(Reading time: 20 - 39 minutes)

தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 07 - கார்த்திகா கார்த்திகேயன்

Thithikkum puthu kathale

சூர்யாவின் சத்தத்தில் அனைவருமே திகைத்தார்கள். பத்திரிகை கொடுக்க போன சண்முகமும், சுப்பிரமணியமும் கூட அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள்.

மதியை திட்டி கொண்டிருந்த வள்ளி, அவனுடைய சத்தத்தில் மிரண்டே போனாள். "ஐயோ எப்ப இருந்து கேட்டானு தெரியலையே", என்று நினைத்து அப்பவும் மதியை தான் முறைத்தாள்.

ஆனால் மதியோ யாரையும் பார்க்க முடியாமல் கூனி குறுகி  கீழே குனிந்து அழுது கொண்டிருந்தாள்.

முந்தின நாள் துவைத்து வைத்த துணியை தான் மடித்து  கொண்டிருந்தாள் கலைமதி.

சூர்யா அறையை விட்டு வெளியே போவதை பார்த்த வள்ளி "இந்த மதியை நிம்மதியா இருக்க விட கூடாது. இவளை சூர்யாவை விட்டே ஓட விடனும்", என்று முடிவு எடுத்து அவர்கள் அறைக்குள் சென்றாள்.

திமிராக உள்ளே வந்த வள்ளியை பார்த்த மதிக்கு திக்கென்று இருந்தது. ஆனால் முகத்தில் எதையும் காட்டாமல் "வாங்க சித்தி", என்று சிரித்து வைத்தாள்.

"எதாவது சொல்லிருவாங்களோ?  இவங்க நாக்கில் விசத்தை தடவி பேசுவாங்களே. கடவுளே, அவங்க பேசுறதை தாங்க எனக்கு சக்தி கொடுப்பா", என்று மனதில் நினைத்தவளுக்கு நேற்று சூர்யா "யார் என்ன சொன்னாலும் கண்டுக்க கூடாது", என்று சொன்ன வார்த்தைகளும் நினைவில் வந்தது.

எல்லாம் யோசித்து கொஞ்சம் மனதை சமாதான படுத்தி கொண்டு வள்ளியை பார்த்தாள் மதி.

"என்னது வாங்கவா? என்னமோ உன்னோட வீடு மாதிரி வாங்கன்னு சொல்ற? இது என் அண்ணன் பையனோட வீடு. அடுத்தவங்க வீட்டில நீயே ஒண்டிக்கிட்டு இருக்க. இதுல  என்னை வரவேற்க்குறியா?", என்று கேட்டாள் வள்ளி.

"இந்த இடத்தில் காவ்யா  இருந்திருந்தா என் புருசன் வீட்டில நான் இருக்கேன். உனக்கென்னன்னு கேட்டுருப்பா", என்று நினைத்து கொண்டு அமைதியாக இருந்தாள் மதி.

ஆனால் அவள் அமைதியை பார்த்த வள்ளி "என்னடி அமைதியா ஆகிட்ட? அம்மா, அப்பா இல்லாத அனாதை தான டி நீ?", என்று குரூரமாக சிரித்தாள்

மனதில் எழுந்த வலியை மறைத்து கொண்டு  "சித்தி, எனக்கு அம்மா தான் இல்லை. அப்பா இருக்காரு", என்றாள் கலைமதி.

"அப்பாவா? அவர் என்னோட பிள்ளைகளுக்கு மட்டும் தான் அப்பா. உனக்கு அப்பா இல்லை"

"நீங்க என்ன தான் வெறுத்து ஒதுக்கினாலும், அப்பா இல்லைன்னு ஆகிருமா சித்தி?"

