(Reading time: 6 - 12 minutes)

“5 மாசமா..” என தயக்கத்துடன் விக்ரம் கூற,

“இப்போ சொல்லுங்க விக்ரம், என் லைப் ல எது உண்மையானதா இருந்துருக்கு? நட்பா? காதலா?..”

“ப்ளீஸ் அம்மு..”

“மித்ரா என் family பத்தி சொல்லலைனா நீங்க என்னை கண்டு கொள்ளாமையே இருந்துருப்பிங்க.. என்ன நான் சொல்றது சரியா..?”

“ஆமா நான் தான் உங்க பார்வையில் உங்க தங்கை வாழ்க்கையில் வந்த வில்லியாச்சே.. இப்போ இந்த வில்லி தேவதையா ஆகிட்டாளா.. எப்படி உங்க கோபம் காணாம போச்சி?..”

“என்ன பதில் சொல்ல முடியலையா... அப்போ அன்னைக்கு நீங்க நடந்தது சரியா?.. தப்பா?..”

“நீங்க நான் எங்க போனேன், என்ன ஆனேன்னு யோசிக்க கூட இல்லையா விக்ரம்..” என அம்மு கேக்க,

“sorry நிலா.. நான்..”

“ஏதாவது சொல்லி சமாளிக்காதிங்க விக்ரம், எல்லோரையும் இழந்துட்டு நான் தனியா நின்னப்போ உங்க அருகாமைக்கு எவ்ளவோ ஏங்கினேன்.. உங்க தோளில் சாயணும், நீங்க என்கூடவே இருக்கணும், எனக்கு நீங்க ஆறுதல் சொல்லனும்னு என்னனவோ நினச்சேன், எதுவும் நடக்கல, என் பிரண்ட் மித்ராவையும் சந்திக்க முடியல, எல்லா உறவும் என்னை விட்டு போயிடுச்சி,, இதுக்கு எல்லாம் எது காரணம்.. உங்க கோபம், என்னை விட்டுட்டு போனவரு, இப்போ மட்டும் எதுக்கு வந்திங்க.. எனக்கு வேண்டாம், நீங்க வேண்டாம்.. போங்க, போயிடுங்க..” என அழுதுகொண்டே அங்கிருந்து ஓடி அவள் அறையில் புகுந்தவள் கட்டலில் விழுந்து அழுதாள்..

விக்ரம் தன தவறை எண்ணி வருந்தினான்.. அவள் கேட்ட கேள்விகள் அவன் நெஞ்சை குத்தியது..

மறுநாள் காலை நிச்சயதார்த்த ஏற்பாடு கோலாகலமாக ஆரம்பித்தது... அவ்விழாவின் நாயகன், நாயகியின் முகத்தில் மறந்தும் சிரிப்பில்லை.. ஆனால் அவர்களை தவிர அனைவரும் மகிச்சியுடன் உலா வந்தனர்.. வீட்டு சுட்டிகளை கேட்கவும் வேண்டுமா...

பெப்சி ப்ளுவில் பட்டு சேலையில் வைர நகைகள் மின்ன, சேலை கலருக்கு பொருத்தமான வளையலுடன் மிதமான மேக்அப்போடு தேவதையாய் அம்மு அமர்ந்திருக்க, அதற்கு பொருத்தமாய் அதே வண்ண சட்டையில் பட்டு வேட்டி உடன் அவளருகில் விக்ரம் அமர்ந்திருந்தான்.. ஆறுமுகவேலுவை பொறுத்தவரை குடும்ப விழா எனில் கட்டாயம் பாரம்பர்ய உடை தான்.. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அதை தான் அணிய வேண்டும்..

இவர்கள் நடுவே அதே வண்ண பட்டு சட்டை பாவாடையில் யமுனா அமர்ந்திருந்தாள்..

முதலில் மோதிரம் அணிவிக்கும் சடங்கு ஆரம்பித்தது.. அம்மு இயந்திர கதியில் அவனுக்கு மோதிரம் அணிவிக்க, அவனோ அவளின் விரலில் மென்மையாய் மோதிரத்தை அணிவித்தான்.. அதை கண்டு யமுனாவும் எனக்கும் மோதிரம் வேண்டுமென அடம் பிடிக்க, இதை எதிர்பார்த்திருந்த மித்ரா  அவளுக்காக வாங்கி வைத்திருந்த சிறு மோதிரத்தை அவள் விரலில் அணிவித்தாள்..

பின் தன் குடும்ப அட்டிகை ஒன்றை மாப்பிள்ளை தரப்பாக அனு தனது மகள் மித்ராவின் கைகளில் கொடுத்து அம்முவின் கழுத்தில் அணுவிக்க சொல்ல, அதை கேட்டு அம்முவின் கழுத்தில் அட்டிகையை மாட்டினாள் மித்ரா..

பின் அனைவரும் அம்மு விக்ரமை ஆசிர்வதித்து அவர்கள் கன்னத்தில் சந்தானம் பூச ஆரம்பிக்க, அங்கு கூட்டத்தினிடையே சலசலப்பு.. என்னவென்று அனைவரும் வீட்டு வாயிலை நோக்க, அங்கு நிற்பவர்களை கண்டு பெரிதும் அதிர்ந்தனர்..

தொடரும்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.