(Reading time: 13 - 26 minutes)

அதுக்கு நாம இடம் குடுக்காம இருப்போம்.. ஆனா நம்பளையெல்லாம் மீறி பிரச்சனை வந்தால் அதை சமாளிக்க உங்களுக்கு மனசுல தில்லு வேணும்... அதை மீறி.. தாண்டி வர தைரியம் வேணும்... எங்க சப்போர்ட் கண்டிப்பா உங்களுக்கு தான்.. ஆனா மறைமுகமா தான்... அவர் உங்க அத்தையோட புருஷன்.. ஒரு அளவுக்கு தான் நாங்க பேசமுடியும்... புரியுதா கண்ணா“ என்று அனைவரையும்பற்றி அறிந்தவராக கவலையுடன் பேசி முடிக்க...

“ம்மா... எனக்கு புரியுது ம்மா... அவருக்காக என்னால தாராவ விட முடியாது ம்மா... அதே சமயம் இதைபத்தி எல்லாம் அவகிட்ட நான் விளக்கமா சொல்லி புரிய வைக்கறேன்... அப்புறம் என் காதலுக்கு சம்மதமும் வாங்கறேன்... ஒகேதானே... நான் தெளிவாகிட்டேன் ம்மா.. டோன்ட் வொர்ரி...ஆனா அப்படி என்னதான் மேட்டர் அவங்களுக்குள்ள.. தாரா கேட்டா சொல்லணுமே” என்று கேட்டான். அவர் அந்த சண்டையின் காரணத்தை விளக்க...

இவ்வளவு தானே பிரச்சனை என்ற எண்ணத்தில் மிகவும் உற்சாகமாகவே அவனின் அன்னைக்கு ஆறுதல் கூறினான்.  

“உன் மாமாவ அவ்வளவு ஈசியா எடுத்துக்காத ககி... ப்ளீஸ்... அண்ட் இதுல நீ தப்பு பண்ணினா எங்க சப்போர்ட் உனக்கு கிடைக்காது.. ஞாபகம் வெச்சிக்கோ...”என்று இறுதியில் கறாராக முடித்தார், ககனின் அம்மா.

ககனுக்கு இருந்த உற்சாகத்தில் அவனுக்கு தாராவிடம் உடனே பேச வேண்டும் என்ற ஆவல் கட்டுகடங்காமல் பொங்கியது... உதய்க்கு அவன் வர தாமதமாகும் என்று கூறிவிட்டு... நேற்று தாரா தந்த அட்ரஸ் கார்டை எடுத்து அவளின் நம்பர் இதில் எப்படி இருக்கும் என்று தேட... அது தாரா மற்றும் காவ்யா, இருவருக்குமான பிரத்யேக கார்ட் என்பது புரிந்தவுடன்... இன்னும் ஆர்வமாக தாராவின் நம்பருக்கு கால் செய்தான்.

முதல் ரிங்கிலேயே கால் கட் ஆகிவிட... சட்டென்று சுருங்கிய முகத்துடன் போனையே பார்த்தான். அவளுக்கு ககனின் நம்பர் தெரியாது என்பது அப்பொழுது தான் விளங்க... மறுபடி முகம் எங்கும் புன்னகை ஏந்தியபடி...

‘ஹாய்.. திஸ் இஸ் ககன்...’ என்று மெசேஜ் டைப் செய்தான். பின் ரொம்ப பார்மலாகஇருக்குமோ என்று அதை அழித்து விட்டு யோசனை செய்தான்... பின்,

‘ஹலோ பேபி......’ என்று டைப் செய்து அனுப்பியும் விட்டான்... அவள் கண்டுபிடிப்பாளா என்று நெஞ்சம் திக்..திக்.. என்று அடித்துக்கொள்ள.... அவளின் பதிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். ஒரு நிமிடம் ஐந்து ஆக... ஐந்து, பத்து நிமிடங்களாக... அவன் அறையின் படுக்கையில் அமர்ந்திருந்த ககன் அந்த நேரத்தில் நடந்தான்... பின் அமர்ந்தான்... அப்படியே படுத்தான்... பின் சற்று நேரத்தில் கண் அசந்து உறங்கியும் விட்டான்...

