(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 13 - தேவிஸ்ரீ

En nilavu devathai

காலையில் அம்முவும், மித்ராவும் அவசர அவசரமாக காலேஜூக்கு கிளம்பி கொண்டிருந்தனர்.. இரண்டாம் வருடத்தின் முதல் நாள்.. இப்போது ஜூனியரிலிருந்து சூப்பர் சீனியர் ஆகி விட்ட பெருமையில் அம்மு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்..

படியில் இருந்து இறங்கி டைனிங் ஹாலுக்கு விரைந்தாள்.. அங்கு தாயம்மா யமுனாவுக்கு breakfast ஊட்டி கொண்டு இருக்க, அம்மு அதை கண்டு..

“தாயம்மா இது ஓவர்.. எனக்கு ஊட்டி விடுங்கன்னு உங்ககிட்ட இந்த ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன், எனக்கு ஒரு நாளாவது ஊட்டி விட்டிங்களா.. நேத்து வந்தவ, அவளுக்கு ஊட்டி விடுறிங்க.. இது எந்த ஊரு நியாயம்???....” என்றவள் தாயம்மாவிடம் ஊட்டி விடுமாறு தனது வாயை திறக்க...

“ஆமா.. ஏழு கழுத வயசாகுது.. நேத்து பிறந்த பொண்ணுகிட்ட போட்டி போடுறே.. இன்னும் 2 வருசத்துல கல்யாணம் பண்ணினா உன் கையில யமுனா மாதிரி குழந்தை இருக்கும்.. நீ இன்னும் குழந்தை மாதிரி நடந்துக்கோ...” என அவர் தலையில் அடித்து கொண்டார்..

அந்த நேரம் பார்த்தா விக்ரம் வர வேண்டும்.. வந்தவன் தாயம்மா கூறியதை கேட்டு அமைதியாக இருந்திருக்க வேண்டியது தானே.. அதை விட்டுவிட்டு என்னை பார்த்து லேசாக சிரித்து விட்டு என்னிடமே என்ன? ஓகேவா.. என சைகையால் வேறு கேட்கிறானே.. என அம்மு தன மனதினுள் புலம்பி கொண்டாள்..  

“ஐயா லவ் மட்டும் சொல்ல மாட்டாரு.. romanceகு மட்டும் குறைச்சல் இல்ல.. என் மெல்ல முணுமுணுத்தவள், சாப்பிட்டு விட்டு யமுனாவுக்கு முத்தம் கொடுத்து விட்டு கிளம்ப..

“எங்க போற, இன்னும் மித்ராதான் வரலையே..” என தாயம்மா கேட்கவும்,

“போம்மா.. அவ காரில் வரட்டும்.. நான் என் ஸ்கூடில போறேன்.. நான் என் ஸ்வீட் ஸ்கூடில போய் ரொம்ப நாள் ஆச்சு.. அதுவும் இல்லாம நான் இன்னைக்கு ஜூனியர் எல்லாரையும் ராக் பண்ணனும்...” என்றவள் நிற்காமல் ஓட, தாயம்மா பயந்தார்.. இந்த பொண்ணு பாதுகாப்பா காரில் போகாம தனியா போறாளே.. எனக்கு என்ன பண்றதுனே புரியலையே என மனதினுள் புலம்பியவர் உடனே போன் எடுத்து கொண்டு தனியே சென்றார்..

“ஹலோ சத்யா தம்பி, என பேசியவர் நடந்ததை விளக்கினார்..

“இத்தனை நாளா நீங்க ஏற்பாடு பண்ண டிரைவர் தம்பிகூட அவ பாதுகாப்பா போய்டு இருந்தா.. இன்னைக்கு காலையில் இருந்தே எனக்கு மனசு சரி இல்ல, இன்னிக்குனு வேற தனியா போயிருக்கா.. எனக்கு பயமா இருக்கு தம்பி..”

