(Reading time: 15 - 30 minutes)

ம்முவுக்கு விக்ரம் மீது முதலில் எவ்வாறு அளவு கடந்த பாசம் இருந்ததோ அதே அளவு வெறுப்பு ஏற்பட்டது.. அதே போல் தன் வளர்த்த குடும்பம் பற்றி  வாசுதேவனிடம் உரைத்தவள் விக்ரமை பற்றி கூறவில்லை தாயம்மாவையும் கூற விடவில்லை.., அதேபோல் யம்முவின் அம்மாவை பற்றி கூறாமல் தன் குழந்தை என அவர் நினைக்கும்மாறு செய்து விட்டாள்.. இப்போது சந்திக்க போகும் குடும்ப உறவுகளுக்கு தன் வளர்த்த குடும்பத்தை பற்றி கூற வேண்டாமென சத்தியம் வாங்கினாள்.. அவர்களை பொறுத்தவரை தான் யம்முவின் அம்மா, அப்போது யாரும் தன் திருமணம் பற்றி யோசிக்க மாட்டார்கள்.. விக்ரமை நினைத்து கொண்டு வேறு யாரையும் மணக்க இயலாது.. எனவே காலம் முழுவதும் யம்முவுக்காக வாழ்ந்து விடலாம் என யோசித்து இந்த முடிவெடுத்தாள்.. அது மட்டுமில்லாமல் அவர்கள் இறந்த செய்தி கேட்டு அனுதாபப்பட வேண்டாமென நினைத்தாள், அவளே அவர்கள் நினைவில் தவித்து கொண்டு இருக்கும் போது அதை பற்றி பேசி மனம் வலிக்க கூடவே விக்ரமின் நினைவு வரும்.. வேண்டாம்.. கூடவே கூடாது.. யாருக்கும் நான் எதையும் கூறப்போவது இல்லை.. தன் உரிமையான புதிய குடும்பம் தன்னை எவ்வாறு ஏற்றுகொள்ளும் என தெரியாத நிலையில் எதையும் கூறாமல் இருப்பதே நல்லது.. அதுமட்டுமில்லாமல் வாசுமாமா பேசும் போது தன் குடும்பம் கூட்டுக்குடும்பமாக இருக்கிறது என்பதை கவனித்தாள்.. அப்படியிருக்கையில் அங்கு தன் வரவு யாருக்காவது பிடிக்காமல் போகலாம்.. அப்படி பிடிக்காமல் போகும் பட்சத்தில் யம்மு தனது  குழந்தை இல்லை எனும் போது அவளை பாரபட்சம் காண்பித்து ஒதுக்கலாம் என அன்று பலவாறு யோசித்தது அவள் மனம்..

ஆனால் தான் நினைத்தது அனைத்தும் தவறு என இப்போது அனைத்தும் புரிந்தது.. அனைவரும் அன்போடு தன்னை ஏற்றுகொண்டதுமட்டுமில்லாமல் யம்முவை யாரென தோண்டி துருவி விசாரிக்காமல் அவளும் இந்த குடும்பத்தின் குழந்தை என அனைவரும் அவளை பாசமாக பார்த்துகொண்டதிலேயே புரிந்தது அவர்கள் பணத்தால் மட்டுமில்லாமல் மனதிலும் பெரியவர்கள் என...

விக்ரமின் நினைவு வரவே கூடாது என நினைத்தவளுக்கு அவனே தன் அத்தை மகன் என தெரிந்தது அவள் ஓரளவு எதிர்பார்த்தது தான்.. காதலித்த தருணத்தில் அவன் ஏற்காட்டை சேர்ந்தவன் என தெரிந்தவள் தான், அது மட்டுமில்லாமல் அவன் அத்தை தன்னை போல் இருப்பதை பல முறை சொல்லியிருக்கிறான், அப்படி இருக்கையில் தன் அம்மா நகநந்தினிதேவியை பார்த்த போதே அவளுக்கு சந்தேகம் உருவானது.. ஆனால் அவள்தான் அப்படி இருக்காது என தன் மூளையிடமும் மனதிடமும் பொய்யாய் நம்பவைத்தாள்.. ஆனால் தாயம்மா ஏன் அப்போதே உண்மையை கூறாமல் வாசு மாமா வந்ததும் அனுப்பி விட்டாரே.. எப்படி என குழம்பினாள்.. அவரிடம் பேச முயற்சி செய்தால் லைன் போகவே இல்லை.. சலிப்புடன் அந்த எண்ணத்தை ஒதுக்கினாள்..

