... ஆதலால் இரண்டு வருடம் கழித்தே நிச்சயம் செய்தனர். இதோ இன்னும் சில மாதங்களில் திருமணம் கூட...

அழகான... அற்புதமான... இன்பமான... காதலான வாழ்வே வாழ்ந்து கொண்டிருந்தனர் தாராவும் ககனும்... ஒரு குறையும் தெரியவில்லை அவளுக்கு, ககனுடனான திருமண வாழ்வில்.. மேகன் டாலியின் திருமணம் வரை. அன்றே விளங்கியது தாராவுக்கு... கணவன் என்பவன் காதலை மட்டுமே அள்ளி அள்ளி வழங்கினால் போதாது... காதலுடன் பெண்ணவளின் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் பாதுகாப்பதுடன் அவளுக்கு ஆதரவாகவும் இருக்கவும் வேண்டும் என்று..! எந்த சூழ்நிலையிலும்...!! அவனையே நம்பி, தன ரத்த பந்தங்களை விட்டுவிட்டு... ஏன்?! சிலசமயம் அவர்களையே பகைத்துக்கொள்ளும் பெண்ணவளுக்காக...!!!

அந்த நிகழ்வை... அந்த பொழுதை நினைத்தாலே எப்பொழுதும் வலிக்கும் வலி இப்பொழுது கூட.. இம்மி அளவும் குறையாமல் வலித்தது... அவளின் இதயத்தில். இந்த வலியால் தான், தாராவால் ககனுடன் இயல்பான வாழ்வு வாழ இயலவில்லை... இந்த வலியுடனும்... அவனுக்கான அவளின் உணர்வுகளுடனும் போராட முடியாமல் அல்லவா, தாரா தற்காலிக பிரிவை நாடியது... இதோ... இரண்டு மாதம் முடியும் தருவாயில் கூட இப்படி வலிக்கிறதே மனது..!! என்ன செய்தால் தான் இந்த தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். தெரியவில்லையே அவளுக்கு... ஒரு வேளை, காயத்திற்கும் வலிக்கும் காரணமான ககனே மருந்தாக வந்தால் தான் தீருமோ...!! அப்படி தான் என்று அவளுக்கு விளக்குவது தான் யார்?! பதில் காலத்தின் கையில்....

கோவாவில்.. அந்த நடிகையின் விருப்பப்படி.. அவரின் திருமண ஏற்பாட்டின் தொடக்கம் முதல் முடிவு வரை ஒவ்வொன்றையும் ஆயிரம் மடங்கு கவனத்துடன் செய்தனர் தாராவும் அவளின் தோழி, சந்திரிகாவும். இதில் மிக இக்கட்டான தருணங்களும் வந்தன, தாராவுக்கு. நடிகையின் திருமணம் என்பதால், மீடியாவிற்கு பஞ்சமே இல்லை... அதன் கமெரா கண்ணிலிருந்து தப்புவது தாராவுக்கு பெரிய தலை வலியாகவே போய்விட்டது... அத்துடன் திருமண தினம் அன்று ககனும் அங்கு வருவதாக இருந்தது... ஆனால் உதய் தான், தாராவின் கெஞ்சலுக்கு இறங்காதவன், அவளின் கோபத்திற்கு இறங்கி (பயந்து) ககனை அங்கே வரவிடாமல் தில்லாலங்கடி வேலை செய்தான். அனைத்தையும் வெற்றிகரமாக சமாளித்து, தாராவும் உதய்யும், கோவாவிடம்விடை பெற்றனர்.

தோ.. அவர்கள் தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பி, அன்றாட பணிகளில் ஈடுபட்டு... இரண்டு வாரங்கள் ஆகி விட்டன... காவ்யாவை தொடர்புகொள்ளாமலே அவளை கவுக்கும் பணியில் தீவிரமாக இறங்கிவிட்டான் உதய்... திருமணத்திற்கு நாட்கள் அதிகம் இல்லையே.. அதற்குள் காவ்யாவே காதல் சொல்லவேண்டும்.. சொல்ல வைப்பான் என்று அவனின் மீசை மீதே அவன் சபதம் செய்திருக்கிறான், அல்லவோ... மீசையை காப்பாற்றிக்கொள்ள அவனுக்கு இன்னும் அறுபது சொச்சம் நாட்களே உள்ளன... (காவ்யாவுக்கு மீசை இல்லாத முகம் தான் பிடிக்குமாம்..!! ஹீ... ஹீ... )  தீயா வேலை செய்யோனும் உதய்..!!

வரும் ஞாயிறு உதய்யின் குடும்பமும்... காவ்யாவின் குடும்பமும் இனைந்து திருமண ஷாப்பிங் தொடங்க முடிவெடுத்துள்ளனர்.... காவீக்கும் உதிக்கும் ஒருவரை ஒருவர் சந்திக்கபோகும் ஆர்வம் இருந்தாலும் கொஞ்சம் குழப்பமும் இருந்தது... அவர்களும் குழம்பி.. நம்மையும் குழப்பிவிட்டனர். தாரா இல்லாமல் காவ்யா வரமாட்டாள்.... ககன் இல்லாமல் உதய் வர மாட்டான்... ககன் வந்தால் தாரா வர மாட்டாள்.... தாரா வந்தால், ககன் கண்டிப்பாக வருவான்... இறுதியில் யார் யார் வருவார்கள்?! யாருக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது?! ஒரு வேளை.... ககனும் வந்து.. தாராவும் வந்து விட்டால்..?! என்ன தான் நடக்கும்...??  

என்னதான் நடக்கும்? நடக்கட்டுமே.....!!

Hello makkale... thanks for your views, ratings and comments for the previous episode. It was such a good feel. Please do support me with your comments and ratings... and my apologies for the short updates in current and past weeks.... Life is going too busy and engaged from new year...  please adjust for few more updates... Then i will be coming up with few more pages... thanks in advance smile see ya... smile

Episode # 11

Next episode will be published on 21st Mar. This series is updated fortnightly on Wednesday Afternoons.

{kunena_discuss:1151}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.