(Reading time: 9 - 18 minutes)

23. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

ருள் சூழ்ந்து வெள்ளி நிலவு மலர்ந்து மின்மினிகளாய் நட்சத்திரங்கள் மின்னக்கொண்டிருந்த நேரம்..

அலைகடலில் அடித்துச்செல்லப்பட்டு சிறிது நேரத்தில் கரை ஒதிங்கும் பந்தைப் போல் தெப்பக்குள படிகளில் மயங்கிக்கிடந்தாள் தியா..

குளிர் காற்று உடம்பை நடுங்கச்செய்ய லேசாக முகத்தில் பட்ட நீர் துளிகள் கண்களைத் திறக்கவைத்தது பெண்ணவளை..

கண்களை அகல விரித்தவளுக்கு அகன்ற வானம் அழகாய் காட்சியளிக்க தள்ளாடியபடியே மெதுவாக எழுந்து நின்றாள்..

ஒரு படி மேலே ஏறியவள் கால்கள் தொய்வதுணர்ந்து அங்கேயே அமர்ந்து கொண்டாள் சோர்வாக..

தேகம் நடுங்க முயன்று குரலை வரவழைத்து,”அகிலா.. எங்கடா இருக்க..?? என்னால முடியல..”, என்றாள் கண்மூடியபடி..

உன் அழைப்பிற்காகத் தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன் என்பது போல் தியாவை அடைந்தது அகிலன்..

கண்மூடி அமர்ந்திருந்தவளின் கன்னத்தை வருடியவன் தனது உருவத்தை பெரியதாக்கி தனது ஒரு இறகால் அவளை அனைத்து விடுவித்தான்..

அவனது அணைப்பு தந்த கததப்பில் அவளது ஆடை காய்ந்ததென்றால் அவளது உடலும் மனமும் கொஞ்சமே கொஞ்சம் சுறுசுறுப்பானது..

நினைவு வந்தவளாக,”அந்த ஆச்சார்யா எங்கடா..?? என்னைக் காணாம்னு தேடலியா..??”,என்று கேட்டாள் யோசனையாக..

“அவர் உன்னைத் தேடினார் தான்..அப்புறம் எதையோ அவர் யோசிச்சிட்டு வீட்டிக்கு போயிட்டார்..”,என்றான்..

“ஓ.. சரி வா.. நாமும் போகலாம்..”,என்றெழுந்தாள் தியா..

“நடை சாத்திட்டாங்க..எப்படி வெளிய போறது..??”

“உன்னால வெளியே கூட்டிட்டு போக முடியும் தானே..??”

“முடியும் தான்.. ஆனால் உன்னை வெளியே அனுப்பக்கூடாதுன்னு எனக்கு உத்தரவு போட்டிருக்காங்களே..”

“உத்தரவா..?? என்ன உத்தரவு..?? யார் போட்டது..??”

“கொஞ்ச நேரம் பொறு.. அவங்களே உன்னைப் பார்க்க வரேன்னு சொல்லிருக்காங்க..”, என்றவன் அவளை யோசிக்க விடாது வளவளத்தவப்டியே நேரத்தை ஓட்டினான்..

Savathopathra... Viyoogam

தியா நீரில் இறங்குவதற்கு முன்.. குளத்தின் நடுவில் ஒரு கருடனின் சிலை இருப்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள்..

கிலா.. ரொம்ப போர் அடிக்குது.. இந்தக் குளத்தில் நீச்சல் அடிக்கலாமா..??”, என்று கேட்டாள் கண்கள் பளபளத்தபடி..

“இது கோயில் குளம்..அப்படியெல்லாம் பண்ணக்கூடாது..”, என்ற அகிலனின் பேச்சை அசட்டை செய்த படி குலத்துப் படிகளில் இறங்கத் துவங்கினாள்..

அவளது ஒவ்வொரு அடிக்கும் நீரின் மட்டம் திடீரென கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத் துவங்கியது..

அதை கவனிக்காதவள் அகிலனிடம், “அணிலு..என்னடா இது தண்ணீரையே காணோம்..?? வத்திப்போயிருச்சோ..??”, என்று கேட்டாள் குழப்பமாக..

“வத்திப்போயிருச்சா..?? என்ன சொல்ற நீ..??”, என்றான் அவனும் சற்றுக் குழப்பமாக இருப்பதுபோல்..

படிகளில் வேகமாக மேலே ஏறியவள் பிள்ளையார் சன்னதியில் இன்னும் எரிந்து கொண்டிருந்த இரண்டு மண் விளக்குகளை எடுத்துக்கொண்டு மீண்டும் குளக்கரைக்கு வந்தாள் அதே வேகத்துடன்..

விளக்கின் ஒளி வெளிச்சத்தில் குளத்தின் படிகளை ஆராயந்தவளுக்கு நீர் நிரம்பி வழிவது தெரிந்தது..

வெளிச்சத்தை படிகளில் பரப்பியபடி மெது மெதுவாய் ஒவ்வொரு படிகளிலும் கால் வைத்து இறங்கத் துவங்கினாள் குளத்திற்குள்..

நீர் மறைத்த படியில் அவள் கால் வைக்க கால் உயர்த்திய தருணம் நீருக்குள் சிறு சலசலப்பு..

சற்றே தடுமாறி காலைப் பின் வைத்து தன்னை சமன் செய்தவள் மீண்டும் தனது காலை உயர்த்தி அடுத்த படியில் வைக்க போனாள்..

நீரின் மட்டமும் அவளது காலின் அசைவுக்கேற்ப குறைந்தது..

“அகிலா.. நான் கால் வைக்கும் பொழுது நீரின் மட்டம் குறையுது..”, என்றாள் தனது அடுத்த காலை அடுத்த படியில் வைத்து..

“அப்படியா..?? ஆச்சர்யமா இருக்கு..”, என்றது அகிலன் போலி ஆச்சர்யத்துடன்..

அதையெல்லாம் கண்டு கொல்லும் நிலையில் எல்லாம் தியா இல்லையே..

அவளது ஒவ்வொரு அடிக்கும் குளத்தின் நீர் மட்டம் குறைந்து இப்பொழுது குளமே வெற்றிடமானது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.