(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 21 - தேவிஸ்ரீ

En nilavu devathai

னைவரும் நம்பமுடியாமல் வாசலில் இருப்பவர்களை நோக்கினர்.. நந்தினி அதிர்ச்சியாக நின்றவர் வாசலை நோக்கி விரைந்து ஓட, அவர் பின் வீட்டு நபர்கள் அனைவரும் தொடர்ந்தனர்.. ஆம், வாசலில் வீல்சேரில் ஆதிநாதன் அமர்ந்திருக்க, அவரின் வீல்சேரை தள்ளிக்கொண்டு வந்தார் தாயம்மா...

நந்தினி ஆதிநாதன் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவர், அவர் காலில் முகம் புதைத்து அழுதார்.. அதன் பின் அனைவரும் ஒன்றாய் ஆதி முன் நின்றவர்கள் அவரை அழைத்தபடி உணர்ச்சிவசப்பட்டனர்.. அனைவரின் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.. பின் தாயம்மா தான் நிலைமையை எடுத்துரைக்க ஆரம்பித்தார்..

“அவருக்கு உங்களை யாரையும் அடையாளம் தெரியாது..” என தாயம்மா கூற அனைவரின் கண்களிலும் கேள்விகுறி தென்பட்டது.. பின் தாத்தா தான் என்னவென்று வினவ, தாயம்மா பதில் கூற ஆரம்பித்தார்..

“அன்னைக்கு நடந்த accidentல ஆதி  பிழைச்சிட்டார்.. accident அப்போ இவர் தலையில் அடி பட்டு கோமாவில் இருந்தாரு, இப்போ நினைவு திரும்பிருக்கு, ஆனா கடந்தகாலத்தில் நடந்தது எதுவும் ஞாபகம் வரல.. அதனால உங்களை அவருக்கு அடையாளம் தெரியல...” என்றவர் அனைவரையும் அறிமுகபடுத்தி வைத்தார்.. அனைவருக்கும் தங்களை அடையாளம் தெரியவில்லை என்றதை கேட்டு வருத்தபட்டாலும் அவர் உயிர்ருடன் இருப்பதே போதும் என சமாதானமாகினர்.. ஆனால் நந்தினி தான் உடைந்து போனார்..

அனைவரையும் அறிமுகபடுத்தி வைத்தவர் அம்முவின் அருகில் வர, அம்மு தாயம்மாவை கேள்வியாய் நோக்கினாள்..

“என் அப்பாவை பத்தி உங்களுக்கு எப்படி தெரியும் தாயம்மா?.. அதோடு நான் இந்த பேமலினு உங்களுக்கு எப்போதிலிருந்து தெரியும்?.. காலேஜ் படிக்கும் போது மித்ராவும், விக்ரமும் சந்தேகபட்டபோது ஏன் நீங்க சொல்லல..” என அடுக்கடுக்காய் கேள்விகளை வினவ, தாயம்மா தான் திணறினார்..

“எனக்கு எதுவும் தெரியாதும்மா.. மனோ,ஆனந்தி accidentக்கு முன்னாடிநாள் தான் உண்மை எனக்கு தெரியும்.. ஆனந்தி தான் என்கிட்டே சொன்னாங்க.. அப்புறம் உங்க வாசு மாமா உன் அப்பாவை பத்தி சொல்லி என்கிட்ட வருத்தப்படும்போது உன் அப்பா போட்டோவை பார்த்தேன்.. நான் ஒருதடவை ஹாஸ்பிடலில் உன் அப்பாவை பார்த்த ஞாபகம்.. அதனால உன் அப்பாவை தேடி கண்டு பிடிக்க போனேன்.. கண்டுபிடித்து கூட்டிடும் வந்துட்டேன்..” என புளுகினார்.. அதை அம்முவும் நம்பினாள்.. வாசுதேவன், நந்தினியை தவிர அனைவரும் நம்பினார்கள்..

“ரொம்ப நன்றிம்மா.. நீங்க செய்த உதவியை நான் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்..” என கூறிய வள்ளிநாயகி பாட்டி, நந்தினி புறம் திரும்பி, “இன்னும் ஏன் இப்படி இருக்க நந்தினி, போ போய் பொட்டு, பூ வைத்து விட்டு வாம்மா.. போ..” என அனுப்பினார்..

நந்தினியும் மகிழ்ச்சியுடன் கிளம்பி வர, நலுங்கு ஆரம்பித்தது.. அனைவரும் அம்மு, விக்ரமின் கன்னத்தில் சந்தனம் பூசி பின் ஆசிர்வதித்தனர்..

பின் ஆதி தன் மகள் முன்னே வந்தார்.. அவர் கண்கள் கலங்கியது.. அமைதியாய் அவர்களை ஆசிர்வதிக்க, அம்முவும் விக்ரமும் புன்னகையுடன் ஏற்று கொண்டனர்.. ஒருவழியாக நிகழ்ச்சி முற்றுபெற, அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல, நந்தினியும் வாசுதேவனும் தாயம்மாவை தனியே அழைத்து சென்றனர்..

நந்தினி தன அறைக்கு தாயம்மாவை இழுத்து செல்ல, வாசு பின்தொடர்ந்தார்.. அறைக்குள் நுழைந்ததும் நந்தினி தாயம்மாவை கட்டிக்கொண்டார்..

“தாயு நீ எப்படி இருக்க?. உன்னை பாத்து எவ்வளவு நாள் ஆகிடுச்சி.. நீ எங்க இருந்த?.. ஏன் நீ என்னை பார்க்க வரல?..  அப்புறம், ஆதி பத்தி உனக்கு முன்னாடியே தெரியும், அப்புறம் எதுக்கு அம்முகிட்ட பொய் சொன்ன?..” என அடுக்கடுக்காக நந்தினி வினவ,

“நீ பொறுமையா இரு.. நீ இவ்வளவு கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்றது..” என சொன்ன தாயம்மாவை இடைநிறுத்தியது ஒரு குரல்..

“உங்களுக்கு பதில் தானே வேணும் நான் சொல்றேன் நகு..” எனவும் நந்தினி அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க அங்கு ஆதி நின்று கொண்டு இருந்தார்..

“நீங்க நிற்கறீங்க.. அதோட என்னை நகுனு.. உங்களுக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சா..” என சந்தோசத்துடன் நந்தினி கேட்டார்..

“மறந்தால் தானே ஞாபகம் வருவதற்கு..”

“என்ன சொல்றீங்க..”

“எனக்கு எதுவும் ஆகல நகு.. கோமாவில் இருந்தது உண்மைதான், ஆனா கண் விழிக்கும் போது எனக்கு எதுவும் மறக்கல..”

“அப்புறம் ஏன் இப்படி சொல்லணும்?..”என நந்தினி கேட்க,

“காரணமாய் தான்..” என பொறுமையாய் பதிலளித்தார் ஆதி..

“எனக்கு ஒன்னும் புரியல..” என வாசு கூற, அதை கேட்டு சிரித்தவர்,

“என் நிலைமைக்கு யார் காரணம்னு தெரியுமா...” என கேட்க

“யாரு..” என அதிர்ந்த குரலில் இருவரும் வினவ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.