(Reading time: 7 - 14 minutes)

“கங்கா.. கங்காதரன்...” எனவும் அறை முழுவதும் நிசப்தமானது.. நந்தினி அதிர்ச்சியில் மண்டியிட்டு தரையில் அமர்ந்தார்.. வாசுவுக்கு ஒன்றும் புரியவில்லை.. ஆதி அனைத்தையும் விளக்க ஆரம்பித்தார்..

“தேன்மொழி, நந்தினி, தாயம்மா.. மூன்றுபேரும் சிறுவயதில் இருந்தே உயிர் தோழிகள்...”

“தேன்மொழியா.. அது யாரு?...” என வாசு கேக்க,

“தேன்மொழி கங்காதரனோட ஒரே தங்கை..”

“ஓ..”

“ம்ம்ம்.. 3 பேரும் ரொம்ப க்ளோஸ்.. கங்கா தன் தங்கை மேல உயிரையே வைத்திருந்தான்.. அவனுக்கு யாரும் கிடையாது.. சின்னவயசுலயே அவனோட அப்பா அம்மா இறந்துட்டதுனால அவன் தங்கையை தான் தன் உலகமா நினைச்சு வாழ்ந்தான்.. கல்யாணம் கூட பண்ணிக்கல..”

“அவனுக்கு நந்தினியை கல்யாணம் பண்ணிக்கனும்னு விருப்பம் இருந்தது.. காதல்னு கிடையாது.. நந்தினியை கல்யாணம் பண்ணினா தன் தங்கையை நல்லா பாத்துப்பான்னு நினைச்சிருந்தான்.. ஆனா நந்தினி என்னை விரும்பினாள்.. அது அவனுக்கு அப்போ தெரியாது..”

“அதேபோல தேன்மொழி தாயம்மாவோட முறைபையன் ஆதியை விரும்பினாள்.. ஆமாம் அவன் பேரும் ஆதி.. இந்த ஆதிங்கற பெயரினால் எங்க வாழ்க்கையே மாறிடுச்சு.. தேன்மொழி ஆதியை விரும்ப, அவனும் இந்த பொண்ணை விரும்புற மாதிரி நடிச்சிருக்கான்.. உண்மையில் ஆதிக்கும், தாயம்மாவுக்கும் தான் கல்யாணம்னு அவங்க வீட்டு பெரியவங்க முடிவு பண்ண விஷயம்.. ஆனா இதில் தாயம்மாவுக்கு விருப்பம் இல்லாததுனால இதை பெருசா நினைக்கல.. கல்யாணப்பேச்சு வரும்போது பாத்துக்கலாம்னு நினைச்சிருக்காங்க.. அப்போ தான் கங்காதரனுக்கு தன் தங்கை ஆதியை விரும்புற விஷயம் தெரியவந்தது.. அவன் செய்த ஒரே தப்பு, ஆதி நான்னு நினைச்சதுதான்.. என்னை பத்தி நல்லவனான்னு விசாரிக்க, நல்லதாகவே எல்லோரும் சொல்ல, அவன் அவனோட தங்கை விருப்பபட்டபடியே எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு நினைச்சான்..”

“அப்போதான் தாயம்மாவுக்கு தேன்மொழி காதல் விஷயம் தெரிய வந்துருக்கு.. அதனால அவளிடம் எச்சரிக்கை செய்தாள்.. ஆதி நல்லவன் இல்லை.. உன்னை ஏமாத்துறான்னு.. அவனுக்கு பல பெண்களோட தொடர்பு இருக்குன்னு.. அதை கேட்டு அந்த பொண்ணு நம்பல.. அதனால ஒருநாள் நேரிலே கூட்டிட்டு போய் அவனை பத்தி காமிச்சிருக்கா.. அதை பார்த்து மனசொடிஞ்சு அவனிடம் நியாயம் கேக்க, அவன் இந்த பொண்ணு பத்தி தப்பு தப்பா பேசி அவளோட காதலை கொச்சை படுத்த, அந்த பொண்ணு அடுத்த நாளே தூக்கு மாட்டிக்கிச்சு.. அந்த நாளில் தான் எனக்கும் நந்தினிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.. அடுத்தநாள் திருமணம்.. கங்காதரன் நான் அவன் தங்கையை ஏமாத்திட்டதா நினைசிட்டான்.. நான் சொன்ன வந்ததை அவன் கேக்கவே இல்லை.. தாயம்மா சொன்னதும் கேக்கல.. நந்தினியை துரோகியா நினைச்சான்.. தான் உயிர் தோழி வாழ்க்கையை அபகரிச்சி அவளை கொன்னுட்டாள்னு நினைத்தான்.. என்னையும் பழி வாங்க நினைத்தான்.. எனக்கு தொழில் மூலமா குடைச்சல் தந்தான்.. நந்தினியை கொலை பண்ண நினைச்சான்.. அப்புறம் எந்த வாழ்க்கைக்காக நந்தினி தன் தோழி உயிர் போக காரணமாய் இருந்ததோ, அந்த வாழ்க்கை கிடைக்க கூடாதுன்னு நினைத்தான்.. கணவனையும் இழந்து தன் குழந்தையையும் இழந்து அவள் தனி மரமா தவிக்கனும்னு நினைச்சி என்னை கொலை பண்ண ட்ரை பண்ணான்.. எனக்கு தலையில் அடி பட்டது.. ஆனா நான் தப்பிச்சிட்டேன்.. நான் இறந்தா மாதிரி எல்லோரையும் நம்ப வைத்தேன்.. அப்புறம் என் குழந்தை பிறந்ததும் என் பிரண்ட் மனோகரை கூப்பிட்டு அவன்கிட்ட நடந்ததை சொல்லி என் குழந்தையை பாதுகாப்பா வளர்க்க சொன்னேன்.. நிலைமை சரியானதும் அமிர்தாவை கூட்டிட்டு போயிடுவேன்னு சொல்லி தாயம்மாவையும் கூட அனுப்பினேன்.. அப்போ எனக்கு தலையில் அடி பட்டதை கவனிக்காம விட்டதால் நான் மயக்கமாகி கோமாக்கு போயுட்டேன்.. எப்படியோ இப்போ நினைவு வந்து தாயம்மாவும் என்னை தேடி வந்தாங்க.. அதனால நான் உங்க கிட்ட வந்து சேர்ந்துட்டேன்..” என அனைத்தையும் கூறி முடிக்க நந்தினி அதை கேட்டு அழுதுக்கொண்டிருந்தார்...

வாசுவுக்கு மலைப்பாக இருந்தது.. இதை சரி செய்ய அனைவரும் திட்டம் தீட்டினர், பின் நினைவு வந்தவராய்..

“அம்முகிட்ட நீங்க ஏன் பொய் சொன்னீங்கன்னு இப்போ புரியுது..” என வாசு கூற,

“ஆமாம்.. அம்முவுக்கு இதை பத்தி எதுவும் தெரியகூடாது.. மனோ, ஆனந்தி இறந்ததுக்கு தான் தான் காரணம்னு நினைச்சி வருத்தபடுவா.. அதனால தான் சொல்லல..” என்றார் தாயம்மா..

தொடரும்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.