“நீங்க கவலை படாதிங்க மா.. அவளுக்கு 24 மணி நேரமும் ஒரு போலீஸ் வாட்ச் பண்ணிட்டு தான் இருக்காங்க.. நான் அவருக்கு போன் பண்ணி சொல்றேன்.. அவ safeஆ இருப்பா...” என்றவர் அவருக்கு தைரியம் சொல்லி போன்னை வைத்தார்.. பின் அவள் பாதுகாப்புக்காக போடப்பட்ட போலீஸ் கு போன் பண்ணி விவரத்தை கேட்டவர் அதிர்ந்தார்.....

தாயம்மாவுக்கு பயமாய் இருந்தது.. உடனே பூஜை அறையில் சென்று அனைத்து தெய்வங்களையும் பூஜித்தார்.. அவரது மொபைல் அலறியது... எடுத்து பேசியவரின் முகம் மாறியது.. உடனே மயங்கி விழுந்தார்..

மித்ரா டைம் பார்த்து கொண்டாள்.. ரொம்ப நேரமாகி விட்டது... இருந்தாலும் பரவாயில்லை.. காரில் சீக்கிரம் சென்று விடலாம் என நினைத்தவள் தாயம்மாவிடம் சொல்லி விட்டு கிளம்ப எத்தனிக்கும் போது தான் தாயம்மா மயங்கி விழுவதை கண்டவள் உடனே அவர் புறம் விரைந்தவள் தன அண்ணனை கூப்பிட்டாள்..

தாயம்மா மயக்கம் தெளிந்ததும் அவர் சொன்ன செய்தியை கேட்ட இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்... விக்ரமுக்கு இதயம் வலித்தது.. இப்போது வரை அவளிடம் தன் காதலை கூறாமல் விட்டதை என்னவென்று சொல்வது.. விக்ரம் வேகமாக இருவரையும் கூட்டிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தான்...

சத்யா ரிஷியிடம் என்ன நடந்தது என பேசிக்கொண்டு இருந்தார்.. அவருக்கு வருத்தமாக இருந்தது.. அவர் அம்முவை தன் மகளாகவே பார்த்தார்.. இப்படி நடக்கும் என அவரும் எதிர்பார்க்கவில்லை...

விஷயம் இதுதான்.. அம்மு தனியாக ஸ்கூட்டியில் செல்வதை கவனித்த சேகர் தன் ஆளிடம் கூற, அவனோ லாரியில் தடுமாறி வேகமாக வந்தவன் நேராக அம்முவின் மீது மோதினான்.. பின் அருகில் இருந்த மரத்தினில் மோதும்படி செய்து லாரியில் இருந்து குதித்து விட்டான்.. அவளை பின்தொடர்ந்து வந்த போலீஸ் அவனை கைது செய்து அம்முவை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்த்து சத்யாவிடம் தகவல் கூறவும், அவர் விரைந்து வந்தார்..

ரிஷி லாரி ஓட்டுனரை விசாரித்தான்.. தனது லாரியில் பிரேக் பிடிக்காததால் தான் விபத்து நடந்தது என்று சாதித்தான்.. லாரியை சோதிக்கையில் அவன் சொன்னது உண்மை என புலப்பட்டாலும், அது திட்டமிட்டு செய்த சதி என்று ரிஷிக்கு விளங்கத்தான் செய்தது.. அவனை அவர்கள் பாஷையில் நன்றாக விசாரிக்கும் படி சப்-இன்ஸ்பெக்டரிடம் உத்தரவிட்ட ரிஷி, சத்யாவிடம் இதை கூறிக்கொண்டு இருந்தான்..

அம்முவுக்கு பலத்த அடி பட்டிருந்தது.. தலை, கை, கால் என அனைத்து இடங்களிலும் அடிபட்டு உயிருக்காக போராடி கொண்டு இருந்தாள்.. பிளட் அதிகம் தேவை பட்டது.. உடனே ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.. ஆபரேஷனுக்காக கைஎழுத்தை சத்யா போட ஆபரேஷன் ஆரம்பிக்க பட்டது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.