(Reading time: 3 - 5 minutes)

24. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

ச்சார்யா அங்கு வருவார் என தியா எதிர்பார்த்தாள் தான்.. ஆனால் பூட்டியிருந்த கோயிலுக்குள் எதிர்பார்க்காதவள் திகைத்தவண்ணம், “நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள்..?? இங்கேதும் சுரங்கப் பாதை உள்ளதா..??”, ஆச்சர்யம் கலந்த குரலில் கேட்டாள்..

“நான் நடை சாத்தும் முன்னே இக்கோவிலுக்குள் வந்துவிட்டேன் உன்னைத் தேடி..”

“நடை சாத்தும் முன்னேவா..?? அகிலன் நீங்க அப்பொழுதே வீட்டிற்கு போய் விட்டதாகச் சொன்னானே..??”, என்றாள் குழப்பமாக..

“அவன் நான் சென்றதை மட்டும் தான் உன்னிடம் உரைத்திருக்கிறான்.. நான் திரும்பி வந்ததைச் மறைத்திருக்கிறான்..”

அகிலனை முறைத்த தியா ஆச்சர்யாவிடம், “புதைத்து மறைக்கப்பட்ட சிலது.. அப்படீன்னு சொன்னீங்களே.. அது என்ன..??”

“அவைகளை நீ தான் எடுக்கவே போகிறாய்.. அப்பொழுது தெரிந்துகொள்..”, என்று பதில் அளித்த கருடன், “பொழுது புலரும் நேரம் நெருங்கிவிட்டது.. நீ இங்கு செய்து முடிக்க வேண்டிய காரியமும் முடிந்து விட்டது.. இனி உனது இலக்கை நோக்கி நீ செல்லலாம் பெண்ணே..”, என்றது..

இல்லை என்பது போல் தலையசைத்தவள், “என் பெற்றவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லையே.. இவர்..”, என்று ஆச்சார்யாவை சுட்டிக் காட்டியவள், “எனது பெற்றவர்களைப் பற்றி இவர் எதுவும் சொல்லவில்லையே..”, என்றாள்..

“அவருக்கு தெரியாத ஒன்றை அவர் உன்னிடம் எவ்வாறு சொல்ல முடியும்..??”, என்று அதற்கும் பதிலளித்த கருடன், “அவர்கள் இருக்கும் இடத்தை உன்னால் மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும்.. அதுவும் உன் சுயம் வெளிப்படும் முன் கண்டுபிடிக்க வேண்டும்.. இல்லையேல் அது சாத்தியமில்லா ஒன்று..”

“என் சுயம் வெளிப்படும் முன்னா..??”

“ஆம்.. உன் தாய் தந்தையர் யார் என்று ராமகிருஷ்ணனுக்கு தெரிவதற்கு முன் நீ எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும்.. இல்லையேல் உன் முயற்சிகள் வீண் தான்.. அதனால் ஜாக்கிரதையாக நீ உன் காய்களை நகர்த்த வேண்டும்..”

“ஜாக்கிரதையாக இருக்கிறேன்..”, என்றவள் தனது கையில் இருந்த இலையால் ஆன துணி போன்ற ஒரு வஸ்துவையும் இறகுகளாலான மற்றொன்றையும் எடுத்து பார்வையிட்டுவிட்டு,”இது தான் தாத்தா சொன்ன இடத்திற்கான மேப்பா..?? ஆனால் இது முழுமையடையவில்லையே..??”

“மீதியுள்ள பகுதிகள் ஒவ்வொன்றாய் வந்து சேரும் உன்னிடம்.. உனக்கு உதவியாய் நிறைய பேர் வந்து சேர்வார்கள்..”

பொழுது புலர ஆரம்பமாவது தெரியாமல் அந்த மேப்பையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது அகிலன்..

(ஒரு வழியா முடிச்சிட்டேன்.. இனி சடு குடு ஆட்டம் தொடரும்..)

 

வணக்கம் நண்பர்களே..

உடல் நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் சரிவர பதிவுகளை பகிர முடியாமல் போய்விட்டது..

இந்த சின்ன ud க்கும் காரணம் அதுவே..

அடுத்த அத்தியாயம் பெரியதாக தர முயல்கிறேன்..

நன்றி..

 

வியூகம் வகுக்கலாம்...

Episode # 23

Episode # 25

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.