"ஆக தான் டி செய்யும் அனாதை கழுதை? என்னைகாவது உன்னை தூக்கிருக்காரா அவரு? உன்னை ஸ்கூல்ல  சேக்க, காலேஜ்ல சேக்கன்னு எதுக்காவது வந்துருக்காரா? ஒரு துணி எடுத்து கொடுத்துருப்பாரா? இல்லைனா கல்யாணத்துக்கு நகை தான் போட்டிருப்பாரா? ஏதோ இது தான் சாக்குன்னு என் அண்ணன் பையன் வீட்ல உன்னை தள்ளி விட்டுட்டாரு. அப்பாவாம் அப்பா"

இதெல்லாம் சண்முகம் அவளுக்கு செய்தது இல்லை தான். அதை நினைத்து அமைதியாக இருந்தாள் மதி. ஆனால் பாம்பு அவள் மேல் இன்னும் விசத்தை கக்கியது.

"வீட்ல சம்பளம் இல்லாத வேலைக்காரிண்னு தான் உன்னை அதே வீட்ல விட்டு வச்சேன். இல்லைனா என்னைக்கோ அனாதைன்னு   சொல்லி விரட்டி விட்டிருப்பேன். ஏதாவது ஆச்சுன்னா என்னன்னு கேக்க ஆள் இல்லாத அனாதை நாயி இப்ப நல்ல வாழ்க்கை கிடைச்சிருச்சுனு வானத்துல மிதக்குறியோ? உன் சிறகை எல்லாம் வெட்டி வீழ்த்தலைன்னா நான் வள்ளி இல்லை டி"

இந்த பேச்சில் உடைந்து போனாள் மதி. சூர்யா  கொடுத்திருந்த தைரியம் அனைத்தும் அவளை விட்டு சென்றிருந்தது. எப்போதும் போல் இப்பவும் அவள் கண்கள் கண்ணீரை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

அப்போது தான் அங்கு வந்தான் சூர்யா. அவள் அழுவதை  பார்த்தவனுக்கு, "எவ்வளவு தூரம் இவளுக்கு அட்வைஸ் பண்ணேன்? ஆனாலும் இந்த அத்தை சொன்னதை கேட்டு அழுதுட்டு இருக்காளே. இப்படி தொட்டா சிணுங்கியா இந்த உலகத்தில் காலம் தள்ள முடியுமா? தப்புன்னு தெரிஞ்சா எதித்து பேச வேண்டாமா? அழுதுட்டு இருக்காளே. அத்தை அப்படி என்ன தான் சொல்றாங்கன்னு பாப்போம்", என்று நினைத்து கையை கட்டி கொண்டு வேடிக்கை பார்த்தான்.

அழுது கொண்டே "என் மேல எதுக்கு சித்தி உங்களுக்கு வன்மம்?", என்று கேட்டாள் மதி.

"வன்மமா? கொலை வெறி டி. உன்னை பாக்கும் போது தான் நான் ரெண்டாந்தாரம் அப்படிங்குற எண்ணமே எனக்கு வருது. அதை நினைச்சு எனக்கு எறியுது. என் புருஷனை என் பிள்ளைங்க மட்டும் தான் அப்பான்னு சொல்லணும். நீ சொன்னா எனக்கு அப்படியே உன் வாயில் சூடு போடணும்னு தோணுது"

...

"அது மட்டும் இல்லாம என்னோட அண்ணன் பையனை நீ எப்படி கல்யாணம் பண்ணலாம்? கொஞ்சம் மூக்கு முழியுமா இருந்த உடனே எங்க அண்ணி உன்னை அவனுக்கு  கல்யாணம் பண்ணி வச்சாங்க. இல்லைனா உன்னை எல்லாம் நாய் கூட சீண்டாது. ஆனா நீ கல்யாணம் வேண்டாம்ணு சொல்லி எங்கயாவது விழுந்து சாக வேண்டியது தான டி சனியனே? உனக்கு எல்லாம் இப்படி ஒரு வாழ்க்கை கேக்குதோ? அதான் உன் ஆத்தா உன்னை அழகா தான பெத்து போட்டுட்டு போய் சேந்துருக்கா? கூட படிக்கிற எவனையாவது உன் அழகை காட்டி மயக்கி எங்கயாவது ஓடிருக்க வேண்டியது தான? நான் அப்படி தான் டி நினச்சிருந்தேன்"

.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.