(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - மீள முடியாமல் உன்னுள்..! - 11 - பிரதீபா சுந்தர்

Meela mudiyaamal unnul

ன்ன ஆச்சு... அம்மா கொஞ்சம் பில்ட்-அப் குடுக்கறாங்க..... அப்பா போன்ல பேசினப்போ விஷயம் என்ன.. பொண்ணு யாருன்னே தெரியாம.. என்கரேஜ் பண்ணினாங்க.. இப்போ அம்மா டவுட்டாவே சொல்லறாங்க.. என்கிட்ட நேரா சொல்லக்கூடிய விஷயமா இருந்தா சொல்லி இருப்பாங்களே... அப்பாகிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லுவாங்களோ... எதுக்கும் அவங்களுக்கு கொஞ்சம் டைம் குடுத்து நைட்டு அப்பாகிட்ட பேசிடனும்... ரொம்ப தள்ளிபோட கூடாது... ஆனா இப்போ விஷயம் என்னவாஇருக்கும்....?!’

அறையிலிருந்து வெளியே அனைவரும் இருக்கும் இடத்திற்கு வருவதற்குள் ககனின் மனதில் இவ்வளவும் யோசிக்க... அவனின் முகமோ அவனது தந்தையுடன் சிரித்தவாறு பேசிக்கொண்டிருந்த தாராவை கண்டதும் எல்.ஈ.டி. பல்பு போல பிரகாசமானது.

அப்பாவிற்கு தாராவை பிடித்துவிட்டால் போதும்.. எந்த சூழலிலும் அவரின் ஆதரவு அவனுக்கு இருக்கும் என்று அறிந்தவனுக்கு... அவரின் சிரித்த முகம் கண்ணில் பட... கண்டிப்பாக தாராவை அவருக்கு பிடித்துவிட்டது என்ற முடிவுக்கு வருவதற்குள் சட்டென்று நெற்றியில் கை வைத்துக்கொண்டான். அவருக்கு இன்னும் தாரா யாரென்று அவன் அறிமுகப்படுத்தவில்லையே...!!

“அப்பா... அவங்க காவ்யா... இவங்க தான் தாரா..... ஹ்ம்ம்.... முழுபேர்......” என்று அவளை பார்த்துக்கொண்டே முடிக்காமல் இழுக்க....

சின்ன சிரிப்புடன், “என் புல் நேம் தாரகேஷ்வரி, அங்கிள்.... அவ காவ்யமகேஷ்வரி “ என்றாள், தாரா.

“வாவ்...”என்று டாலி கூவ...

“நீலாம்பரின்னு ரம்யா கிருஷ்ணன் சொல்ற மாதிரி, கம்பீரமா இருக்கு நீங்க சொல்லும்போது...”என்று உதய் நிஜமாகவே ரசித்து சொல்ல...

“அவங்க வில்லி... நாங்க ஹீரோயின்... கம்பேர் பண்ணற ஆள பாரு...” என்று காவ்யா  சிறுபிள்ளை தனமாக நொடித்துகொள்ள... 

“என்ன சொன்னீங்க... காமெடி பீஸ்ஸா... சரியாய் கேட்கல...”என்று பதிலுக்கு உதய் பேச...

அவனை முறைக்கும் காவ்யாவை பார்த்து அனைவருக்குமே சிரிப்பு வந்தாலும், அது அவளை காயப்படுத்தும் என்ற எண்ணத்தால் சிரிக்காமல்... “உதி.......” என்று கோரசாக இழுத்தனர்...     

“சாரி... ஒரு ப்லொல(flow) வந்துடுச்சு...”என்று சீரியசாகவே மன்னிப்பு வேண்ட.... காவ்யா ‘பரவாயில்லை’என்பது போன்று புன்னகைக்க முயன்றாள்... தாரா அதுக்கூட செய்யாமல் நேரடியாகவே முறைத்தாள்.

“சரி அக்கா... போகலாமா...”என்று காவ்யா கேட்க.. ஏனோ தாரா அவனை முறைப்பது அவளுக்கு பிடிக்கவில்லை... விசித்திரமாக.!

“ஹ்ம்ம் சரி... ஆண்டி... ப்ளீஸ்...” என்று தாரா அவர்களின் கார்ட் ஒன்றை தந்தபின் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினார்கள்., ககனிடம் ஒரு அர்த்த பார்வை பார்த்தபடி... அதற்கு அர்த்தம் ‘உன்னிடம் இருந்து போன் கால் எதிர் பார்ப்பேன்...’என ககனுக்கு புரிந்தது.

அன்று முழுவதும் அவனின் போன்கால் எதிர் பார்த்து தாரா காத்திருப்பாள் என்று புரிந்தாலும், ககனால் இரவு வரை போன் செய்ய இயலவில்லை... வேலை வேலை என்று நாள் முழுதும் அலைந்தாலும் அவனின் மனதில் ‘தாரா எதிர்பார்ப்பாள்’ என்ற எண்ணம் விடாமல் வந்துகொண்டே இருந்தாலும், அவனின் தந்தையிடம் பேசாமல்... என்ன விஷயம்.. அம்மா ஏன் தயங்கினார்கள் என்று புரியாமல்.. அதன் காரணம் அறியாமல்... அதன் வீரியம் தெரியாமல்,  அவனால் தாராவிற்கு ‘பால்ஸ் ஹோப்(false hope)’ தர இயலவில்லை. அதை அவன் விரும்பவும் இல்லை. அதனால் அவனின் தந்தையிடம் கூடிய சீக்கிரம் பேசிவிட வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அன்றும் இரவு அவன் வீட்டுக்கு செல்வதற்கு  ஒரு மணிக்கு மேல் ஆனது... அன்று காலையிலேயே அவருடன் ககனும் உதய்யும் ஹோட்டல் விஷயமாக கலந்து பேசிவிட்டாலும், இந்த விஷயம் பேசுவதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை. ஒரு வேளை ‘நிராகரித்துவிடுவாரோ..?!’ என்று மனதில் உள்ள பயத்தால் இவன் சந்தர்ப்பம் அமைத்துக்கொள்ள முயலவில்லையோ...!!  

றுநாள்... டிசம்பர் மாத பனி புகைமூட்டம் வானிலிருந்து பூமிவரை போர்வை போர்த்தி இருக்க... அதை விலக்க ஆர்வம் காட்டாமல், சூரியன் சாந்தமாகவே வந்துக்கொண்டிருந்தான்.

இன்றாவது தந்தையிடம் பேசிவிட வேண்டும் என்று ககன், சற்று பதட்டமாகவே கிளம்பிக்கொண்டிருந்தான்.

அவன் கீழே செல்லும் நேரத்திற்கு அப்பாவும் அம்மாவும் காலை உணவு உண்டுக்கொண்டிருந்தானர். சத்தமில்லாமல் ககனும் சென்று அவர்களுடன் அமர்ந்தான், எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையுடன்... பின் முடிவுக்கு வந்தவனாக...

“நானா....” என்று இழுக்க...

பெரியவர்கள் இருவரும் ஆச்சர்யத்துடன் அவனை பார்த்தனர்... அதில் சிறிது வெட்கம் அடைந்தவனாக, தலை குனிந்துக்கொண்டான். அவனுக்கு தெரியும் அல்லவா... அவன் எதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் மட்டுமே அவனின் தந்தையை தாஜா செய்ய ‘நானா’என்று தெலுங்கில் அழைப்பான் என்று... அந்த செல்லமான சினுங்கலான ‘நானா’வில் அவர் கரைந்து உருகி, அவன் கேட்டதை தந்து விடுவார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.