(Reading time: 20 - 39 minutes)

"எவன் பின்னடியாவது ஓடிருவன்னு. இப்படி கண்ணு முன்னாடியே வந்து இப்படி ஒரு வாழ்க்கையிலே உக்காருவேன்னு நினைக்கலையே. உங்க அப்பா கிட்ட இருக்குற, உன் அம்மாவோட நகை எல்லாம், தேன்மொழிக்கு  வந்துரும்னு நினைச்சேன். ஆனா அவர் அதை உன்கிட்ட கொடுக்க துடிக்கிறார். அதை கொடுக்க விட்டுருவேனா?"

....

"எவன் கிட்டயாவது உன் உடம்பை காட்டி அவனை மயக்கிருக்க வேண்டியது தான டி? மயங்குனா அவனும் உன்னை அனுபவிச்சிட்டு  நடு ரோட்ல விரட்டி விடுவான்.  எங்கயாவது ஆனாதையா திரிஞ்சு நாலு பேர் உன்னை நாசம் பண்ணி, துடி துடிச்சு நீ  சாகனும்.  உனக்கு எல்லாம் இந்த வாழ்க்கை கிடைக்கவே கூடாது டி. நீ நல்லாவே இருக்க கூடாது. இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை. உன் அழகை காட்டி எவனையாவது மயக்கி சூர்யாவை விட்டு ஓடிரு. இல்லைனா  நான் ஓட வைப்பேன். வேணும்னா நான் உன்னை அந்த மாதிரி இடத்துல வித்துட்டு வந்துரட்டா? தினமும் ஒருத்தன் கூட சந்தோசமா இருக்கலாம். அப்படி பட்ட வாழ்க்கை தான் உனக்கு கிடைக்கணும். நல்ல குடும்பத்துல எல்லாம் உன் நிழல் கூட பட கூடாது", என்று வள்ளி பேசி கொண்டிருக்கும் போது அடுத்த நொடி கத்தி இருந்தான் சூர்யா.

யாரையும் பார்க்க முடியாமல் அவமானத்தால் அழுது கொண்டே இருந்தாள் மதி. "ச்சி அம்மான்னு கூப்பிடாட்டியும் அம்மா மாதிரி தான இவளை நினைச்சிருந்தேன். ஆனா என்ன எல்லாம் பேசிட்டா. கடவுளே என் அம்மா இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா?", என்று நினைத்து தரையிலே அமர்ந்தவள் காலை மடக்கி சுருட்டி கொண்டு அழுது கொண்டே இருந்தாள்.

"என்ன ஆச்சு பா சூர்யா?", என்று கேட்ட படி அங்கு வேகமாக வந்தாள் மங்களம். சண்முகமும், சுப்பிரமணியும் அருகில் வந்தார்கள்.

யாரையும் கவனிக்காமல் "ச்சி நீயெல்லாம் பொம்பளையா?", என்று கேட்டு கொண்டே வள்ளியை  அடிக்கவே போய் விட்டான் சூர்யா.

"சூர்யா கண்ணா என்ன இது? பெரியவங்களை இப்படி எல்லாம் செய்யலாமா?", என்று அவன் கையை பிடித்து தடுத்தாள் மங்களம்..

"மரியாதையா? சே இவளுக்கு எல்லாம் மரியாதை ஒரு கேடு. பாருங்க மா கலை அழுறதை. எப்படி அழ வச்சிருக்காங்க பாருங்க"

அங்கே மதி அப்படி தான் அழுது கொண்டிருந்தாள். வாழ்க்கையே வெறுத்து, கேக்கும் அனைவரின் இதயமும் ரத்த கண்ணீர் வடிக்கும் அளவுக்கு ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள்.

"ஏன் பா மதி இப்படி அழுறா? நீ ஏன் வள்ளியை திட்டுற?", என்று கேட்டார் சுப்பிரமணி.

"இவங்களை எல்லாம் திட்ட கூடாது பா. கொலையே பண்ணனும்", என்றான் சூர்யா.

"மதி, இங்க பாரு மா என்ன ஆச்சு டா? எதுவா இருந்தாலும் பேசலாம். இப்படி அழ கூடாது மா", என்று அவள் கையை பிடித்தாள் மங்களம். அடுத்த நொடி அவள் கையை தட்டி விட்டுவிட்டு அழுது கொண்டிருந்தாள் மதி.

"என்ன ஆச்சு சூர்யா?", என்று கேட்டார் சண்முகம். 

"அதை ஏன் என்கிட்டே கேக்குறீங்க? உங்க அருமை பொண்டாட்டி கிட்ட கேளுங்க"

"ஏய் என் பொண்ணை என்ன டி சொன்ன?", என்று கேட்டார் சண்முகம்.

"ஆஹா இதுவல்லவா உங்க வீரம். அங்க ஒருத்தி சாகுற மாதிரி அழுதுட்டு இருக்கா. நீங்க சாதாரணமா என்ன செஞ்சன்னு கேக்குறீங்க? ஹ்ம்ம் உங்களுக்கு கலை உங்க பொண்ணுன்னு நினைப்பு இருந்தா தான? அப்படி உங்க பொண்ணுன்னு நினைச்சிருத்தீங்கன்னா அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா?", என்று கேட்டான் சூர்யா.

சண்முகத்தின் தலை குனிந்தது.

"உங்களை பத்தி எனக்கு எப்பவுமே நல்ல எண்ணம் இருந்தது இல்லை மாமா. எப்ப பொண்டாட்டி செத்த உடனே எவன் ஒருத்தன் இன்னொரு கல்யாணம் பண்றானோ, அவனை நான் என்னைக்குமே மதிச்சது இல்லை. இப்ப என்னமோ வீரமா கேக்குறீங்க? முன்னாடியே அத்தையை இப்படி கேட்டுருந்தீங்கன்னா இப்ப என் கலையை இப்படி பேசிருப்பாங்களா? பெத்த பொண்ணை பாத்துக்க துப்பு இல்லை. உங்களுக்கு ரெண்டு கல்யாணம் சே"

"சூர்யா, என்னப்பா இது? இப்படி மட்டு மரியாதை இல்லாம பேசுற?", என்று கேட்டார் சுப்பிரமணி.

"முடியலை பா. இந்த மாமாவால  தான் எல்லாம்"

"நான் விருப்ப பட்டு  எல்லாம் ரெண்டாவது கல்யாணம் பண்ணலை சூர்யா", என்றார் சண்முகம்.

"சரி விருப்பமில்லாம உங்களை கையை காலை கட்டி வச்சு கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்கன்னே வச்சுக்குவோம். அதுக்கப்புறம் ஒண்ணுக்கு ரெண்டு பிள்ளைங்களை பெத்து வச்சிருக்கீங்களே. அதுக்கு என்ன சொல்ல போறீங்க?"

"சூர்யா?", என்று அதட்டு போட்டாள் மங்களம்.

அமைதியாக நின்றான் சூர்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.