(Reading time: 15 - 30 minutes)

“தப்பு பண்ணாத மனுஷன் உலகத்திலே இல்லடா கண்ணா.. அமிர்தா சீக்கிரம் உன்னை புரிந்துக்கிட்டு உன்னை ஏத்துக்குவா.. cheerup man.. இப்படி இருந்தா எப்படி.. அவ மனசை நீ மாத்த முடியும்?.. நீ அவள் மனசை மறுபடியும் வென்றாகனும்.. போ.. ட்ரை இட் மேன்..”

“சரி வருமா அத்தை.. அவ மனசு இன்னும் காயமாகிடுச்சினா?..”

“அதெல்லாம் ஆகாது.. எப்படி இருந்தாலும் 3 மாசத்தில் உங்களுக்கு மேரேஜ்.. அதுக்குள்ளே சரி பண்ணிடு.. எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்கு, நான் கிளம்பறேன்..” என்றவர் நேராக தன் மாமனார் அறைக்கு சென்றார்..

வழியில் வாசுதேவனை கண்டவருக்கு அவரிடம் பேசியதில் இருவரும் ஒரே விஷயத்தை பேசத்தான் செல்கிறோம் என்று நிம்மதி அடைந்தனர்..

ஆறுமுகவேலு தன் மனைவி வள்ளிநாயகியிடம் சங்கர ஐயா கூறியதை பற்றி விவாதித்து கொண்டிருந்தார்.. அங்கு தன் மருமகன் வாசு, மருமகள் நந்தினி இருவரும் ஒன்றாக வருவதை கண்டவர்,

“உள்ளே வாங்க வருங்கால சம்மந்திங்களா..”

“அதை பத்தி தான் நாங்களும் பேசலாம்னு வந்தோம் மாமா..” என கூறிய வாசுதேவன் அம்மு விக்கிக்கு இடையே இருந்த பழக்கத்தை மேலோட்டமாய் சொன்னவர், மறந்தும் அவர்களின் ஊடலை விளக்காமல் மெல்லிதாய் கோடிட்டு காண்பித்தார்..

“அவங்க கோபம் தீரனும்னா கல்யாணத்துலதான் தீரும்.. பிரச்னையை அவங்க ஒன்ன இருந்து தான் தீர்க்கணும், அதுக்கு இந்த திருமணம் அவசியம்.. அம்மு கண்டிப்பா ஒத்துக்க மாட்டா.. அதனால் சங்கர ஐயா சொன்ன மாதிரி நாம் தான் ஏதாவது பண்ணி அவங்க 2 பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்..னு நான் நினைக்கிறேன், தங்கச்சி நந்தினியின் விருப்பமும் நீங்க என்ன நினைக்கறீங்க மாமா.. இது சரி வருமா?..” என பணிவுடன் கேட்கும் மருமகனை கண்டு புன்னகைத்தவர்,

“நீங்க சொல்றதும் சரி தான் மாப்பிள்ளை.. சங்கர ஐயாகிட்ட பேசி நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் நாள் குறிக்கிறேன்..” என மருமக பிள்ளைகளை பார்த்து கூறியவர், “சரியா வள்ளி..” என மனைவியிடமும் அனுமதி கேட்டு முடித்தார்...

“நான் என்னங்க சொல்ல போறேன்.. எனக்கு என் பேரன் பேத்தி மகிழ்ச்சியா இருந்தா போதும்.. அமிர்தா வேற வீட்டுக்கு போனா தான் நான் கவலை படனும்.. 20 வருடம் கழிச்சு நம்மோடு வந்து சேர்ந்துருக்கா.. சேர்ந்த உடனே கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு அனுப்புற மாதிரி இருந்தா நான் கல்யாணத்துக்கு இன்னும் 2 வருடம் போகட்டும்னு சொல்லிருப்பேன்... ஆனா அப்படியில்லாம, திருமணத்துக்கு பிறகு இங்கயே அவ இருக்கும் போது எல்லோருக்கும் சந்தோசம் தானே..” என தன் மகிழ்ச்சியை வள்ளி அவர்களிடம் தெரிவிக்க, அதை அனைவரும் ஆமோதித்தனர்..

ஆறுமுகவேலு உடனடியாக சங்கர ஐயாவுக்கு போன் போட்டு நாள் குறிக்க சொல்ல, அவரும் தேதி குறித்து கொடுத்தார்..

“அடுத்த வாரம் புதன் கிழமை நாள் நல்லாருக்காம்.. அன்னைக்கு நிச்சயம் வெச்சிக்க சொல்றாரு.. அப்புறம் இன்னையிலிருந்து மூணாவது மாசம் 12ஆம் தேதி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிருக்கறாரு.. என்ன சொல்றீங்க..” என அனைவரையும் பார்த்து கேட்டவர் அவர்கள் சரியென தலையசைத்ததும்,

“அப்போ வாங்க எல்லோர்கிட்டயும் சொல்லலாம்..” என அனைவரையும் வரவேற்பறைக்கு அழைத்து சென்றார்..

ஹாலில் அனைவரும் குழுமியிருந்தனர்.. அனைவரும் ஒருவித எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.. ஆறுமுகவேலு தான் ஆரம்பித்தார்..

“வரும்வாரம் புதன்கிழமையன்று விக்ரமுக்கும்...“ என நிறுத்தியவர் அம்முவை பார்த்தார்.. அவள் குழப்பத்தில் இருப்பது புரிந்தது.

“விக்ரமுக்கும் அமிர்ததரங்கிணிக்கும் நிச்சயதார்த்தம் நடக்க போகுது.. இன்னும் மூன்று மாதம் கழித்து திருமணம் முடிவாகி இருக்கு..” என அவர் கூறி முடித்ததும் அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்பரித்தனர்.. ஆனால் அம்முவோ வெகுவாய் அதிர்ந்தாள்..

“என்ன சொல்றீங்க தாத்தா.. என்னை கேட்காம எப்படி இப்படி இவ்வளவு பெரிய முடிவு எடுத்திங்க..” என அழுகையுடன் கூறினாள்.. அதை கண்டதும் விக்ரம் மனம் வலித்தது..

“அமிர்தா..” என கோபமுடன் நந்தினி அழைத்தவள், “என்ன பழக்கம் இது அமிர்தா.. பெரியவங்களை இப்படி தான் எதிர்த்து பேசுவியா...” என அவர் கோபமுடன் கூற,

“அம்மா.. நான் எதிர்தெல்லாம் பேசல.. ப்ளீஸ் மா.. எனக்கு இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம்..”

“கல்யாணம் வேண்டாமா.. இல்லை விக்ரம் வேண்டாமா?..”

“அம்மா.. ப்ளீஸ்..”

“கேட்டதுக்கு பதில்..”

“கல்யாணம் வேண்டாம்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.