(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 19 - தேவிஸ்ரீ

En nilavu devathai

Accident ஆனப்போ ஒரு மாசம் கழிச்சி தான் நான் கண் விழித்தேன்.. அப்போ தான் அம்முவை பத்தி விசாரிச்சி நடந்தது தெரிந்துகிட்டு, அண்ணா மேல ரொம்ப கோபப்பட்டேன்.. அப்போதுல இருந்து நான் அண்ணா கிட்ட பேசறதையே விட்டுட்டேன்..

அதுக்கு அப்புறம் அம்மு அக்கா இறந்துடாங்கன்னும் அதை தொடர்ந்து அவங்க familyயும் accidentடில் இறந்துடாங்கன்னும் என் பிரண்ட் மூலமா நான் கேள்வி பட்டு நான் அவளை தேடினேன்.. ஆனா என்னால அவ எங்க இருக்கானு கண்டுபிடிக்க முடியல, அப்போ தான் நீங்க கோவிலுக்கு போகணும்னு என்னை கட்டாயமா வர சொன்னதால வந்தேன்.. அம்முதான் என் அத்தை பொண்ணுன்னு உங்க மூலமா தெரிந்துக்கிட்டேன்... அதுக்கப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருந்தது..” என கூறி முடித்தாள் மித்ரா..

வாசுதேவன் அங்கு அம்முவை கண்டு பிடித்து வரும்போது ரிஷி அங்கு வந்து அதுவரை அம்முவுக்கு நடந்த கொலைமுயற்சியை கூறி தனக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்துள்ளதால் அம்முவின் கேஸ் இனி என்னால் விசாரிக்க முடியாததால் அம்முவை பத்திரமாக பார்த்து கொள்ளும்படி எச்சரித்தான்.. என வாசுதேவன் கூறி முடித்ததும் மித்ராவின் கண்களில் கண்ணீர் வந்தது.. அனைத்தையும் கேட்டு வாசுதேவனுக்கும் புகழுக்கும் மன பாரமாகி விட்டது.. அம்முவின் கோபம் நியாயமாக தோன்றியது..

“இனி என்ன பண்ணலாம் குட்டி.. விக்ரம் செய்தது ரொம்ப தப்பு.. அவனுக்கு இந்த தண்டனை தேவை தான், ஆனா இவங்க கல்யாணம் நடந்தே ஆகணும்னு சங்கர ஐயா சொல்றாரே...” என வாசுதேவன் மித்ராவை பார்த்து கேட்க,

“அப்பா.. நீங்க எதையும் யோசிக்க தேவையே இல்லை.., அண்ணாக்கு தண்டனை தேவை தான்.. ஆனா இரண்டு பேருமே லவ் பண்ணது உண்மை, அண்ணாவோட முன்கோபத்தால தான் இந்த பிரச்சனையே.. ஆனா ஒன்னு மட்டும் உறுதி.. இவங்க வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டாங்க.. வாழ்க்கை முழுவதும் கல்யாணம் பண்ணாம முறைச்சிக்கிட்டே தான் இருப்பாங்க.. அதுக்கு நாமளே இவங்களை கட்டாய படுத்தியாவது கல்யாணம் பண்ணி வெச்சு தான் ஆகணும்.. நீங்க தாத்தாக்கிட்ட இது பத்தி பேசுங்க..” என கூறி முடித்தாள் மித்ரா..

வாசுதேவனுக்கும் அதுவே சரியென பட்டது.. எனவே அவர் தன் மாமனார் ஆறுமுகவேலுவை பார்க்க சென்றார்..

புகழ் கோபமாக இருந்தான்.. அவனுக்கு accident தற்செயலாக நடந்தது என நினைத்துகொண்டு இருக்கையில் இப்போது அவள் கூறியதை கேட்டு ஆத்திரமடைந்தான்..