வ்வளவு நேரம் ஆனதோ... மெத்தையில் இருந்த போன் வைபரேட் ஆனதில்... திடுக்கென்று முழிப்பு வர... எழுந்து அமர்ந்தவன் ஆர்வத்துடன் மொபைலை பார்க்க... தாராவின் நம்பரில் இருந்து ‘ககன்..?!’ என்று பதில் வந்து இருந்தது.

‘யாஹூ...........’என்று மேதையில் விழுந்து.. உருண்டு.. கத்தி.. என்று அவனின் சந்தோஷத்தை அனுபவித்தவன்... அவனின் போனுக்கு முத்தமிட்டான். பின் அவனின் செயலில் அவனுக்கே வெட்கம் வர.... கண்ணாடியில் அவனின் முகத்தை பார்க்க.... இன்னும் வெட்கம் வெட்கமாக வந்தது ககனுக்கு...

“I want to meet you……” என்று இவன் பதில் அனுப்ப....

வெறும் சிரிக்கும் பொம்மையே பதிலாக வந்தது, தாராவிடம் இருந்து...

“I love you thaaraa...... Will you marry me?” என்ற மெசேஜ் இவன் அனுப்ப....

“with all my heart, gagan....”என்று அவளிடம் இருந்து உடனேயே பதில் வந்தது.

உடம்பெங்கும் ஒரு விதமான குளிர்ச்சியான உணர்வு குப்பென்று பொங்கிப்பெருக... பலப் பல ‘யாஹூ....’க்களுடன்.... எகிறி குதித்தபடி.... தானாகவே சிரித்தபடி... தாரா என்று முணுமுணுத்துக்கொண்டு என்று... அவனின் சந்தோஷத்தை அணுஅணுவாக அனுபவித்தான், ககன்.

தாரா என்னும் அழகுப் பெண்... ககனின் காதலை ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஏற்றுக்கொண்டாள் என்பது, ககனுக்கு மிகவும் கர்வமாகவும் இருந்த அதே சமயம்... தாராவும், அவளின் காதலும் அவனுக்கே அவனுக்கு என்பதில் அவனுக்குள் எழுந்த உணர்வை வார்த்தைகளில் சொல்ல சொன்னால் அவனாலேயே முடியாது...

“Thanks a ton baby…. I badly wanna meet you…. Please…”

“call me…” என்று அவளிடமிருந்து பதில் வந்தது.

மெசேஜில் காதல் சொல்லும் போதும்.. பேச வேண்டும் என்று கேட்கும்போதும் இதயத்தில் இல்லாத அந்த ‘திக்.. திக்’ உணர்வு.. இப்பொழுது அவனை ஆட்டி படைத்தது...  நடுங்கும் கைகளுடனும் பதறும் இதயத்துடனும் அவளுக்கு கால் செய்தான்.

இந்தமுறை முதல் ரிங்கிலேயே அவள் அட்டென்ட் செய்துவிட... இருவருக்கும் யார் முதலில் பேசுவது என்ன பேசுவது என்பதில் மிகப் பெரிய தாயம் எழ.. இரு நிமிடம் அமைதியாகவே இருந்தனர்... இருவரும் சுவாசிக்கும் சத்தம் மட்டுமே கேட்டது.

இரண்டு நிமிட தயக்கத்திற்கு பிறகு.. ககன்... “பேபி....” என்று குழைவாக அழைக்க....

“ஹ்ம்ம்... பேபி” என்று தாரா அவனை விட குழைவாக கூறினாள்.

அவளின் அந்த குரலில் இதுவரை ககன் அனுபவித்தே இராத உணர்வுகள் அவனின் நெஞ்சில் பொங்கி எழுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.