(Reading time: 9 - 18 minutes)

Savathopathra... Viyoogam

தியா நீரில் இறங்குவதற்கு பின்.. குளத்தின் நடுவில் ஒரு கருடனின் சிலை இருப்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள்..

வெற்றிடமான அந்த குளத்தை அதிசயித்துப் பார்த்தவள் குளத்தின் நடுவில் கட்டப்பட்டிருந்த சிறு மண்டபத்தை நோக்கி நடக்கத்துவங்கினாள்..

மண்டபத்தை ஒரு சுற்று சுற்றி வந்தவள் அதன் மேல் ஏற எந்த வசதியும் இல்லாததைக் கண்டு மண்டபத்தின் மேல் ஏற சிறு சிறு குரங்கு சேட்டைகள் செய்து பார்த்தாள்..

அவளது அம்முயற்சி ஜீரோவானத்தால் (zero) கொஞ்சமே கொஞ்சம் அசடு வழிந்து அகிலனை ஒரு அசட்டுப்பார்வை பார்த்தாள்..

மண்டபத்தில் மேல் பருந்தின் சிலைக்கருகில் பறந்து வந்து அமர்ந்திருந்த அகிலன் நிலவு வெளிச்சத்தில் அவளது செயல்களை கவனித்துக்கொண்டு மனதுக்குள் பலமாக சிரித்துக்கொண்டிருந்தது..

அவள் தன்னைப் பார்த்ததும் சிரிப்பை அடக்கி கெத்தாக என்னவென்பது போல் புருவம் உயர்த்தியது அவளை நோக்கி..

ஈயென அவனிடம் இழித்தவள், “அகிலா.. இந்த மண்டபத்தைக் கொஞ்சம் பெருசா கட்டிட்டாங்க இல்லை..”,என்றாள்..

“ஆமாமா..கொஞ்சம் பெருசு தான்..”, இப்பொழுது வாய் நிறைந்த சிரிப்புடன் மொழிந்தது அகிலன்..

அவனது பதிலைக் கேட்டு திருதிருவென முழித்தவள், ”கிண்டல் பண்ணாதே அகிலா.. கொஞ்சம் மேலே தூக்கி விடேன்..”, என்றாள் பாவமாக..

பதிலுக்கு அவனும் சிரித்துக்கொண்டு அவளிடம் வந்து தனது கைகளை அவளுக்கு நீட்டியது..

“நீ பெருசானாத்தானே உன்னால என்னைத் தூக்க முடியும்..??”, என்று கேட்டாள் குழப்பமாக..

“ப்ச்..நீ கையை மட்டும் கொடு தியா..”,என்றவன் அவளது கையைப் பிடித்தது..

தியாவின் இமைகள் ஒரு முறை மூடித்திறப்பதற்குள் இருவரும் மண்டபத்தில் இருந்தனர் அகிலனின் மந்திரத்தால்..

எப்பொழுதும் போல் அவனது செயல்களில் ஆச்சர்யம் கொண்டவள் அந்த சிறு மண்டபத்தை சுற்றினாள்..

“இந்த கருடனின் சிலையைப் பாரேன்.. ரொம்பத் தத்ரூபமா செதுக்கி இருக்காங்கல..”, என்று அந்த சிலையை இரசித்துக் கூறியவள் கருடனின் கால்களை வருடினாள்..

கால் இடுக்குககில் நகங்களுக்கிடையில் எதுவோ குத்துவது போல் உணர்ந்தவள் தனது கைகள் இரண்டையும் இடுக்குகளுள் நுழைத்தாள்..

அங்கு தடவி பார்த்தவளுக்கு மென்மையான எதுவோ தட்டுப்பட்டது..

“டேய்.. அகிலா இந்த சிலைக்குள்ள எதுவோ இருக்கு டா.. இங்க வந்து பாரேன்”

மெதுவாக உள்ளிருந்த வஸ்துவை வெளியே எடுத்தவள் அகிலனின் பதில் தனக்கு கிடைக்காததால் மீண்டும்,”அகிலா.. உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்.. எங்கடா இருக்க நீ..??”, என்று மீண்டும் கத்திவிட்டு சத்தம் எதுவும் வராததால் அவனை தன் பின்னால் தேடி அவனைக் காணாது தோற்றாள்..

“அகிலன் போய் அஞ்சு நிமிஷம் ஆச்சு..”, தனது காதருகில் கேட்ட குரலைக் கேட்டு திரும்பியவள் தான் காண்பதை நம்ப இயலாமல் கண்களைக் கசக்கிக்கொண்டாள்..

“இப்படி இது சாத்தியம்..?? சிலைக்கு எப்படி உயிர் வரும்..”, என முனுமுனுத்தவள், ”நீயா பேசுன..??”, என்று கேட்டாள் தன் முன்னே சிலையாக இருந்த கருடன் உயிர்பெற்றது கண்டு நம்ப இயலாமல்..

மண்டபம் எதிரொலிக்க சிரித்த கருடன், “சிறு அணிலே வாய் பேசும் பொழுது, நான் பேசக்கூடாதா..??”, என்று கேட்டது..

அகிலனைப் பற்றி கருடன் பேசியவுடன், “அகிலன் எங்க..?? அவனை நீ ஒன்னும் பண்ணலியே..??”, என்றாள் சற்றே நடுக்கமாக..

“உனக்கு அகிலன் எப்படியோ.. அது போல் தான் எனக்கும் அவன்.. அவனை நான் ஒன்றும் செய்யவில்லை.. அவனை சிலரை அழைத்துக் கொண்டு வர சென்றிருக்கிறான்..”, என்றது..

“யாரை..??”

“உனக்குத் தெரிந்தவர்களைத் தான்..”

“எனக்கு தெரிந்தவர்களா...??”, சற்றே யோசித்தவள், “அன்னத்தையா..”,என்று கேட்டாள்..

“அன்னமும் வருகிறது..”, என்ற கருடன், “என் மேல் ஏறிக்கொள்.. நான் உன்னை கோவில் மண்டபத்திற்குள் அழைத்துச் செல்கிறேன்.. அவர்கள் இந்நேரம் அங்கு நமக்காய் காத்திருப்பார்கள்..”, என்றது..

கொஞ்சமே கொஞ்சம் முதலில் தயங்கிய தியா கருடனது கூர் பார்வை கண்டு குனிந்திருந்தவன் மேல் ஏறி அமர்ந்து கொண்டாள்..

தனது ட்ரேட் மார்க் கோர சத்தத்தை வெளியிட்ட கருடன் சிறகை அசைத்து தியாவைக் கோவில் மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றது..

கோவில் மண்டபத்தில் அமைந்திருந்த ஒரு கல் மேடையில் ஒருபுறம் அகிலனும் அன்னமும் அமர்ந்திருக்க மறுபுறம் சிவசிஷ்யன் அமர்ந்திருந்தது..

அகிலன் தனது சிறு தலையை சற்றே தூக்கி மண்டப வாசலையே ஒரு எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.