“ஏன் என்கிட்டே சொல்லல..” என அழுத்தமான குரலில் கேட்க,

“SORRY புகழ். இதை சொன்ன நீ அம்முமேல கோபப்படுவயோனு நினைச்சேன்.. ஏற்கனவே என் அண்ணா கோபத்தில் தப்பு பண்ணிட்டான்.. அதான்.. SORRY..” என கூறி முடித்ததும் அவன் கோபமாக வெளியே சென்றான்..

இங்கு அம்மு விக்ரம் பாடிய பாட்டை நினைத்து பார்த்தாள்.. மனது வலிக்க செய்தது.. ஹாஸ்பிடலில் விக்ரம் பேசிய வார்த்தைகளால் அம்முவுக்கு மனகாயம் அடைந்தது உண்மையே.. ஆனால் தானும் தவறு செய்திருக்கிறோம் என அவளுக்கும் புரிந்திருந்தது.. அதனால் தான் மீண்டும் மீண்டும் மித்ராவையும் விக்ரமையும் பார்க்க முயற்சித்தாள்..

ஆனால் விக்ரம் மித்ராவின் நிலைமையை பார்த்து பார்த்து அம்முவை பார்க்க தவிர்த்தான்.. விக்ரமின் ஆட்கள் அம்முவை உள்ளே விடவில்லை.. விக்ரமுக்கு அம்முவின் மீது கோபம் இருந்தது.. ஆனாலும் அன்று பேசிய வார்த்தைகளை நினைத்து வருத்தபட்டான், அவளிடம் மன்னிப்பு கேட்க நினைத்தாலும் மித்ராவின் நிலையை பார்த்து அவன் கோபம் குறையவில்லை..

அப்போது தான் அன்புதரங்கிணி நிலைமை மோசமாக, உடனடியாக அம்முவும், யமுனாவும், தாயம்மாவும் US கிளம்பினர்.. திருமணமாகி 2 மாதத்திலே கணவனை இழந்த அன்பு, இப்போது தானும் இறக்க போவதை உணர்ந்து தன் குழந்தையை அம்முவின் பொறுப்பில் விட்டுவிட்டு நிம்மதியாக கண் மூடினாள்.. பின் அனைவரும் சென்னை வந்தனர்... தாயம்மா மட்டும் ஒரு வேலையாக வெளியூர் சென்ற சமயத்தில் அனைவரும் மன அமைதிக்காக கோவில் செல்லும் போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது, அம்முவும் யமுனாவும் மட்டும் அந்த ACCIDENTடில் பிழைத்தனர், இப்படி எதிர்பாராமல் நடந்ததை அம்முவால் தாங்க முடியவில்லை.. அன்று விக்ரமின் அருகாமைக்கு ஏங்கினாள், அவள் தோளில் சாய்ந்து கொள்ள அவன் வேண்டுமென ஆசைப்பட்டாள்.. ஆனால் அவ்வாறு ஏதும் நடக்க இயலாததால் கண்ணீர் வடித்தாள்.. அப்போது தான் அவன் இதுவரை தன்னை கண்டு கொள்ளாததை கண்டு அவளுக்கு விக்ரமின் மீது அளவுகடந்த வெறுப்பு கூடியது.. அதன் பின் அவனை சந்திக்க முயற்சி செய்யவேயில்லை.. தாயம்மா விவரம் தெரிந்து accident ஆன அடுத்த நாளே வந்தவர் அம்முவுக்கு உறுதுணையாக இருந்தார்.. விக்ரமுக்கு விவரம் சொல்ல முயற்சித்தவர் அம்முவின் கோபத்தால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.. அதன் பின் மறுபடியும் அவர் வெளியூர் செல்ல, காரணம் கேட்ட அம்முவிடம் மழுப்பி விட்டார்.. அம்முவை பத்திரமாக இருக்க சொன்னவர் 3 நாளில் வந்து விடுவதாக வாக்களித்தார்.. அப்போது தான் வாசுதேவன்  அம்முவை தேடி அங்கு வர, தாயம்மா அவரை இனம் கண்டு கொண்டு அவரோடு அனுப்பி வைத்தார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.