“அம்மா..”

“அடடே.. என் பட்டுகுட்டி தூங்கி எழுந்திரிச்சி வந்தாச்சா?..”

“ம்ம்.. அம்முவோட யம்முவுக்கு இப்போ பசிக்கிது..”

“அப்படினா நான் இப்போவே அம்முவுக்கு பிடிச்ச கட்லெட் ரெடி பண்ணுவேனாம், அம்மு அதுக்குள்ளே ஒரு க்ளாஸ் பால் குடிப்பாங்கலாம்..”

“பால் வேணாம்.. லட்டு வேணும்..”

“அப்படியே என்னைமாதிரியே இருக்கா..” என முணுமுணுத்தவள்

“நீ தரமாட்ட, நான் பாட்டிகிட்டயே வாங்கிகறேன்.. என் கட்லெட் 10 நிமுசதுல தர..’ என்றவள் அங்கிர்ரிந்து குடுகுடுவென ஓட, அதை கண்டு,

“அடிங்..’ என கோபத்தில் சொல்ல, அடுத்த நிமிடமே மெல்லிதாய் புன்னகைத்தாள்.. யமுனா மட்டும் இல்லை என்றால் தன் வாழ்வே குறை என்பது அவளுக்கு புரியாமல் இல்லை.. பின் வேகவேகமாக சமையல் அறைக்கு சென்றாள், தன் செல்ல மகளுக்கு கட்லட் செய்ய...

விக்ரம் கன்னத்தில் பலமாய் விழுந்தது அடி ஒன்று, அதுவும் தன் அன்பான அத்தையிடமிருந்து... ஆம்.. தான் செய்த தவறனைத்தும் தன் அத்தையிடம் கூறி முடித்ததும் அடுத்த நிமிடம் நடந்தது, தன் அத்தையின் கையால் அடி வாங்கியது தான்.. ஆனாலும் அவனுக்கு வலிக்கவில்லை, தன் தவறை உணர்ந்தவனுக்கு இதை விட பெரிய தண்டனை கிடைக்க வேண்டுமென நினைத்தான்..

ஆனால் நந்தினிக்கோ அதை விட அதிகம் வலித்தது.. தன் மகளுக்காக வருத்தபடுவதா?.., இல்லை தன முன்கோபத்தால் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி நிற்கும் தன் அன்பு மருமகனை நினைத்து வருத்தபடுவதா?.. என அவருக்கு புரியவில்லை.. ஆனால் அடித்த மறுநிமிடமே அவனை தோளில் சாய்த்துகொண்டு அழுதார்.. பின் கண்துடைத்தவர் ஒரு முடிவுக்கு வந்தவராய்,

‘நான் உனக்கு சத்யம் பண்றேன் விக்ரம்.. என் மகள் உனக்கு தான்.. அவள் உன்னை கல்யாணம் பண்றதுக்கு நான் உறுதியளிக்கிறேன்.. ஆனா நீ எனக்கொரு சத்யம் பண்ணனும்.. எந்த கஷ்டத்திலும் நீ அவளுக்கு துணையா இருக்கணும், எப்போதும் அவளை விட்டு பிரிய கூடாது.. முக்கியமா நீ உன் முன்கோபத்தை அடியோடு விட்டாகணும் விக்ரம்..’

‘சத்யம் அத்தை.. நான் அவளை கண்ணுக்குள்ள வெச்சி பாத்துக்குவேன்.. என் கோபத்தை இனி அவளிடம் விளையாட்டுக்கு கூட காண்பிக்கமாட்டேன்.. ஆனா அவள் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா.. அவளை இனிமேலும் கஷ்டபடுத்த வேணாம்னு நினைக்கிறேன்.. எனக்கு இந்த தண்டனை தேவை தான் அத்தை..” என கண்ணீருடன் கூறும் அவனை கண்டு நந்தினிக்கு உள்ளம் கசிந்தது.. இதுவரை அவன் அழுது பார்த்திராதவள் இன்று அதை கண்டு அவர் மனம் வலித்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.