(Reading time: 20 - 39 minutes)

"நான் தான் நேத்தே சொன்னேன்ல கலை மா. இப்ப எதுக்கு இப்படி அழுது கறையுற. உங்க அப்பா அவங்களை நல்லா அடிச்சிட்டார் டா. நானும் திட்டிட்டேன்ல. இனி உன்னை அவங்க எதுவுமே சொல்ல மாட்டாங்க. பாரு மா, அழாத டா. நீ இப்படி அழுதா எனக்கு கஷ்டமா இருக்கு மா"

....

"மதி அழாதேன்னு சொல்றேன்ல? மதி இங்க பாரு. முதலில் என் முகத்தை நிமிர்ந்து பாரு", என்று சொல்லி கஷ்ட பட்டு நிமிர்த்தினான். 

நிமிர்ந்த அவள் முகம் சிவந்து, வீங்கி போய் இருந்தது. அவள் கண்ணீரை துடைத்தவனுக்கும் கண்கள் கலங்கியது.

அவன் துடைக்க துடைக்க அவள் கண்ணீர் பெருக்கெடுத்தது. 

"அழாத குட்டி மா. இனி அப்படி நடக்காது டா"

..

"கலை நான் உன் புருஷன் சொல்றேன் மா. இனி யாரும் உன்னை எதுவும் சொல்ல விடாம பாத்துக்குவேன். அம்மா, அப்பா கூட இனி உன்னை கஷ்ட படுத்த மாட்டாங்க டா. நாங்க தான் உனக்கு இருக்கோம்ல? நீ அனாதை எல்லாம் கிடையாது கண்ணம்மா. கேளு டா. அழாத டா"

"எனக்கு யாருமே வேண்டாம். நீங்க எல்லாம் கிடைச்சதுனால தான் அவங்க இப்படி எல்லாம் சொல்றாங்க. யாரும் இல்லைனா நான் நிம்மதியா இருப்பேன்", என்று சொல்லி அவன் கையை தட்டி விட்டாள் மதி.

"அப்படி எல்லாம் சொல்ல கூடாது கலை"

"இல்லை அவங்க சொல்ற மாதிரி நான் அனாதை தான். அனாதையாவே செத்து போறேன். உங்களை கல்யாணம் பண்ணதுல தான் அவங்களுக்கு இப்படி வன்மம். இந்த கல்யாணம் நடக்காம இருந்திருந்தா என்னை இப்படி எல்லாம் பேசியிருக்க மாட்டாங்க. தினமும் ஒருத்தன் கூட.."

"சே.. அது ஒரு பொம்பளையே இல்லை மதி மா. இனி அது அப்படி பேசாது டா. நான் பாத்துக்குறேன் டா"

"இல்லை எனக்கு வேண்டாம். நான் உண்டு, என் படிப்பு உண்டுன்னு இருந்தேன். உங்களை கல்யாணம் பன்னதுனால தான் இப்ப இப்படி எல்லாம் நடக்குது. நீங்க அவங்க சொன்ன மாதிரி அவங்க பொண்ணையே கட்டிக்கோங்க"

"அடி வாங்க போற கலை. இப்படி எல்லாம் பேசாத டா. கஷ்டமா இருக்கு"

"எனக்கு தான் இப்ப கஷ்டமா இருக்கு. இந்த கஷ்டத்துக்கு காரணம் நீங்க தான். நீங்க அவளை கட்டிக்கிட்டிங்கன்னா, எனக்கு இந்த பிரச்சனையே இல்லை. நான் என் மீதி படிப்பை முடிச்சிட்டு எதாவது வேலை வாங்கிட்டு அனாதையாவே செத்துருவேன். நான் இந்த வீட்டை விட்டு போகணும். எனக்கு யாரும் வேண்டாம்"

"மதி எனக்கு கோபத்தை உண்டாக்காத. நீ கோபத்துல பேசுற. அதுக்காக என்னவேனும்னாலும் பேசணும்னு இல்லை. உன்னை எங்கயும் அனுப்ப மாட்டேன். நீ என் பொண்டாட்டி டி. கண்டவங்க சொல்றதுக்கு நீ என்னை பிரியணும்னு நினைப்பியா?"

"ஆமா எனக்கு யாரும் வேண்டாம். நான் எங்கயாவது போயிறேன். நான் ஹாஸ்டலுக்கு போகணும். என்னை விட்டுருங்க. ஆனா அதை விட செத்து போனா நிம்மதியா இருக்கும். ஆமா செத்து போயிரணும். அப்ப தான் யார் முகத்துலயும் முழிக்க வேண்டாம். எங்க அம்மா அவங்க கூடவே என்னை கூட்டிட்டு போயிருக்கலாம். பரவால்ல, நான் இப்ப செத்து போறேன். நான் இந்த உலகத்துல வாழ கூடாது"

அடுத்த நொடி அவள் கன்னத்தை பதம் பார்த்திருந்து அவன் கை.

அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் கலைமதி. கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.

"சாவு டி, போ போய் சாவு. உனக்கு செத்தா தான நிம்மதி? போய் சாவு போ. இருக்குற எங்க யார் மேலயும் உனக்கு கவலை இல்லை, நீ சாகனும் அதானே? போய் சாவு. ஒவ்வொரு நிமிஷமும் உன்னையே நினைச்சு உருகிட்டு இருக்கேன் தெரியுமா டி உனக்கு அது? நீ தான் எல்லாமேன்னு பைத்தியமா  இருக்கேன். வேலை செய்ற நேரத்துல கூட எனக்கு உன்னோட நினைவு  தான் வருது. அன்னைக்கு முத்தம் கொடுத்ததுல இருந்து நான் நானாவே இல்லை. அந்த அளவுக்கு உன்னை பைத்தியமா லவ் பண்றேன். அந்த லவ்வை கூட இப்ப சொல்ல கூடாதுனு நினைச்சிருந்தேன்"

...

"எப்படி எப்படில்லாம் வாழனும்? எப்படி எல்லாம் உன் கூட சந்தோசமா இருக்கணும்? எந்த அன்பும் கிடைக்காத உன்னை என் உயிரா தாங்கணும்? இதை எல்லாம் யோசிச்சு வச்சிருந்தேன். ஏன் எப்ப குழந்தை பெத்துக்கணும்னு கூட யோசிச்சு வச்சிருக்கேன். ஆனா இவ சாவ போறாளாம். போ போய் சாவு. உன்னை யாரும் பிடிச்சிட்டு இருக்கல? நீ போய் சேந்தவுடனே நானும் உன் பின்னாடியே வர போறேனா? இல்லை, நீ இல்லைனாலும் அம்மா, அப்பாவுக்காக வாழ தான் போறேன். என்ன? உன்னோட நினைப்பை மட்டும் நினைச்சிட்டு வாழுவேன். நீ சொல்ற மாதிரி எவளையும்  கட்டிக்க மாட்டேன். எனக்கு பொண்டாட்டின்னா அது நீ மட்டும் தான். சாகுற காலம் வரைக்கும் நீ தான் என் நெஞ்சில் இருப்ப"

....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.