(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 20 - தேவிஸ்ரீ

En nilavu devathai

விடிந்தால் நிச்சயதார்த்தம்... மொட்டை மாடி குளிரில் அமிர்தா நின்று கொண்டிருந்தாள்.. அப்போது விக்ரம் அங்கு வந்து சேர்ந்தான்.. அதை கண்டு அவ்விடத்தை விட்டு செல்ல முயன்றவளை கைப்பற்றி நிறுத்தியவன்,

“எனக்கு உன்கிட்ட 5 நிமிடம் பேசணும் அம்மு.. ப்ளீஸ்.. அப்புறம் உன்னை இங்க நிற்க சொல்லி வற்புறுத்த மாட்டேன்.. 5 நிமிடம் டா..”

“உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்லாத போது நான் ஏன் இங்க நிக்கணும்?..” என்றவளை வருத்தத்துடன் நோக்கியவன்..

“ஏன்னா நானும் நீயும்..” என்றவன் அதோடு நிறுத்தினான், பின் ஆழ்ந்து பெருமூச்சை வெளியிட்டவன், “நாளைக்கு நமக்கு engagement.. உனக்கு விருப்பம் இல்லைன்னு எல்லோர்கிட்டயும் சொல்லிருக்க, என்கிட்டே சொல்ல தோணலையா..”

“உங்ககிட்ட சொன்ன மட்டும் நிச்சயதார்த்தம் நின்னுடுமா..” என நக்கலாய் கேட்டவளை கண்டு முகம் சுருங்கியவன்,

“எனக்கு ஒரே கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு அம்மு.. அன்னைக்கு hospitalல உன்கிட்ட நான் பேசியது தப்பு தான், உன் மனசை நான் ரொம்ப காயபடுத்திடேன்.. அதுக்காக நான் என்ன தண்டனைனாலும் எத்துகுறேன்.. ஆனா அன்னைக்கு நடந்த தப்பால நான் உன் மேல வெச்ச லவ் பொய் ஆகிடாது.. நான் உன்னை உண்மையா காதலிக்கிறேன்டீ, அன்னைக்கு கோபத்தில் பேசிய வார்த்தைக்காக என் லவ் பொய் ஆகிடுமா.. இல்லை நீ என்னை காதலிச்சது தான் மாறிடுமா.. நான் செய்தது தப்பு தான், அதுக்காக என்னையே வேண்டாம்னு தூக்கி எறிய உன்னால் முடியுமா.. உனக்கே தெரியும் நான் என் தங்கை மித்ரா மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்கேன்னு, அதனால வந்த கோபத்தில் உன்னை காயபடுத்திட்டேன், அதுக்கான மன்னிப்பு எனக்கு கிடைக்காதா நிலா..” என குரல் உடைந்து கேட்பவனை கண்டு உள்ளம் வலித்தாலும்,

“என்ன பேசுறிங்க மிஸ்டர் விக்ரம், அது சரி.. என்னை என்னைக்கு நீங்க முழுசா புரிந்து கொண்டீங்க, இன்னைக்கு புரிந்துகிறதுக்கு, நான் அன்னைக்கு hospital நடந்த விசயத்தால தான் உங்க மேல கோபமா இருக்கேன்னு நினைக்கிறீங்க அதுதானே...”

“ஆமா” என குழப்பத்தில் பதிலளித்தவனை கண்டு விரக்தி புன்னகை புரிந்தவள்,

“நீங்க என்னை புரிந்துக்கவே இல்லை..”

“என்ன சொல்ற நிலா.. அன்னைக்கு நான் பேசியதுக்காக நீ வருத்தபடலையா?..”

“இல்லை, எனக்கு வருத்தம் இருந்தது உண்மை தான்.. ஆனா மித்ராவுக்கு அப்படி நடந்ததுக்கு நானும் ஒரு காரணம்னு எனக்கு தெரியும், அதனால நீங்க திட்டியது எனக்கு கஷ்டமா இருந்தாலும் அது எனக்கு பெருசா பாதிக்கல, ஆனா அதுக்கப்புறம்,..”

“ஆனா என்ன நிலா.. உன்னை எந்த விசயத்துல காயப்படுத்தினேனு எனக்கே தெரியல டா.. ப்ளீஸ் எதுவாக இருந்தாலும் சொல்லு டா..”

“சொல்லனுமா.. சொன்னா என்ன செய்வீங்க.. நீங்க ஒரு முறையாவது மித்ராவையோ உங்களையோ பார்க்க என்னை விட்டிங்களா.. சொல்லுங்க விக்ரம்..” என அவன் சட்டையை பிடித்தவள்,

“உங்க கோபம் குறைந்ததும் என்னை பார்க்க உங்களுக்கு தோணலையா, மித்ரானா எனக்கும் உயிர்னு உங்களுக்கும் தெரியும்.. அவளையும் உங்களையும் பார்க்காம நான் எவ்ளோ தவித்தேன்னு உங்களுக்கு தெரியுமா.. ஆறு மாசம், ஆறு மாசமா நான் இருந்தேனா செத்தேனானு உங்களுக்கே அக்கறை இல்லாத போது இப்போ மட்டும் பெருசா அக்கறை வந்துடுச்சோ...” என கோபத்துடன் கேட்டாள்..

“சரி, அதெல்லாம் விடுங்க, நீங்க எப்போ என்னை தேட ஆரம்பிச்சிங்க?..”

“இந்த ஒரு மாசமா..” என இழுத்தான்.

“அப்போ அதுக்கு முன்னாடி..?”

“நான்...”

“சொல்லுங்க, நீங்க...”

“அப்போ நான் உன்னை பத்தி தெரிந்துக்க விருப்பம் இல்லாம இருந்தேன்..” என மெதுவாக கூறியவனை கண்டு,

“இப்போ மட்டும் என்ன திடீர் அக்கறை..”

“அது..”

“சொல்லுங்க..”

“மித்ரா ஒரு மாசம் கழித்து கண் விழித்த போது உன்னை கேட்டா.. அப்போ நான் நடந்ததை சொன்னேன், அப்போ அவ என்கிட்டே சண்டை போட்டு என்கிட்டே பேசுறதையே நிறுத்திட்டா.. எனக்கு என் தப்பு புரிந்தாலும் எதோ ஒரு கோபம் உன்மேல, அதனால உன்னை பத்தி கண்டுகொள்ளாமல் விட்டுட்டேன்.. அப்புறம் ஒருமாசம் முன்னாடி உன் family accident பத்தி சொல்லி என்கிட்டே சண்டை போட்டா.... அதுல இருந்து என் மனசு உறுத்துச்சி, அப்போது இருந்து உன்னை தேடினேன்..”

“பரிதாபத்துல தேடிருக்கிங்க இல்லையா..”

“அப்படி இல்லமா..”

“மித்ரா என்னை எப்போதுல இருந்து தேடினாள்?..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.