(Reading time: 15 - 30 minutes)

“உங்க தாத்தா சொன்னது தான் நடக்கும்..புதன்கிழமை உனக்கும் விக்ரமுக்கும் நிச்சயதார்த்தம்.. 3 மாதம் கழித்து கல்யாணம்.. உன் விருப்பம் இருந்தாலும், இல்லைனாலும்.. இதுக்கு மேல பேச எதும் இல்லை.. எங்க எல்லோருடைய பேச்சுக்கு மதிப்பு தருவதா இருந்தா எந்த பிரச்சனையும் பண்ணாத..” என கோபமாய் கூறிவிட்டு அவரறைக்கு சென்றார்..

“ஆனா அம்மா..” என்றவளின் குரல் காற்றில் கரைந்து போனது.. அனைவரும் அவரவர் அறைக்கு திரும்ப அம்மு தனித்து நின்றாள்.. விக்ரம் அவளருகே வந்து அவள் தோளை தொட, அவன் கையை தட்டிவிட்டவள் நேராக தாத்தாவின் அறைக்கு சென்றாள்..

“தாத்தா...  உங்க எல்லோருக்கும் விக்ரம் பத்தியும் என்னை பத்தியும் தெரியும்னு எனக்கு புரிந்துடுச்சி... ப்ள்ஸ் தாத்தா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்..” என அவர் மடியில் தலை வைத்து கண்ணீர் விட்டவளை கண்டு மனம் வருந்தினாலும், அவள் நன்மைக்காக,

“நீ ஏன் மா விக்ரமை வேண்டாம்னு சொல்ற.. உனக்கு அவனை பிடிக்காதா...”

“அவனை பிடிக்காதா..” என்றவள், “அவனை மட்டும் தான் பிடிச்சிருந்தது தாத்தா.. அவரை எவ்ளோ விரும்பினேன் தாத்தா.. ஆனா அவரு.., வேண்டாம் தாத்தா.. இந்த கல்யாணம் வேண்டாம் தாத்தா.. ப்ளீஸ் தாத்தா..”

“விக்ரமை உனக்கு பிடிக்கல இல்லையா...” என அவர் கேட்க, அவளோ,

“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் தாத்தா..”  என மறுபடியும் அவள் பேச்சை மாற்றுவது போல் கூறவும், அந்த பதிலை வைத்தே அவள் இன்னும் விக்ரமை விரும்புகிறாள் என அவருக்கு புரிந்தது..

“சரிமா.. நீ விக்ரமை கல்யாணம் பண்ண வேண்டாம்.. தமிழை கல்யாணம் பண்ணிக்கிறயா... இல்லைனா வேறு யாரையாவது... நீ கல்யாணம் பண்ணிதான் ஆகணும் அமிர்தா.. காலம் முழுதும் நீ கன்னியாவே இருக்கணும்னு நினச்சா உன் அம்மா உயிரை விட்ருவா.. உனக்கு விக்ரம் மேல தானே வெறுப்பு.. தமிழ் உன் சின்ன மாமன் பையன்.. அவன் மேல உனக்கு வெறுப்பு வர வாய்ப்பே இல்லை.. சொல்ல போன FACEBOOKல உன்னை கண்டு பிடிச்சதே அவன் தான்... உனக்கு 3 மாதத்தில் திருமணம் நடந்தே ஆகணும்.. அது யாருன்னு நீதான் முடிவெடுக்கணும்.. உர சாய்ஸ் தான் மாப்பிள்ளை.. ஆனா கல்யாணம் நடந்தே ஆகணும்..” எனவும் அம்மு தலையை பிடித்து உட்கார்ந்து விட்டாள்.. பின் எதுவும் பேசாமல் கோபமாய் வெளியே சென்றாள்.. அதை கண்டு ஆறுமுகவேலு தனக்குள் சிரித்து கொண்டார்..

அதன் பின் வரிசையாக அம்மா, தன இரு சித்தப்பாக்கள், வாசு மாமா என அணைத்து பெரியவர்களிடமும் முறைட்டவளுக்கு, சொல்லி வைத்தாற்போல் தாத்தா கூறிய பதிலையே திரும்ப திரும்ப சொல்லவும் நொந்து நூடுல்ஸ் ஆகி போனாள்..

கடைசியாக தோட்டத்தில் சோகமாக வந்து அமர்ந்த அம்முவை கண்ட மித்ரா...,

“இப்போ என்ன நடந்துடுசின்னு இப்படி இருக்க?..”

“நீயுமா சங்கு...”

“பின்ன என்ன சொல்றது.. உனக்கு எவ்ளோ அருமையான சான்ஸ் கிடைச்சிருக்குன்னு சந்தோஷ படாம இப்படி சோகமா இருக்கியே.. இப்போ நம்ம கொண்டாடப்பட வேண்டிய நேரம்..”

“என்ன உளறுற..”

“ஹேய் உனக்கு சூப்பர் சான்ஸ் கிடைச்சிருக்கு.. உனக்கு விக்ரமை பழி வாங்கனும்னு தோணலயா...”

“பழி வாங்கனுமா.. எதுக்கு?..”

“என் மக்கு அண்ணியே.. அவன் பண்ண காரியத்துக்கு அவனை டெய்லி டார்ச்சர் பண்ண வேண்டாம்.. அதுக்கு இந்த மேரேஜ் தான் பெஸ்ட்..”

“எப்படி..”

“நீ மட்டும் அவனோட wife ஆகிட்டனா, அப்புறம் உனக்கு லைசென்சே கிடச்ச மாதிரி.. உன்னை யாரும் கேள்வி கேக்க முடியாது.. அவனை நீ டெய்லி டார்ச்சர் பண்ணலாம்..”

“வேணாம் சங்கு.. marriageல எனக்கு இஷ்டமில்லை..”

அதுவரை காமெடியாக பேசிக்கொண்டிருந்த மித்ரா சீரியஸ்னஸ் உடன் பேச ஆரம்பித்தாள்..

“அப்போ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ண போற..”

“என்ன சங்கு, நீ கூட என்னை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுற..”

“பின்னே என்ன பண்றது.. எப்படியும் நீ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ண போறதில்லை.. அவனும் பண்ண மாட்டான்.. வீட்டில் எல்லோரும் உங்க பேச்சை கேட்டு சரி மா னு சொல்லுவாங்கனு நினைச்சியா... எப்படி இருந்தாலும் நீ கல்யாணம் பண்ணியே ஆகணும்.. விருப்பம் இல்லாத ஒருத்தன் கூட வாழுறதுக்கு, நீ ஒரு காலத்தில் விரும்பின என் அண்ணாவை கல்யாணம் பண்றது பெஸ்ட்.. இப்போ உனக்கு கஷ்டமா தான் இருக்கும்.. first கல்யாணம் பண்ணு.. உனக்கு எப்போ அந்த லைப் பிடிக்குதோ அப்போ வாழ ஆரம்பி.. அதுவரை என் அண்ணனை ஏத்துக்க வேண்டாம்.. அவனுக்கு என்ன தண்டனை வேணாலும் கொடு.. ஆனா வெறுத்து ஒதுக்கிடாத.. நான் சொன்னதை நல்லா யோசி..” என கூறி விட்டு, அவளை யோசிக்க செய்து விட்டு சென்றாள் மித்ரா.. அம்மு தான் குழப்பத்தில் இருந்தாள்...

தொடரும்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.