(Reading time: 20 - 39 minutes)

"மாமனார் னு மரியாதை இல்லாம பேச கூடாது சூர்யா. நான் உன்னை அப்படி வளர்களையே", என்றாள் மங்களம்.

"விடு  மங்களம். அவன் சொல்றது சரி தான். நான் தான் என் பொண்ணை இந்த நிலைமைக்கு  ஆளாக்கிட்டேன் . ஏய் என் பொண்ணை  என்ன டி சொன்ன?", என்று கேட்டு வள்ளியை கன்னத்தில் அறைந்து  விட்டார் சண்முகம்.

மங்களம் தடுக்க வில்லை என்றால் கொன்றே இருப்பார். மருமகன் இந்த அளவுக்கு அவரை மரியாதை இல்லாமல் பேசியது அவரது தன்மானத்தை சீண்டி விட்டது. அந்த கோபத்தில் அவரும் பொங்கி விட்டார்.

ஆனால் எத்தனை அடி வாங்கினாலும் திமிராகவே  நின்றாள் வள்ளி.

"சூர்யா நீயாவது சொல்லுப்பா. மதி அழாதேம்மா. என்ன சூர்யா நடந்தது?", என்று கேட்டார் சுப்பிரமணி.

அங்கு இருந்த யாரையுமே கவனிக்காமல் இந்த உலகத்தை, பெற்று போட்டு விட்டு செத்து போன அன்னையை, அப்பாவை, இந்த உலகத்தை தன்னுடைய நிலையை அனைத்தையுமே வெறுத்து அழுதாள் மதி.

அவளை சமாதானம் செய்யவா? கொதித்து கொண்டிருக்கும் மகனிடம் விசயம் என்ன என்று கேப்பதா தெரியாமல் முழித்த மங்களம் கதறி கொண்டிருந்த மதி முக்கியமாக பட அவள் அருகே சென்று மறுபடியும் அவளை அணைத்து கொண்டாள்.

"மதி மா ஆழதா டா , இப்படி அழ கூடாது மா", என்று மதியை தன்னோடு அணைத்து கொள்ள பார்த்தாள் மங்களம்.

அவள் சொன்னதை காதில் கூட வாங்காமல் மங்களம் தோளில் சாய்த்ததை கூட மறுத்து விட்டு நின்ற இடத்திலே இருந்து அழுதாள் மதி.

"இப்ப இவளை சமாதான படுத்த முடியாது", என்று நினைத்து "என்னனு சொல்லி தொலையேன் டா.  சாகுற மாதிரி அவ அழுறா. என்னனு சொல்லிட்டு நீயாவது அவளை சமாதான படுத்து", என்று கத்தினாள் மங்களம்.

"அவளை பார்த்து, உடம்பை காட்டி எவனையாவது மயக்கி அவன் பின்னாடி கலை போகணும்னு சொல்றாங்க மா", என்று வேதனையுடன் சொன்னான் சூர்யா.

"என்னது?", என்று அதிர்ச்சியாக கேட்டாள் மங்களம்.

"அந்த மாதிரி தப்பான இடத்துல வித்துட்டு வந்துருவாங்கலாம். தினமும் ஒருத்தன் கூட.... சே", என்று அருகில் இருந்த சுவரில் குத்தி தன் கோபத்தை அடக்கினான் சூர்யா.

"அவங்க பொண்ணா இருந்தா இப்படி பேசுவாங்களா மா? கலை என் பொண்டாட்டி மா. அவளை பாருங்க எப்படி துடிச்சு போய் அழுறானு. அவ சின்ன பொண்ணு மா. இன்னும் காலேஜ் கூட அவ முடிக்கலை. முழுசா விவரம் கூட கிடையாது. அவளை போய்..."

....

"ஒவ்வொரு தடவையும் அவளை இப்படி தான் பேசிருக்காங்க. இவங்க இங்க வரலைனு யார் அழுதா? இந்த பொம்பளை வந்ததுல இருந்து அவ நிம்மதி இல்லாம தவிக்கிறா, நைட் எல்லாம் தூங்க முடியாம வேதனை படுறா. என் அப்பாவோட கூட பொறந்தவங்கன்ணு இத்தனை நாள் மரியாதை இருந்துச்சு. எப்ப என் பொண்டாடியை தப்பா பேசுனாங்களோ, இனிமே இவங்க அத்தை கிடையாது. என்னை பொறுத்தவரைக்கும் எதுவோ ஒரு பொம்பளை தான்"

....

"அவ யாருமே இல்லாத அனாதைன்னு சொல்றாங்க மா. எங்கயாவது ஓடிறணுமாம். அது மட்டும் இல்லாம அவளை இந்த வீட்டை விட்டும், என் வாழ்க்கையை விட்டும் விரட்டிட்டு அவங்க மகளை எனக்கு கட்டி வைப்பாங்களாம். எப்படி பட்ட கீழ்த்தனமான எண்ணம் பாருங்க. எனக்கு இந்த ஜென்மத்தில் அவ தான் பொண்டாட்டி. எப்ப அவ கழுத்துல தாலி கட்டுனேனோ அப்பத்துல இருந்து அவ தான் என்னோட வாழ்க்கை. அதை கெடுக்கவோ, இல்லை என்னோட வாழ்க்கையில் குழப்பம் விளைவிக்கவோ யாராவது  நினைச்சா நீங்க இன்னொரு சூர்யாவை பாப்பீங்க"

....

"இந்த ரிசப்ஷன் முடிஞ்ச பிறகு, கலையோட பொறந்த வீட்ல இருந்து யாருமே அவளை பார்க்க இங்க வர கூடாது. அது அவளோட அப்பாவா இருந்தாலும் சரி. இனிமே அவ என் பொண்டாட்டி மட்டும் தான். எதாவது உறவு சொல்லிட்டு இங்க  வந்தா, அப்பறம் மரியாதை கெடும். அப்புறம் அம்மா கலை கிட்ட அவங்க வீட்ல இருந்து  யாராவது பேசுறதை பார்த்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் மா. பாத்துக்கோங்க. அவங்களை என் ரூம்ல இருந்து வெளிய போக சொல்லுங்க", என்று கத்தினான் சூர்யா.

அவன் கோபத்தில் அனைவருமே கொஞ்சம் பயந்து தான் போனார்கள்.

பொதுவாக சூர்யா மங்களத்திடம் மட்டும் தான் தன் கோபத்தை காட்டுவான். வேறு யார் மனதும் புண்படும் படி பேச மாட்டான். இன்று அனைவரையும் எடுத்தெறிந்து பேசியதில் அவன் மனது எந்த அளவுக்கு பாதிக்க பட்டிருக்கிறது என்று மங்களத்துக்கு புரிந்தது.

அது மட்டும் இல்லாமல், தன்னுடைய பொண்டாட்டியை இந்த அளவுக்கு அவன் தாங்குவதே மங்களத்துக்கு நிம்மதியாக இருந்தது. எங்கே விருப்ப மில்லாமல் கட்டாய படுத்தி நடந்த கல்யாணம், தன்னுடைய மகன் வாழ்க்கையை கெடுத்து விடுமோ என்று அஞ்சி இருந்தவள், இன்று வார்த்தைக்கு வார்த்தை என் பொண்டாட்டி, என் பொண்டாட்டி  என்று அவன்  சொல்வது அந்த தாய்க்கு நிம்மதியாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.