(Reading time: 9 - 18 minutes)

“என்ன அகிலா பார்க்கற..??”, இது அன்னம்..

“கருடனும் தியாவும் இன்னும் வரலையே..அதான் பார்க்கறேன்..”

“வந்திருவாங்க அகிலா.. நீ ஆற்றிக்கொண்டிருக்கும் செயல் நிச்சயம் வெற்றி பெரும்.. கவலை படதே..”, என்றது அமைதியாக..

அப்பொழுது கோவில் மணி ஓசையைப் போல் கருடனின் கோர சத்தம் கேட்ட அகிலனுக்கு நம்பிக்கை தலை தூக்கியதேன்று தான் சொல்ல வேண்டும்..

கருடன் அம்மண்டபதிற்குள் நுழைந்ததும் அகிலன், “அவங்க இரண்டு பேரும் வந்துட்டாங்க..”, என்று கூவி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியது..

அகிலனின் உற்சாகம் சிவசிஷ்யனின் காதில் விழுந்து அதையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது..

கல் மேடையிலிருந்து இறங்கிய சிவசிஷ்யன் கருடனைக் கண்டு கொண்டு, “சொன்னது போல் சரியாக காலத்தில் உயிர்த்துவிட்டீர்..”, என்றது..

“எல்லாம் அகிலனின் செயல்.. தியா நம்மைத் தேடி வந்த நேரம்..”, என்றது கருடனுன் பதிலாய்..

கருடனின் முதுகிலிருந்து இறங்கிய தியா அவர்கள் இருவரும் பேசுவது புரியாது,“என்ன பேசிக்கறீங்க இரண்டு பேரும்..?? எனக்கு நீங்கெல்லாம் பேசறது புரிய மாட்டேங்குது..”, என்று தன் முன்னே நின்று கொண்டிருந்த சிவசிஷ்யனையும் கருடனையும் தீர்க்கமாக பார்த்தாள் ஆராயும் பார்வையோடு..

“சொல்றோம் தியா.. உனக்குத் தெரியாமல் இனி இங்கு எதுவும் நடக்கப்போவதில்லை..”, என்ற கருடன்,” நீ இப்போ செஞ்சுட்டு இருக்க வேலை, உங்க அப்பா மற்றும் அவரது நண்பர்களாளையும் பாதியில் நிறுத்தப்பட்டதாகும்.. அது ஏன் நிறுத்தப்பட்டதுன்னு தெரியுமா உனக்கு..?”

“எனக்கு முழுசா தெரியாது.. ஆனால் ராமகிருஷ்ண ஆச்சார்யாவால தான் பிரச்சனைன்னு மட்டும் தெரியும்.. அவர்கிட்டத் தான் என் அம்மா அப்பா இரண்டு பேரும் சிறைப்பட்டிருக்காங்கன்னும் தெரியும்..”,என்றாள் தியா..

அப்படியா என்பது அவளைப் பார்த்த கருடன், “நீ சொல்வதிலும் கொஞ்சம் உண்மை பொதிந்துதான் இருக்கிறது.. நீ செய்து கொண்டிருக்கும் பணி உனது பெற்றவர்களுக்காக மட்டும் அல்ல..”

“அவர்களது நன்பர்களுக்காகவும் தான்..”,என்று இடையிட்டாள் தியா..

“அவர்களுக்காக மட்டும் அல்ல புதைத்து மறைக்கப்பட்ட சிலவற்றுக்காகவும் இருக்கவேண்டும்..”,சற்றே சத்தமாக ஒலித்தது ஆச்சார்யாவின் குரல்..

இவர் எப்படி இந்நேரத்திற்கு அதுவும் பூட்டிக்கிடக்கும் கோவிலுக்குள் எனத் திகைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள் என்றால் மற்ற அனைவரின் முகத்திலும் ஒரு மர்ம புன்னகை..

Savathopathra... Viyoogam

அகிலனோட படம் கேட்ட நண்பர்களுக்கு.. இதோ இப்படித் தான் இருக்கும் நம்ம அகிலன்..

வணக்கம் நண்பர்களே..

இந்த ud எப்படி இருக்குன்னு படிச்சிட்டு சொல்லுங்க..

அடுத்த ud நீங்க எதிர்பார்ப்பது போல் நிறைய பக்கங்களுடன் நிறைய பதில்களை சொல்லும்..

நன்றி..

வியூகம் வகுக்கலாம்...

Episode # 22

Episode # 24

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.