(Reading time: 7 - 14 minutes)

25. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

வாடைக் காற்றும் தீப்பந்தந்தின் சூடும் தியாவை கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது..

பழைய தாக்கமும் ராமக்கிருஷ்ண ஆச்சார்யாவின் மேல் இருக்கும் வஞ்சமும் மனதை நிறைத்திருந்தாலும் தன்னைத் தானே சமாதனப் படுத்திக்கொண்டவள் மற்றவர் இருக்கும் இடத்தை நோக்கி சென்றாள் சற்றே சோர்வாக..

தியாவைக் கண்ட நொடி அவளைக் கட்டிக்கொண்ட க்ரியாவை சமாதனப்படுத்திய தியா அனைவரும் தன்னை நோக்குவது கண்டு உண்மை அனைவரையும் எட்டிவிட்டதென்பதை புரிந்துகொண்டாள்..

 கண்கள் சிவக்க ஆத்திரத்தை அடிக்கமுடியாமல்,“ஏன் அந்த ஆளைப் பற்றி எங்களிடம் முதலிலேயே சொல்லவில்லை..??”,எனக் கேட்டான் ரிக்கி..

“முதலிலேயே உங்களிடம் உங்களது பெரியப்பா நல்லவர் அல்ல என சொல்லியிருந்தால் இருவரும் என்னை நம்பி இருப்பீர்களா..??”

மௌனமே தியாவிற்கு பதிலாக கிடைக்க,”அதான் உங்களிடம் சொல்லவில்லை..”,என்றாள்..

“தியா நீ ஏன் மயாக்கிட்ட இருந்த மேப்பை அவளுக்கு தெரியாம எடுத்து வெச்சிருந்த..??”,தன்னுள் குடைந்து கொண்டிருந்த கேள்வியை கேட்டே விட்டான் அந்த துப்பரிவாளன் வ்ருதுஷ்..

“அந்த மேப்பை நான் அன்று எடுத்து மறைத்து வைக்கவில்லை என்றால் சுஜன் எடுத்திருப்பான்..”,என்றாள்..

“என்னது சுஜன் அண்ணாவா..?? என்ன சொல்ற தியா..??”, அதிர்வாய் கேட்டனர் எழிலும் மயாவும்..

“சுஜன் அண்ணா தான்.. ஆச்சார்யா செய்து கொண்டிருக்கும் ப்ராஜக்ட்டைப் பற்றி முழுவதும் அறிந்தவன்.. அவனிடம் அந்த மேப்பின் பகுதி கிடைத்திருந்தால் அவன் நேராக அதை ஆச்சார்யாவிடம் சேர்த்திருப்பான்..”

“எங்க கிட்டயாவது அதைப் பற்றி சொல்லியிருக்கலாமே தியா..??”,என்று ஆதங்கப்பட்டான் எழில்..

“உங்ககிட்ட சொல்லனும்னு தான் நானும் நினைத்தேன்.. ஆனால் நான் சொல்வதை நம்பும் நிலையில் அப்பொழுது நீங்கள் யாரும் இல்லை..”,என்றவள்,”இன்றுமே அந்த மேப்பை உங்களிடத்தில் நான் கொடுத்திருக்க மாட்டேன்.. அகிலன் இன்று தங்கள் அனைவரிடமும் ஆச்சார்யாவின் முகத்திரையை கிழிக்க போவதாய் சொன்னான்.. அதனால் தான் கொடுத்தேன்..”,என்றாள்..

புரிந்து கொண்டார் போல் தலையசைத்த எழில்,”அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்..??”,எனக் கேட்டான்..

“மழை நின்று விட்டது.. நமது வேலையும் முடிந்து விட்டது.. எழிலின் வீட்டிற்கு இனி போக வேண்டியது தான்..”,என்றாள்..

“ஆச்சார்யா கேட்டா..??”,இது எழில்..

“உண்மையை சொல்ல வேண்டியது தான்..”

“அப்போ நம்ம அம்மா அப்பா..??”,இது விக்கி..

“கண்டுபிடித்துவிடலாம்..”,என்றவள் தனது திட்டத்தை அவர்களிடம் பகிர்ந்து கொண்டாள்..

அலரி மலையை அடுத்த வஞ்சிமாங்கூடல்

எழிலின் இல்லம்

அதிகாலை நேரம் அந்த பெரிய வராண்டாவை வேக வேகமாக அளந்து கொண்டிருந்தார் ராமக்கிருஷ்ண ஆச்சார்யா..

முகத்தில் தனது உணர்ச்சிகள் எதையும் காட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார் போல்.. இறுகிக் கிடந்தது முகம்..

வெளி கேட் திறக்கும் ஓசையில் நிமிர்ந்து பார்த்தவருக்கு அந்த ஏழு பேர் ஜீப்பில் வருவது கண்ணில் பட்டு இதழில் புன்னகையை மலரச் செய்தது..

அதனை அவசரமாக மறைத்தவர் உணர்வில்லாமல் அவர்கள் இறங்குவதைதனது முகமூடி முகத்தோடு (அதாங்க கோப முகத்தோடு.. கொஞ்சம் கெத்தாக..) பார்த்துக்கொண்டிருந்தார்..

“சார்.. நேற்று மழையில் எங்களால் இங்கு வர முடியவில்லை..”, என்று ஆரம்பித்த எழிலின் குரல் ஆச்சார்யாவின் பார்வையில் தடுக்கப்பட்டது..

“யூகித்தேன்.. இன்று நீங்கள் நன்றாக ரெஸ்ட் எடுங்கள்.. நாளை நாம் அலரி மலை செல்லலாம்..”, என்றார் நல்லவராக..

“பெரியப்பா.. அங்கு இனி போகத் தேவையில்லை.. நமக்கு தேவையானது நேற்றே கிடைத்துவிட்டது..”,என்றான் விக்கி..

கண்கள் பளபளக்க,“என்ன விக்கி சொல்ற.. அந்த மேப் கிடைத்துவிட்டதா..??”,என்று கேட்டார் ஆர்வமாக..

“உங்களுக்கு எப்படி கிடைத்தது மேப் எனத் தெரியும்..??”, நாக்கு நுனிவரை வந்த வார்த்தைகளை விழுங்கிய ரிக்கி,”ஆமாம் பெரியப்பா.. கிடைத்துவிட்டது..”,என்றான்..

“எங்கே அந்த மேப்பை கொடுங்க பார்க்கலாம்..”,பேராசையில் கரகரத்தது அவரது குரல்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.